All Stories

Text Widget

Ads300x250

Showing posts with label headline news. Show all posts
Showing posts with label headline news. Show all posts

239 பயணிகளுடன் சென்ற விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது

239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்ற விமானம் நடுவழியில் கடலில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி பயணித்த இந்த விமானத்தில் 239 பயணிகள் இருந்ததாக விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விமானத்தை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக மலேசிய விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டு சிறு பிள்ளைகள் அடங்கலாக 227 பயணிகளும் 12 விமான பணியாளர்களும் இந்த விமானத்தில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோலாலம்பூரிலிருந்து புறப்பட்டு இரண்டு மணித்தியாலங்களில் இந்த விமானம் காணாமல் போயுள்ளது.
ஆசியாவில் மிகப்பாரிய விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான மலேசிய விமான சேவை, நாளாந்தம் 37 ஆயிரம் பயணிகள் வரை பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு செல்லும் வழியில் வானில் மாயமான விமானம் கடலில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
பயணிகளை ஏற்றிச்சென்ற போயிங் விமானம் வியட்நாமில் உள்ள தோ சு தீவில் ப விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் 227 பயணிகள் உட்பட 239 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சீனாவிலிருந்து 2 மீட்புக் கப்பல்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன, விமானத்தில் 154 சீனர்கள் உட்பட 13 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பயணித்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் சென்ற விமானம் மாயமாகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை எம்.எச் 370 விமானம் இழந்தது.
மாயமான விமானத்தை தேடும் பணியில் சர்வதேச விமான ஆணையமும் மும்முரமாக ஈடுபட்டது, விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களில் வியட்நாம் வான்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்தது.

Posted at 1:26 PM |  by Anonymous

இராணுவ ஆதிக்கத்தில் வடக்கு, சுதந்திரமான தேர்தலை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது,கூட்டமைப்பு.

நீதியானதும் நேர்மையானதுமான ஒரு தேர்தலை வடக்கில் எதிர்பார்க்கமுடியாதென தேர்தல் ஆணையாளரிடம்
தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத் தேர்தல் அடக்குமுறைகளும் மோசடிகளும் நிறைந்த தேர்தலாகவே அமையும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தல் ஆணையாளர் தலைமையில் இன்று யாழில் நடைபெற்ற கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்றின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப் பிரிய யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் வேட்பாளர்களுடன் கலந்துரையாடியுள்ளார். இக் கலந்துரையாடலில் சிவாஜிலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில்,

வல்வெட்டித்துறைச் சந்தியில் தமிழ் மக்களின் பூர்வீக நிலமான நாலு ஏக்கர் ஆதனப் பகுதியை சுவீகரித்து அவ்விடத்தில் பாரிய ஒரு படைத்தளத்தை இராணுவம் அமைத்துள்ளது.

இக் காணி உரிமையாளர்களிடம் வீடுகளைக் கையளிக்கும் ஒரு நிகழ்வு செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி பருத்தித்துறைப் பிரதேச சபையில் நடைபெறவுள்ளது. இதுவொரு தேர்தல் முறைகேடாகும். இதனை தேர்தல் ஆணையாளர் தடுக்க வேண்டும் எனக் கோரினார்.

அப்பொழுது குறுக்கிட்ட தேர்தல்கள் ஆணையாளர் அக்கூட்டத்தினை தன்னால் தடுக்க முடியாது எனவும் வேட்பாளர்கள் இக்கூட்டத்தில் தன்னால் தடுக்கமுடியும் எனத் தெரிவித்தார்.

Posted at 6:27 PM |  by Admin

சர்வதேச வல்லமையுடன் காணி, பொலிஸ் அதிகாரம் பெற்று ஆட்சி அமைப்போம் - சித்தார்த்தன் சூளுரை


இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாணசபைத் தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

நாம் அவரைச் சந்தித்தபோது எமக்கு தனது நம்பிக்கையை வெளியிட்டு வலுச் சேர்த்ததுடன் இத்தேர்தலில் நிச்சயம் உங்களுக்கே வெற்றியை மக்கள் பெற்றுத் தருவார்கள் எனத் தெரிவித்ததை நான் மறக்க முடியாதுள்ளது என புளொட் தலைவரும், வடக்கு மாகாணசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். 

