All Stories

Text Widget

Ads300x250

Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts

எங்கள் அணி கிண்ணத்தை வெல்லாது! கிறிஸ் கெய்ல்

டுவென்டி- 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நட்பு சம்பியனான மேற்கிந்திய தீவுகள் தொடர்ந்தும் வெற்றியை தக்க வைப்பது கடினம் என அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.டுவென்டி-20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 16ம் திகதி முதல் ஏப்ரல் 9ம் திகதி வரை வங்கதேசத்தில் நடக்கவுள்ளது.
கடந்த 2012ல் இலங்கையில் நடந்த தொடரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மேற்கிந்திய தீவுவுகள் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இதன்பின் பங்கேற்ற 10 சர்வதேச டுவென்டி- 20 போட்டிகளில் ஐந்தில் மேற்கிந்திய தீவுகள் அணி தோற்றுள்ளது. இதில், கடந்த ஆண்டு பங்கேற்ற கடைசி 6 போட்டிகளில் ஐந்தில் தோல்வியடைந்தது.
இம்முறை மேற்கிந்திய தீவுகள், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா என வலுவான அணிகள் உள்ள இரண்டாவது பிரிவில் இடம் பெற்றுள்ளது.
இதுகுறித்து மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவிக்கையில்,
வங்கதேசத்தில் நடக்கும் டுவென்டி-20 உலக கிண்ண தொடரில் சாதித்து மீண்டும் கிண்ணத்தை கைப்பற்றினால் நன்றாகத்தான் இருக்கும்.
ஆனால் மற்ற அணி வீரர்களின் திறமையை பார்க்கும் போது கிண்ணத்தை தக்கவைப்பது மிகவும் கடினம் என்றே தெரிகிறது.
முதலில் முதல் சுற்றினை தாண்டுவது தான் முதல் லட்சியமாக இருக்க வேண்டும். இதில் சாதித்து விட்டால் பின் அரையிறுதி அடுத்து இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
அதேநேரம் சமீபத்திய டுவென்டி-20 போட்டிகளில் எங்கள் அணி சரியாக செயல்படவில்லை, பல போட்டிகளில் தோற்றுள்ளோம்.
இங்கிலாந்துக்கு எதிரான டுவென்டி-20 தொடரில் அசத்தி நாங்கள் அபாயகரமான அணி என்ற எண்ணத்தை மீண்டும் ஏற்படுத்த முடியும் என நம்புகிறேன் என கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

Posted at 6:13 PM |  by Anonymous

T20 தரவரிசை: முதலிடத்தில் இலங்கை, இரண்டாமிடத்தில் இந்தியா!

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
இதன்படி அணிகள் தர வரிசையில் இலங்கை அணி 129 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் தலா 123 புள்ளிகள் பெற்றாலும், சமீபத்தில் சர்வதேச 20 போட்டியில் விளையாடாத இந்திய அணி விகிதாச்சார புள்ளி அடிப்படையில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.
துடுப்பாட்ட தர வரிசையில் நியூசிலாந்து வீரர் பிரன்டன் மெக்கல்லம் முதலிடத்தில் தொடருகிறார். இந்திய வீரர்கள் விராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ்சிங் ஆகியோர் முறையே நான்காம் முதல் ஆறாம் இடங்களை பிடித்துள்ளனர்.
பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில்நரின் முதலிடத்தில் நீடிக்கிறார்.
சகலதுறை ஆட்டக்காரர் வரிசையில் முகமது ஹபீஸ் (பாகிஸ்தான்) முதலிடத்திலும், ஷேன் வாட்சன் (அவுஸ்திரேலியா) இரண்டாவது இடத்திலும், யுவராஜ்சிங் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

Posted at 6:12 PM |  by Anonymous

சொறிக்கல்முனை சாந்தகுரூஸ் விளையாட்டுக்கழக உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி 2013


சொறிக்கல்முனை சாந்தகுரூஸ் விளையாட்டுக்கழகம் நடாத்திய 2013 உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில்  இறுதிப்போட்டியில் திருக்கோவில் பிரதேச அனிகள் 1ம் 2ம் இடத்தை பெற்றன

