பிரான்ஸில் நடைபெற்ற கார்ப்பந்தயப் போட்டியொன்றில் கலந்துகொண்ட டென்மார்க் வீரர் அலன் சிமோசன் உயிரிழந்துள்ளார்.
பிரான்ஸில் நேற்று 24 மணி நேர போட்டியான லேமான்ஸ் கார்ப்பந்தயம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட டென்மார்க் நாட்டு வீரர் அலன் சிமோசன் பந்தயம்
தொடங்கிய பத்து நிமிடத்திற்குள் வந்த டெர்ட்ரே ரூஜ் வளைவில் உள்ள தடைகளில்
மோதியதில் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
34 வயதான சிமோசன் தனது ஆஸ்டன் மார்ட்டின் காரில் ஏழாவது முறையாக இந்த பந்தயத்தில் கலந்து கொண்டார்.
இந்த விபத்துக்கான காரணம் ஆராயப்பட்டு வருகின்றது. கார்
விபத்துக்குள்ளானதும் படுகாயமடைந்த சிமோசன் அருகில் இருந்த மருத்துவமனைக்கு
அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால், அவருக்கு ஏற்பட்ட காயங்களினால் அவர் இறந்து விட்டதாகப் பின்னர் அறிவிக்கப்பட்டது.
விபத்து நடந்த இடத்தையும், தடைகளையும் சரிசெய்வதற்காக ஒரு மணி நேரம்
போட்டி நிறுத்தப்பட்டது. அவை சரிசெய்த பின்னர் போட்டி மீண்டும் நடைபெற்றது.
1986ம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போட்டியில் ஜோ கார்ட்னர் என்ற வீரர்
இறந்தார். அதன்பின், 1997ம் ஆண்டு இந்தப் போட்டிக்கான தகுதிச் சுற்றில்
செபாஸ்டியன் என்ஜோல்ராஸ் என்ற வீரர் இறக்க நேரிட்டது.
அதன்பின் 15 வருடங்கள் கழித்து சிமோசன் உயிரிழக்க நேரிட்டது
துக்கமயமானது என்று கூறிய மோட்டார் வாகன சங்கம் அவரது குடும்பத்தினருக்கு
ஆறுதலைத் தெரிவித்துள்ளது.