வடக்கு மாகாண சபையின் தமிழ்; தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் சித்தார்த்தனின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் யாழ்ப்பாணம், நவாலியில் வலி. மேற்குப் பிரதேச சபை உறுப்பினர் தர்மலிங்கம் நடனேந்திரன் தலைமையில் நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்ட வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மேலும் கூறுகையில், 

வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் தான் வெற்றி வாகை சூடிப் பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சி அமைப்பார்கள். இத் தேர்தலில் அரசு சார்ந்த எந்தக் கட்சியும் வெல்ல முடியாது. அந்தளவிற்கு தமிழர்கள் ஒற்றுமையுடன் அணிதிரண்டு விட்டனர். 

கடந்த கால சாத்வீகப் போராட்டம், அதன் பின்னர் ஏற்பட்ட அழிவுகள், பல ஆயிரக்கணக்கான போராளிகளின் இழப்புகள், பல இலட்சக் கணக்கான மக்களின் உயிரிழப்புகள், இன்னும் மீள முடியாத சுமைக்குள் தள்ளப்பட்ட பொதுமக்கள், ஊனமுற்றோர்கள், விதவைகள், அநாதைகள், பிணியாளர்கள் என எமது சமூகம் நொந்துவிட்ட நிலையில் உள்ளது. 

இன்று 13ஆவது திருத்தத்தை இல்லாது ஒழிக்க வேண்டும் என்று, திவிநெகும என்ற அழிவுச் சட்டம், 19ஆவது சரத்து மாற்றம், வடக்கு கிழக்கு துண்டிப்பு, காணி பறிப்புச் சட்டம், இவ்வாறாக அரசும், அரசுடன் இணைந்தவர்களும் ஒத்து ஓதி தமிழ் இனத்தை அழிப்பதற்கு துடிக்கின்றனர். 

இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ச அண்மையில் கூறும்போது, விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவே நிச்சயம் வெல்லும் எனக் கூறியுள்ளார். தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பேசும்போதும், வடக்கு மாகாணசபையை தமிழ்த தேசியக் கூட்டமைப்பே வெல்லும் எனவும் நாம் எமது பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்போம். ஆனால் காணி, பொலிஸ் அதிகாரம் தர மாட்டேன் எனவும் சூளுரைத்துள்ளார். 

இதுதான் ஒரு முக்கியமான விடயமாகும். நாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெல்லுவோம் என்பதை மஹிந்த ராஜபக்சவே கூறிவிட்டார். நாம் காணி, பொலிஸ் அதிகாரம் தொடர்பாக பெரிதும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. 

அதனை நாம் சர்வதேசத்தின் வல்லமையுடன் பெற்று கூடுதலான அதிகாரங்களுடன் ஆட்சி அமைப்போம். இதற்குத் தமிழ் மக்கள் தமது பலத்தைக் காட்ட வேண்டும். இதற்காக அர்ப்பணித்து வெற்றியீட்ட முயல வேண்டும். தூங்கிக் கிடக்கின்ற ஒவ்வொரு தமிழ் மகனும் வாக்களிக்க முன்வர வேண்டும். 

ஒவ்வொரு வாக்காளரும் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். யார் உங்களை வாகனத்தில் ஏற்றிச் சென்றாலும் உங்களது எண்ணம், சிந்தனை யாவும் வீடு என்பதனை யாரும் மறந்து விடக்கூடாது. இவ் வரலாற்றுத் தேர்தலில் உங்களுக்கு வெற்றியென்றால் தமிழ்த் தேசியம் வட மாகாணத்தை ஆட்சி செய்யும் என வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

இக்கூட்டத்தில் வலி. தென்மேற்குப் பிரதேச சபை உப தவிசாளர் சண்முகம் சிவகுமார், வலி. தென்மேற்குப் பிரதேச சபை உறுப்பினர் சின்னத்துரை மகேந்திரன் ஆகியோரும் உரையாற்றினார்கள். 

