
அதேசமயம் தரவரிசையில் முன்னிலை பெற்றுள்ள வீரர்கள் இளம் வீரர்களிடம் தோல்வியடைகின்றனர்.
அந்த வரிசையில் இப்போது நடப்பு சாம்பியனும், உலகின் முதல்நிலை வீராங்கனையுமான செரீனா வில்லியம்சும் இணைந்துள்ளார்.
நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் 4-ம் சுற்றில், 23ம் தரநிலையில் உள்ள ஜெர்மன் வீராங்கனை லிசிக்கியை எதிர்கொண்ட செரீனா, 2-6, 6-1, 4-6 என்ற செட்கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
வெற்றி பெற்ற லிசிக்கி, காலிறுதியில் எஸ்டோனியாவின் கனேப்பியை சந்திக்க உள்ளார்.
29 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக விம்பிள்டன் காலிறுதிக்கு முன்னேறும் முதல் இங்கிலாந்து வீராங்கனை என்ற பெருமையை லாரா லாப்சன் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது கனவை 4-ம் சுற்றில் சிதைத்த எஸ்டோனியா வீராங்கனை கையா கனேப்பி காலிறுதிக்குள் நுழைந்தார்.