மேற்படி கழகத்தால் வருடாவருடம் இடம்பெறும் உதைபந்தாட்ட சுற்றுப்பபோட்டியில் திருக்கோவிலில் பிரபல்யம் வாய்ந்த இரன்டு அனிகளான திருக்கோவில் உதயசூரின், விநாயகபுரம் மின்னொளி ஆகிய அனிகள் மோதின.இதில் ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் இரண்டு அனிகளும் தலா இரண்டு கோள்களை பெற்று சமநிலையில் முடிந்ததால் இறுதியில் தண்டனை உதைமூலம் திருக்கோவில் உதயசூரியன் அனியினர் வெற்றிபெற்றனர்.
மேற்படி சுற்றுப்பபோட்டிக்கு 20க்கு மேற்பட்ட அனிகள் பங்கு கொன்டன அத்தோட இறுதிபோட்டியில் வெற்றி பெற்ற அனிகளுக்கு பணப்பரிசும் வெற்றிக்கேடயங்களும் வழங்கப்பட்டன










Posted at 1:46 AM |  by Admin

முதல்தர வீராங்கனை செரீனா வில்லியம் அதிர்ச்சி தோல்வி

நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகளுக்கு கடும் சோதனையாக அமைந்துள்ளது. காயம் காரணமாக 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் வெளியேறியுள்ளனர்.
அதேசமயம் தரவரிசையில் முன்னிலை பெற்றுள்ள வீரர்கள் இளம் வீரர்களிடம் தோல்வியடைகின்றனர். 

அந்த வரிசையில் இப்போது நடப்பு சாம்பியனும், உலகின் முதல்நிலை வீராங்கனையுமான செரீனா வில்லியம்சும் இணைந்துள்ளார்.

நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் 4-ம் சுற்றில், 23ம் தரநிலையில் உள்ள ஜெர்மன் வீராங்கனை லிசிக்கியை எதிர்கொண்ட செரீனா, 2-6, 6-1, 4-6 என்ற செட்கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

வெற்றி பெற்ற லிசிக்கி, காலிறுதியில் எஸ்டோனியாவின் கனேப்பியை சந்திக்க உள்ளார். 

29 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக விம்பிள்டன் காலிறுதிக்கு முன்னேறும் முதல் இங்கிலாந்து வீராங்கனை என்ற பெருமையை லாரா லாப்சன் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது கனவை 4-ம் சுற்றில் சிதைத்த எஸ்டோனியா வீராங்கனை கையா கனேப்பி காலிறுதிக்குள் நுழைந்தார்.

Posted at 4:09 PM |  by Admin

35,000 அடி உயரத்தில் விமான கதவை திறக்க முயன்ற நட்சத்திர இலங்கை வீரர்

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவர் நடு வானில் பறக்கும் விமானத்தில் குழப்பம் விளைவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கழிவறை என்று நினைத்து 35000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவுகளை திறக்க முற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கிரிக்கெட் வீரர் அதிக மது போதையில் இருந்ததாக விமானப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட் வீரரின் நடவடிக்கையினால் ஏனைய பயணிகள் பீதியடைந்துள்ளனர். சக வீரர்கள் அவரைத் தடுக்க முயற்சித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

நான்கு மணித்தியாலங்களகாக குறித்த வீரர்கள் மது அருந்திக் கொண்டிருந்ததாகத் பயணியொருவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் எயார்வேஸ் விமான நிலையத்திற்கு சொந்தமான விமானத்தில் சென் லூசியாவிலிருந்து கெட்விக் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. நடு வானில் விமானக் கதவுகளை இழுத்து திறப்பது சாத்தியமில்லை என்று விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் தவறுதலாக இவ்வாறு கதவை திறக்க முயற்சித்ததாக குறித்த கிரிக்கெட் வீரர் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரரின் பெயர் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

Posted at 4:03 PM |  by Admin

ஆமிருக்கு சலுகை வழங்கிய ஐ.சி.சி

சூதாட்டத்தில் சிக்கி தடை செய்யப்பட்ட முகமது ஆமிருக்கு, சலுகைகள் வழங்க ஐ.சி.சி., முடிவு செய்தது.
லண்டன் லார்ட்ஸ் டெஸ்டில் ஸ்பாட் பிக்சிங் செய்து பிடிபட்ட பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், முகமது ஆசிப், முகமது ஆமிர் ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.,) முறையே 10, 7 மற்றும் 5 ஆண்டு தடை விதித்தது.

