விஷ்ணு போன்று வேடமணிந்து விளம்பரத்தில் நடித்த காரணத்திற்காக இந்திய அணியின் அணித்தலைவர் டோணிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவில் வெளியான வர்த்தகம் தொடர்பான ஒரு பத்திரிகையில் தோனி விஷ்ணு அவதாரமாக சி்த்தரித்து விளம்பரம் பிரசுரமாகியுள்ளது.
இதில் அவர் ஒப்பந்தம் செய்துள்ள பிரபல நிறுவனங்களின் தயாரிப்புக்கள் இவரது கையில் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக ஒரு ஷூ வும் கையில் பிடித்துள்ளார் இந்த தோனி விஷ்ணு.
இந்நிலையில் இந்த விளம்பரத்திற்கு எதிராக டோணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
நீதிமன்றத்தின் உத்தரவை பொறுத்து டோணிக்கு நெருக்கடி ஏற்படலாம்.
ஏற்கனவே சூதாட்டப்புகார் மற்றும் பிரபல நிறுவனங்களில் பங்குதாரர் என பிரச்னையில் சிக்கியிருக்கும் டோணிக்கு தற்போது விஷ்ணு விவகாரம் பிரச்னையை ஏற்படுத்தியிருக்கிறது.