
சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்குப் பதிலாகவே டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் இடம்பெறவுள்ளது.
50 ஓவர் போட்டிகளுக்கான சம்பியன்களைத் தெரிவதற்காக உலகக் கிண்ணப் போட்டிகளும், டுவென்டி டுவென்டி சம்பியன்களைத் தெரிவதற்காக உலக டுவென்டி டுவென்டி தொடரும் ஏற்கனவே காணப்பட்டிருந்த நிலையில், சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் நோக்கமற்றதாகக் காணப்பட்டதன் காரணமாக அத்தொடர் நீக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, டெஸ்ட் சம்பியன்களைத் தெரிவதற்காக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள இத்தொடர் இங்கிலாந்தில் இடம்பெறவுள்ளது.
அதைத் தவிர, இதுவரை காலமும் 2 வருடங்களுக்கொரு முறை இடம்பெற்று வந்த உலக டுவென்டி டுவென்டி தொடர் 2016ஆம் ஆண்டு முதல் 4 வருடங்களுக்கொரு முறை இடம்பெறவுள்ளது.