Posted at 1:22 AM |  by Admin

யாழ். மாநகர சபை ஆட்சி காலம் ஒரு வருடத்திற்கு நீடிப்பு


யாழ். மாநகர சபையின் ஆட்சி காலம் மேலும் ஒரு வருடாகாலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு அறிவித்துள்ளதாக யாழ். மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார். 

யாழ். மாநகர சபையில் தனது அலுவலகத்தில் இன்று காலை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே யாழ் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா இதனை தெரிவித்தார். 

மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் 10ஆம் பிரிவின் 2ஆம் உப பிரிவின் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரின் அதிகாரத்தின் கீழ் இந்த கால நீடிப்புச் செய்யப்பட்டுள்ளது எனவும் இதனை உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தமக்கு தெரிவித்துள்ளதாகவும் இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் கடந்த யூலை 29ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

யாழ். மாநகர சபை உறுப்பினர்களின் பதவி காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையிலேயே எதிர்வரும் 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை ஒரு வருடாகாலத்திற்கு ஆட்சி காலம் நீடிக்கப்பட்டுள்ளது. 

Posted at 11:36 PM |  by Admin

ஆர்ப்பாட்டத்தால் ஒல்கோட் மாவத்தையின் ஒருவழிப் பாதைக்கு பூட்டு


மருதானை தொடக்கம் டெக்னிகல் சந்தி ஊடாக கோட்டை ஒல்கோட் மாவத்தையின் ஒருவழிப் பாதை மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

எதிர்கட்சிகளின் எதிர்ப்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பித்துள்ள ஆர்ப்பாட்டத்தை அடுத்தே வீதி மூடப்பட்டுள்ளது. 

வெலிவேரிய பகுதியில் மக்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டதை கண்டித்து எதிர்கட்சிகளின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்துள்ளது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேரணி செல்லக்கூடாதென கொழும்பு நீதவான் நீதிமன்றம் கட்டுப்பாடு உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Posted at 3:20 PM |  by Admin

கிராண்ட்பாஸ் மசூதி தாக்குதல்-செல்வம் எம்.பி கண்டனம்.

கொழும்பு கிராண்ட்பாஸ் மசூதி மீதான தாக்குதல் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனது வண்மையான கண்டனத்தை தொரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

- தற்போது முஸ்ஸிம் மக்களுக்கு எதிரான மத ரீதியில் துன்புறுத்தல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது கடந்த காலங்களில் தமிழ் மக்கள் மீது அரசின் ஒடுக்குமுறைகள் அதிகரித்து காணப்பட்டது..

தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்துடன் தொடர்ந்தும் போராடி தற்போது சர்வ தேச சமூகத்தின் கவனத்திற்கு இலங்கை தமிழ் மக்களின் நிலைப்பாட்டை எடுததுச் சென்றோம்.


இந்த நிலையில் முஸ்ஸிம் மக்களை அடக்கி ஒடுக்கும் தீவிரவாத செயல் தற்போது அதிகரித்துள்ளது. முஸ்ஸிம் மக்களின் வணக்கஸ்தளங்கள் மீது தாக்குதல் நடத்துதல் முஸ்ஸிம் பெண்கள் 'அபாயா' அணிவதை தடை செய்தல் போன்ற செயற்பாடுகளுக்கு குறித்த பேரினவாத சக்திகள் துனை போகின்றது.

