
சென்னையைச் சேர்ந்த நட்சத்திர ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலுக்கு ஐ.பி.எல். பிக்சிங் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தது.
இதனால் மே 30ம் திகதி சி.பி.சி.ஐ.டி பொலிசார் முன்னர் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பபட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.
அதே நேரத்தில் மும்பை பொலிஸ் முன்பு விக்ரம் அகர்வால் இதே புகாருக்காக ஆஜராகி இருந்தார். பின்னர் கடந்த 5ம் திகதி விக்ரம் அகர்வாலின் மனைவி வந்தனா சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தமது கணவர் ஆஜராவதற்கு ஒருவார கால அவகாசம் கோரினார்.
இதனால் விக்ரம் அகர்வால் 8ம் திகதி ஆஜராக சம்மன் அனுப்பினர். இந்நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் பொலிசார் முன்பு விக்ரம் அகர்வால் ஆஜரானார்.அவரிடம் 7 மணி நேரத்துக்கும் மேலாக பொலிசார் விசாரணை நடத்தினர்.
பின்னர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்துவதற்காக கைது செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.