இதனிடையே, ஊழல் தடுப்பு பிரிவு விதிகளில் சில திருத்தங்கள் செய்ய ஐ.சி.சி., ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்தது.

இவர்கள் கொடுத்த அறிக்கையின் படி, முகமது ஆமிருக்கு, 21, சலுகை கிடைத்துள்ளது.

இதன்படி, உள்ளூர் மற்றும் தேசிய கிளப், தேசிய அணிகளில் விளையாட முடியாது என்றாலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி.,) சார்பில் வழங்கப்படும் பயிற்சி வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தற்போதைய நிலையில் 2015, செப்டம்பர் 3ல் ஆமிரின் தடை முடிகிறது. இவருக்கு ஐ.சி.சி., கூடுதல் சலுகை கொடுக்கும் பட்சத்தில் விரைவில் பாகிஸ்தான் அணிக்கு திரும்பலாம்.

Posted at 4:00 PM |  by Admin

முத்தரப்பு தொடரிலிருந்து டோனி நீக்கம்: அணித்தலைவரானார் கோஹ்லி

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள டோனி தலைமையிலான இந்திய அணி முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.

இப்போட்டியின் போது, டோனிக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக விக்கெட் காப்பாளர் பணியை தினேஷ் கார்த்திக்கிடம் ஒப்படைத்தார்.

இந்த தசைப்பிடிப்பு சரியாகாததால் எஞ்சிய போட்டிகளில் இருந்து டோனி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் அம்பதி ராயுடு அணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். விராட் கோஹ்லி இந்திய அணிக்கு தலைமை தாங்குவார்.

Posted at 3:57 PM |  by Admin

வர்ணனையாளராக புதிய அவதாரம் எடுக்கும் பொண்டிங்

ஆஸ்திரேலியாவின் வெற்றிக் தலைவராக விளங்கிய ரிக்கி பொண்டிங் தலைமையில் அந்த அணி இரண்டு முறை உலக கோப்பை வென்றது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

எதிர்வரும் அக்டோபர் மாதம் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடருக்கு பின், சகல கிரிக்கெட்டில் இருந்து விடைபெற உள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்று பொண்டிங்கை  வர்ணனையாளராக ஒப்பந்தம் செய்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடக்கவுள்ள "பிக் பாஷ் டுவென்டி-20' தொடரின் போது, தொலைக்காட்சி வர்ணனையாளராக, பொண்டிங் புதிய அவதாரம் எடுக்க உள்ளார்.

இதுகுறித்து பொண்டிங் கூறுகையில்,

"வர்ணனையாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் டிம்பர் மாதம் நடக்கவுள்ள "பிக் பாஷ்' தொடருக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்,'' என்றார்.

Posted at 3:37 PM |  by Admin

2017இல் சம்பியன்ஸ் கிண்ணத்திற்குப் பதில் டெஸ்ட் சம்பியன்ஷிப்

2017ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் சம்பியன்களைத் தெரிவு செய்வதற்கான டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் இடம்பெறவுள்ளதாக சர்வதேசக் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்குப் பதிலாகவே டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் இடம்பெறவுள்ளது.

50 ஓவர் போட்டிகளுக்கான சம்பியன்களைத் தெரிவதற்காக உலகக் கிண்ணப் போட்டிகளும், டுவென்டி டுவென்டி சம்பியன்களைத் தெரிவதற்காக உலக டுவென்டி டுவென்டி தொடரும் ஏற்கனவே காணப்பட்டிருந்த நிலையில், சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் நோக்கமற்றதாகக் காணப்பட்டதன் காரணமாக அத்தொடர் நீக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, டெஸ்ட் சம்பியன்களைத் தெரிவதற்காக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள இத்தொடர் இங்கிலாந்தில் இடம்பெறவுள்ளது.