அரசில் முஸ்ஸிம் அமைச்சர்கள் பலர் இருந்தும் இந்த பேரினவாத சக்திகளுக்கு எதிராக செயற்பட முடியாத அரசியல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இன்றைய கால கட்டத்தில் தமிழ்இமுஸ்ஸிம் மக்கள் ஒற்றுமையுடன் செயற்படும் தருனமாக அமைந்துள்ளது. தமிழ் முஸ்ஸிம் மக்களை அடிமைகலாக்கி சிங்கள பேரினவாதம் தலை தூக்க எத்தனிக்கின்றது.

இதன் ஒரு அங்கமாகவே கொழும்பு கிராண்ட்பாஸ் மசூதி மீதான தாக்குதல் அமைந்துள்ளது.

எவே அரசாங்கத்துடன் அங்கம் வகிக்கின்ற பல முஸ்ஸிம் அமைச்சர்கள்பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் இருக்கின்ற போதும் இந்த சம்பவத்திற்கு எதிராக செயற்பட முடியாதவாறு அடிமைகளாக்கப்பட்டுள்ளனர்.

எனவே இந்த இனவாத மதவாத செயற்படுகளுக்கு எதிராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமது வண்மையான கண்டணத்தை தெரிவித்துக்கொள்வதோடு தமிழ் முஸ்ஸிம் மக்கள் அடக்கப்படுவதற்கு எதிராக அணைத்து மக்களையும் ஒன்று திரட்டி எமது எதிர்ப்பை வெளிப்படுத்துவோம். என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted at 9:50 PM |  by Admin

பிக்குவின் சடலம் மீட்பு


79 வயது மதிக்கத்தக்க பிக்குவின் சடலமொன்று  குருநாகலில் இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. கலத்துட்டுவாகம பூரணரஜ மஹா விஹாரையின் பின்னாலிலிருந்தே இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கழுத்தில் வெட்டு காயங்கள் காணப்படுவதாக தெரிவித்த குருநாகல் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.

Posted at 9:55 PM |  by Admin

வடக்கு அதிவேகப் நெடுஞ்சாலை பணிகளைத் துரிதப்படுத்தவும்: ராஜபக்ஷ


வடக்கு அதிவேகப் நெடுஞ்சாலை பணிகளைத் துரித்தப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.

லீ ஜியான்ஹொங் தலைமையிலான சீன வர்த்தகர்கள் குழுவின் தூதுக்குழுவினருடனான சந்திப்பின் போதே வடக்கு அதிவேக நெடுஞ்சாலையின் பணிகளைத் துரிதப்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார். 

இந்த சந்திப்பு அலரிமாளிகையில் நேற்று நடைபெற்றது. இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த குழுவினருடனான சந்திப்பின் போதே வடக்கில் இடம்பெறுகின்ற அபிவிருத்திப் பணிகளைப்பற்றிக் குறிப்பிட்ட ஜனாதிபதி ராஜபக்ஷ, வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் மக்கள் இலகுவாகவும் துரிதமாகவும் பயணம்செய்வதற்கு அதிவேகப் பாதையின் முக்கியத்துவம ;பற்றி வலியுறுத்தினார். 

கொழும்புத் துறைமுகத்தை விரிவுபடுத்தும் கருத்திட்டத்தின் பங்காளர்களான சீன வர்த்தகர்கள் குழு கொழும்பு துறைமுகத்தின் தெற்கு இறங்குதுறையின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டது. 

'இந்த துறைமுகம் தெற்காசிய பிராந்தியத்தில் போட்டிமிகு துறைமுகமாக விளங்குகிறது' எனச் சுட்டிக்காட்டிய. லீ ஜியான்ஹொங் 'இது தெற்காசியாவுக்கு மட்டுமல்ல ஆசிய பிராந்தியத்துக்கே பயன்தரும்' எனத் தெரிவித்தார்;;.

தற்பொழுது சீன வர்த்தக குழு வடக்கு அதிவேகப் பாதை கருத்திட்டத்தின் சாத்தியக்கூற்று ஆய்வுகளை மேற்கொள்கின்ற அதேவேளையில் தொழில்நுட்ப அறிக்கைகளையும் நிதி அறிக்கைகளையும் தயாரிக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது. 

