சூதாட்டத்தில் சிக்கி தடை செய்யப்பட்ட முகமது ஆமிருக்கு, சலுகைகள் வழங்க ஐ.சி.சி., முடிவு செய்தது.
லண்டன் லார்ட்ஸ் டெஸ்டில் ஸ்பாட் பிக்சிங் செய்து பிடிபட்ட பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், முகமது ஆசிப், முகமது ஆமிர் ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.,) முறையே 10, 7 மற்றும் 5 ஆண்டு தடை விதித்தது.
இதனிடையே, ஊழல் தடுப்பு பிரிவு விதிகளில் சில திருத்தங்கள் செய்ய ஐ.சி.சி., ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்தது.
இவர்கள் கொடுத்த அறிக்கையின் படி, முகமது ஆமிருக்கு, 21, சலுகை கிடைத்துள்ளது.
இதன்படி, உள்ளூர் மற்றும் தேசிய கிளப், தேசிய அணிகளில் விளையாட முடியாது என்றாலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி.,) சார்பில் வழங்கப்படும் பயிற்சி வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தற்போதைய நிலையில் 2015, செப்டம்பர் 3ல் ஆமிரின் தடை முடிகிறது. இவருக்கு ஐ.சி.சி., கூடுதல் சலுகை கொடுக்கும் பட்சத்தில் விரைவில் பாகிஸ்தான் அணிக்கு திரும்பலாம்.