அதைத் தவிர, இதுவரை காலமும் 2 வருடங்களுக்கொரு முறை இடம்பெற்று வந்த உலக டுவென்டி டுவென்டி தொடர் 2016ஆம் ஆண்டு முதல் 4 வருடங்களுக்கொரு முறை இடம்பெறவுள்ளது.

Posted at 3:36 PM |  by Admin

100 மீற்றர் ஒட்டத்தில் உசைன் போல்ட் வெற்றி

ஜமைக்கன் சாம்பியன் ஷிப் மெய்வல்லுனர் போட்டிகளில் 100 மீற்றர் ஒட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான உசைன் போல்ட் வெற்றிபெற்றுள்ளார்.
இதன்மூலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு அவர் தகுதி பெற்றுள்ளார்.
கிஸ்டனில் நடைபெற்ற இந்த போட்டியின் தூரத்தை 9.94 செக்கன்களில் அவர் நிறைவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் சக வீரரான கெமார் பெய்லி கோல் இரண்டாம் இடத்தையும், டைசன் கே மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

Posted at 8:13 PM |  by Admin

கார்ப்பந்தயத்தில் கலந்து கொண்ட டென்மார்க் வீரர் பலி (வீடியோ இணைப்பு)

பிரான்ஸில் நடைபெற்ற கார்ப்பந்தயப் போட்டியொன்றில் கலந்துகொண்ட டென்மார்க் வீரர் அலன் சிமோசன் உயிரிழந்துள்ளார்.
பிரான்ஸில் நேற்று 24 மணி நேர போட்டியான லேமான்ஸ் கார்ப்பந்தயம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட டென்மார்க் நாட்டு வீரர் அலன் சிமோசன் பந்தயம் தொடங்கிய பத்து நிமிடத்திற்குள் வந்த டெர்ட்ரே ரூஜ் வளைவில் உள்ள தடைகளில் மோதியதில் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
34 வயதான சிமோசன் தனது ஆஸ்டன் மார்ட்டின் காரில் ஏழாவது முறையாக இந்த பந்தயத்தில் கலந்து கொண்டார்.
இந்த விபத்துக்கான காரணம் ஆராயப்பட்டு வருகின்றது. கார் விபத்துக்குள்ளானதும் படுகாயமடைந்த சிமோசன் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால், அவருக்கு ஏற்பட்ட காயங்களினால் அவர் இறந்து விட்டதாகப் பின்னர் அறிவிக்கப்பட்டது.
விபத்து நடந்த இடத்தையும், தடைகளையும் சரிசெய்வதற்காக ஒரு மணி நேரம் போட்டி நிறுத்தப்பட்டது. அவை சரிசெய்த பின்னர் போட்டி மீண்டும் நடைபெற்றது.
1986ம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போட்டியில் ஜோ கார்ட்னர் என்ற வீரர் இறந்தார். அதன்பின், 1997ம் ஆண்டு இந்தப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் செபாஸ்டியன் என்ஜோல்ராஸ் என்ற வீரர் இறக்க நேரிட்டது.
அதன்பின் 15 வருடங்கள் கழித்து சிமோசன் உயிரிழக்க நேரிட்டது துக்கமயமானது என்று கூறிய மோட்டார் வாகன சங்கம் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்துள்ளது.

Posted at 8:11 PM |  by Admin

செரீனா- மரியாவுக்கு இடையே வெடித்தது சண்டை

டென்னிஸ் வீராங்கனைகளான செரீனா வில்லியம்சுக்கும், மரியா ஷரபோவாவுக்கும் இடையே கடுமையான சண்டை வெடித்துள்ளது.
விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், முன்னணி வீராங்கனைகளான மரியா ஷரபோவாவுக்கும், செரீனா வில்லியம்சுக்கும் இடையே வாய்ச்சண்டை வெடித்துள்ளது.
அமெரிக்காவில் 2 பள்ளிக்கூட மாணவர்களால், 16 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டது குறித்து செரீனா வில்லியம்ஸ் கருத்து தெரிவித்திருந்தார்.
இக்கருத்து மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியதால், மன்னிப்பு கேட்டார் செரீனா.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மரியா, செரீனாவின் கருத்து மிக மோசமானதாக இருந்தது, இதை நான் எதிர்பார்க்கவில்லை.
முதலில் தான சாதனைகள் குறித்து பேசட்டும், அடுத்தவர்கள் குறித்து பேசுவை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோன்று தனது ஆண் நண்பர் பற்றி கருத்து தெரிவித்ததற்கு, மற்றவர்களின் நண்பர்கள் குறித்து கருத்து சொல்ல செரீனாவுக்கு உரிமை இல்லை என்றும் கடுமையாக கண்டித்துள்ளார்.