ஜியான்ஹொங்கின் கம்பனியும் இலங்கை துறைமுக அதிகாரசபையும் இணைந்து எவ்வளவு சிறப்பாக இத்துறைமுக கருத்திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது என்பது தொடர்பிலும் விபரித்தார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு அதிவேக நெடுஞ்சாலை பணிகளை கூடியளவு விரைவாக நிறைவேற்றும் ஆற்றல் சீன வர்த்தக குழு கம்பனிக்கு உண்டென்பதில் தனக்கு நம்பிக்கை இருக்கின்றது என சனாதிபதி ராஜபக்ஷ குறிப்பிட்டார். 

இலங்கைக்கான சீன தூதுவர் வு. ஜியான்ஹாவோ தலைமையிலான சீன வர்த்தகர்கள் குழுவின் உயர்மட்ட உத்தியோகத்தர்கள் பலர் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். 

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திரு. கருணாதிலக்க அமுனுகம, துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் திரு.ஆர்.டப்.ஆர். பேமசிறி, இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் கலாநிதி பிரியத் பீ. விக்கிரம ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Posted at 9:55 PM |  by Admin

வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் சடலமாக மீட்பு


வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேட்சைக் குழுவின் வேட்பாளர் ஒருவர்   யாழ்.சுன்னாகத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


சுயேட்சைக் குழுவில் போட்டியிடும் இராமச்சந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக இன்று சனிக்கிழமை கலை மீட்கப்பட்டுள்ளார்.


சுன்னாகம், ஸ்டேசன் வீதியில் சிறிய கோயில் ஒன்றில் இருந்தே இவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 


இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Posted at 1:21 PM |  by Admin

குவைத்தில் இன்னல்களை அனுபவித்த 28 இலங்கையர்கள் நாடு திரும்பினர்


வேலை வாய்ப்புத் தேடி குவைத் சென்று அங்கு பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து தூதரகத்தில் தஞ்சம் புகுந்த 28 இலங்கையர்கள் நாடு திரும்பினர். 

இன்று (03) அதிகாலை அவர்கள் நாடு திரும்பியதாக எமது கட்டுநாயக்க விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். 

பல வருடங்களாக தொழில் புரிந்த இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்பின் குவைத் இலங்கை தூதரகத்திற்குச் சென்று முறையிட்ட இவர்கள் தூதரக உதவியுடன் நாடு திரும்பியுள்ளனர். 

இன்று நாடு திரும்பியவர்களில் ஆண், பெண் இருபாலாரும் அடங்குகின்றனர்

Posted at 11:51 AM |  by Admin

திருகோணமலையில் 5 மாணவர் படுகொலை; விளக்கமறியல் நீடிப்பு


திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டில் ஐந்து மாணவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 12 அதிகாரிகளின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அவர்களை, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறுறே நீதவான் ஏ.எல்.அஸ்ஹர் இன்று வியாழக்கிழமை மீண்டும் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசேட  பிரேரணை மூலம் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான் ஏ.எல்.அஸ்ஹர் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கடந்த 4ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை  கடந்த 18ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

உதவி பொலிஸ் அதிகாரி உட்பட 11 பொலிஸ் விசேட அதிரடிப்படையினருமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்து காத்திருந்த 4 மாணவர்களும் மொறட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்றிருந்த மாணவர் ஒருவருமே 2006 ஆம் ஆண்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Posted at 6:41 PM |  by Admin

இலங்கை அகதிகள் கிறிஸ்மஸ் தீவுக்கு மாற்றம்


இலங்கை அகதிகள் 68 பேர் அண்மையில் கொக்கோஸ் தீவுக்குச் சென்றிருந்த நிலையில் தற்போது கிறிஸ்மஸ் தீவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

விசாரணை ஏற்பாடுகளின் மத்தியில் அவர்கள் அங்கு அனுப்பப்பட்டதாக அவுஸ்திரேலிய குடிவரத்துறை மற்றும் குடியுரிமை அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. 

