டென்னிஸ் வீராங்கனைகளான செரீனா வில்லியம்சுக்கும், மரியா ஷரபோவாவுக்கும் இடையே கடுமையான சண்டை வெடித்துள்ளது.
விம்பிள்டன்
டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், முன்னணி
வீராங்கனைகளான மரியா ஷரபோவாவுக்கும், செரீனா வில்லியம்சுக்கும் இடையே
வாய்ச்சண்டை வெடித்துள்ளது.
அமெரிக்காவில் 2 பள்ளிக்கூட மாணவர்களால், 16 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டது குறித்து செரீனா வில்லியம்ஸ் கருத்து தெரிவித்திருந்தார்.
இக்கருத்து மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியதால், மன்னிப்பு கேட்டார் செரீனா.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மரியா, செரீனாவின் கருத்து மிக மோசமானதாக இருந்தது, இதை நான் எதிர்பார்க்கவில்லை.
முதலில் தான சாதனைகள் குறித்து பேசட்டும், அடுத்தவர்கள் குறித்து பேசுவை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோன்று தனது ஆண் நண்பர் பற்றி கருத்து தெரிவித்ததற்கு, மற்றவர்களின்
நண்பர்கள் குறித்து கருத்து சொல்ல செரீனாவுக்கு உரிமை இல்லை என்றும்
கடுமையாக கண்டித்துள்ளார்.