Posted at 8:06 PM |  by Admin

சச்சின், டோணி மீது வழக்கு பதிவு

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சச்சின், டோணி மீது உத்தரகாண்ட் அரசின் சார்பில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு உணவு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் உத்தரகாண்ட்டில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் கடைகளில் தரக்கட்டுப்பாட்டு சோதனை நடத்தப்பட்டது.

சில காலாவதியான உணவுப் பொருட்களை இவர்கள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அந்த குறிப்பிட்ட உணவு பொருட்களின் விளம்பரங்களில் நடித்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பாலிவுட் நடிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Posted at 9:40 PM |  by Admin

பிசிசிஐ-யின் முடிவு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது: குந்த்ரா வேதனை

பிசிசிஐ-யின் நடவடிக்கையால் நான் பலிகடா ஆக்கப்பட்டேன் என ராஜஸ்தான் றொயல்ஸ் அணியின் உரிமையாளர் ராஜ் குந்த்ரா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற பிசிசிஐயின் அவசரக் கால கூட்டத்தில் கிரிக்கெட் நடவடிக்கைகளிலிருந்து குந்த்ரா அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதுகுறித்து குந்த்ரா கூறுகையில், பிசிசியின் இந்த முடிவு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது, அதிகார வர்க்கத்தினர் என் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. உண்மை நிலை அறியாமல் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது.
விளையாட்டின் மீதான எனது ஆர்வம் குறித்து அனைவருக்கும் தெரியும். இந்தியாவில் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.
ஆனால் என் மீதான குற்றச்சாட்டுகளால் நான் காயப்பட்டுள்ளேன். பிசிசிஐயின் தற்போதைய நடவடிக்கையால், விளையாட்டுத் துறையிலான எனது நேர்மை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
விளையாட்டில் சூதாட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று நினைத்திருந்தால் வெளிநாடுகளில் சட்டப் பூர்வமான முறையில் உள்ள இணையத்தின் வழியாக அதனை செய்திருக்க முடியும்.
ஆனால் ஊழல் தடுப்பு பாதுகாப்பு அமைப்பின் விதிப்படி ஐபிஎல் அணியின் உரிமையாளர் சூதாட்டத்தில் ஈடுபடக்கூடாது என்பதால் அவ்வாறு செய்யவில்லை. இதனை மக்கள் உணர வேண்டும், நீதியின் மீதும், இந்தியா மீதும் எனக்கு நம்பிக்கை உண்டு என்று தெரிவித்துள்ளார்.

Posted at 4:50 PM |  by Admin

ஸ்பாட்பிக்சிங்: ஓட்டல் அதிபர் விக்ரம் கைது

ஐ.பி.எல். பிக்சிங்கில் ஈடுபட்டதாக சென்னை நட்சத்திர ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலை நேற்று சிபிசிஐடி பொலிசார் கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்த நட்சத்திர ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலுக்கு ஐ.பி.எல். பிக்சிங் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தது.
இதனால் மே 30ம் திகதி சி.பி.சி.ஐ.டி பொலிசார் முன்னர் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பபட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.
அதே நேரத்தில் மும்பை பொலிஸ் முன்பு விக்ரம் அகர்வால் இதே புகாருக்காக ஆஜராகி இருந்தார். பின்னர் கடந்த 5ம் திகதி விக்ரம் அகர்வாலின் மனைவி வந்தனா சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தமது கணவர் ஆஜராவதற்கு ஒருவார கால அவகாசம் கோரினார்.
இதனால் விக்ரம் அகர்வால் 8ம் திகதி ஆஜராக சம்மன் அனுப்பினர். இந்நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் பொலிசார் முன்பு விக்ரம் அகர்வால் ஆஜரானார்.அவரிடம் 7 மணி நேரத்துக்கும் மேலாக பொலிசார் விசாரணை நடத்தினர்.
பின்னர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்துவதற்காக கைது செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

Posted at 4:45 PM |  by Admin

டோனியிடம் பி.சி.சி.ஐ விசாரணை

இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோனிக்கு சில நிறுவனங்களில் இருக்கும் பங்குகள் குறித்து அவரிடம் விசாரணை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் இடைக்கால தலைவர் ஜக்மோகன் டால்மியா கூறுகையில், டோனிக்கு எதிராக எழுந்துள்ள புகார்கள் குறித்து வாரியம் விசாரணை நடத்தும்.
சாம்பியன்ஸ் கிண்ண போட்டிகள் நடக்கையில் அணியை தொந்தரவு செய்ய விரும்பவில்லை என்றார்.
டோனி விவகாரம் தொடர்பாக வாரிய உறுப்பினர்களிடையே இரு வேறு கருத்துகள் நிலவி வருகின்றது.
ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடும் அனைத்து வீரர்களின் வங்கி கணக்குகள், வருமானம், பண பரிமாற்றம் உள்ளிட்ட விவரங்களை கேட்டு வாங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.
மேலும் ஐபிஎல் போட்டிகள் தொடங்க ஒரு மாதத்திற்கு முன்பு வீரர்கள் தங்களுடைய செல்போன் எண்களை வாரியத்திடம் அளிக்க வேண்டும்

Posted at 4:44 PM |  by Admin

சூதாட்ட விவகாரம்: கணவர் மீதான குற்றச்சாட்டை மறுக்கும் ஷில்பா ஷெட்டி

ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் 3 வீரர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து, சூதாட்டத்தில் தொடர்புடைய தரகர்கள், அவர்களை இயக்கிய வி.ஐ.பி.க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ் குந்த்ராவிடம் டெல்லி பொலிஸார் நேற்று விசாரணை நடத்தினார். அப்போது, ஐ.பி.எல். போட்டிக்கு பந்தயம் கட்டியதை ராஜ் குந்த்ரா ஒப்புக்கொண்டுள்ளார். 

இதுபற்றி டெல்லி கமிஷனர் நீரஜ் குமார் நிருபர்களிடம் கூறுகையில், 'ராஜ் குந்த்ரா தனது சொந்த அணி மீது தரகர்கள் மூலம் பந்தயம் கட்டியதை ஒப்புக்கொண்டிருக்கிறார். பந்தயம் கட்டியதால் பெருமளவு பணத்தை அவர் இழந்துள்ளதாகவும் அவர் கூறினார். 

அவர் தனது பார்ட்னர் உமேஷ் கோயங்கா மூலம் சூதாட்டத்தில் பணத்தை வைத்துள்ளார்' என்றார். கோயங்காவிடம் கடந்த சில நாட்களாக போலீசார் விசாரணை நடத்தியபோது, குந்த்ராவின் சூதாட்டத்தை அம்பலப்படுத்தியுள்ளார். ஆனால், இந்த குற்றச்சாட்டை குந்த்ராவின் மனைவியும், ராஜஸ்தான் அணியின் மற்றொரு உரிமையாளருமான ஷில்பா ஷெட்டி மறுத்துள்ளார். குந்த்ராவின் பெயரை அவர் தவறாக பயன்படுத்தியிருக்கிறார். 

எங்கள் அணியின் உரிமையாளர்கள் எந்த தவறும் செய்யவில்லை. இதில் உள்ள உண்மைகளைக் வெளிக்கொண்டு வருவதற்கு போலீசாரின் விசாரணைக்கு நாங்கள் உதவி செய்வோம் என்று ஷில்பா ஷெட்டி கூறினார். கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக ஐ.பி.எல். விளையாட்டுகளில் பந்தயம் கட்டிய விவரத்தை குந்த்ரா தெரிவித்திருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அணியில் இணைந்துள்ள எந்த நபராக இருந்தாலும் போட்டிக்கு பந்தயம் கட்டியது கண்டுபிடிக்கப்பட்டால், பி.சி.சி.ஐ. விதிமுறைகளின்படி, அவர் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். ஐ.பி.எல். உரிமையாளர் இந்த தவறை செய்தால், அந்த அணியை உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted at 6:43 PM |  by Admin

ஐபிஎல் சூதாட்டம்: ஷில்பா ஷெட்டியின் கணவரிடம் விசாரணை

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக ராஜஸ்தான் றொயல்ஸ் அணியின் உரிமையாளரும், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ராவிடம் டெல்லி பொலிசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
அவரது தொழில் கூட்டாளியும், நண்பருமான உமேஷ் கோயங்காவும் விசாரணைக்கு உள்ளானார்.

ராஜஸ்தான் றொயல் அணியின் பங்குகளில் 11.7 சதவீதம் தன்னிடம் உள்ளதாக பொலிஸ் விசாரணையில் ராஜ் குந்த்ரா தெரிவித்துள்ளார்.

சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதா அல்லது புகார் அளித்தவர் என்ற முறையில் விசாரணை நடைபெற்றதா என்பது குறித்து பொலிஸார் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.

ஐபிஎல் போட்டியின்போது ஆடுகளத்தின் தன்மை குறித்த விவரங்களை உமேஷ் கோயங்கா, தன்னிடம் கேட்டார் என்று ராஜஸ்தான் அணி வீரர் சித்தார்த் திரிவேதி சமீபத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted at 6:40 PM |  by Admin

ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தா அணிக்கு தொடர்பா?

கிரிக்கெட் சூதாட்ட வலையில் கொல்கத்தா அணியும் சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் வெடித்த சூதாட்ட புகார் தொடர்பாக பாலிவுட் நடிகர் விண்டூ சிங் கைது செய்யப்பட்டார்.

இவரிடம் நடத்திய விசாரணையில், சென்னை அணியின் குருநாத் மெய்யப்பன் பிடிபட்டார். தவிர கொல்கத்தா அணிக்கும் வலை விரித்துள்ளார்.

இது குறித்து மும்பை கிரைம் பிராஞ்ச் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கொல்கத்தா அணியின் தலைமை செயல் அதிகாரி வெங்கியை தொடர்பு கொண்டு போட்டிகள் குறித்த முக்கிய விஷயங்களை பெற முயன்றதாக விண்டூ குறிப்பிட்டார்.

ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தற்போதைக்கு வெங்கியிடம் விசாரணை நடத்தும் உத்தேசம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Posted at 2:53 PM |  by Admin

விஷ்ணு வேடமிட்டு விளம்பரம்: புதிய சர்ச்சையில் சிக்கினார் டோணி

விஷ்ணு போன்று வேடமணிந்து விளம்பரத்தில் நடித்த காரணத்திற்காக இந்திய அணியின் அணித்தலைவர் டோணிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவில் வெளியான வர்த்தகம் தொடர்பான ஒரு பத்திரிகையில் தோனி விஷ்ணு அவதாரமாக சி்த்தரித்து விளம்பரம் பிரசுரமாகியுள்ளது.

இதில் அவர் ஒப்பந்தம் செய்துள்ள பிரபல நிறுவனங்களின் தயாரிப்புக்கள் இவரது கையில் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக ஒரு ஷூ வும் கையில் பிடித்துள்ளார் இந்த தோனி விஷ்ணு.

இந்நிலையில் இந்த விளம்பரத்திற்கு எதிராக டோணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

நீதிமன்றத்தின் உத்தரவை பொறுத்து டோணிக்கு நெருக்கடி ஏற்படலாம்.

ஏற்கனவே சூதாட்டப்புகார் மற்றும் பிரபல நிறுவனங்களில் பங்குதாரர் என பிரச்னையில் சிக்கியிருக்கும் டோணிக்கு தற்போது விஷ்ணு விவகாரம் பிரச்னையை ஏற்படுத்தியிருக்கிறது.

Posted at 2:52 PM |  by Admin
Copyright © 2013 Batti Tamil. WP Theme-junkie converted by BloggerTheme9
Blogger template. Proudly Powered by Blogger.
back to top