இதனிடையே கடந்த வருடமும் தமது நாட்டு எல்லையை மீறி சட்டவிரோத குடியேறிகள் இலங்கையிலிருந்து வந்ததாக அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், தற்போது இலங்கையில் நிலவும் சமூக சூழ்நிலைகளுக்கு அமைவதாக அவர்கள் மீண்டும் நாடுதிரும்புவார்கள் என்றும் கூறப்படுகிறது. 

முறையான புகலிடம் கோரி எதேனும் ஒரு படகு சட்டவிரோதமாக அவுஸ்திரேலியவுக்கு வந்திருக்குமாயின் பப்புவா நிவ்கினிக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Posted at 9:50 PM |  by Admin

புதையல் மூலம் செல்வம் பெற முயற்சித்த இருவர் கைது


சாலியவெவ, புளியங்குளம் காட்டுப் பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்படும்போது சந்தேகநபர்களிடம் இருந்த புதையல் அகழ்விற்கு பயன்படும் உபகரணங்கள் சில பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

சந்தேகநபர்கள் சாலியவெவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். 

இவர்கள் இன்று (27) புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Posted at 8:51 PM |  by Admin

திருமண வைபவத்தில் மூக்கை கடித்த ஐ.தே.க உறுப்பினர்


ஐக்கிய தேசியக்கட்சியின் மஹர தொகுதி அமைப்பாளர் திருமண வைபவத்தில் வைத்து மூக்கை கடித்த சம்பவம் ஒன்று அத்தனகலையில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை ஒலிப்பரப்பு கூட்டுத்தாபனத்தைச்சேர்ந்த ஒருவரின் மூக்கையே கடித்துள்ளார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட எச்.பீ சுஜித் ரொசான் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், வைத்தியசாலைக்கு  சென்ற மஹர தொகுதி அமைப்பாளர் துஷார ஹேமச்சந்திர மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் சுஜித் ரொசானின் உறவினர்கள் மீது வைத்தியசாலை வளாகத்தில் வைத்து தாக்குதல் நடத்தியதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted at 3:27 PM |  by Admin

A-9 வீதியில் விபத்து: ஒருவர் பலி!


A-9 வீதியி சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் கணவன் உயிரிழந்துள்ளதுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார்.   குறித்த விபத்து இன்று காலை 8.30 அளவில் இடம்பெற்றுள்ளதுடன் முன்னால் சென்றுகொண்டிருந்த கார்மீது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளதாலே விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.  

மோட்டார் சைக்கிளில் பயணித்த கிளிநொச்சி திருநகர் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் விபத்தில் உயிரிழந்துள்ளதுடன் அவருடைய மனைவி படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.   சம்பவம் தொடர்பில் காரின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Posted at 9:20 PM |  by Admin

பிள்ளையானின் காமலீலைகளும் சிங்களத்திக்கு சோரம் போன Jvpnews இணையமும்

ஐயோ… ஐயோ…. எங்கள காப்பாத்துங்க சாமி… தமிழ் மக்களை ஏமாற்றி பிழைக்கும் பிணாமி இணையத்தளங்களில் இருந்து எங்களை காப்பாத்துக்கோ சாமி .. என தமிழர்கள் புலம்பும் காலம் வெகுவிரைவில் இல்லை என தோன்றுகிறது எமக்கு. நாங்கள்தான் உலகத்தமிழர்களின் “தேசிய இணையம்” என பீத்திக்கொள்ளும் இணையத்தளத்தினால் கட்டவிழ்த்து விடப்பட்ட இன்னுமொரு இணையத்தளம்தான் www.jvpnews.com என்ற இணையம். ஒரு கட்சியின் பெயரில் இணையத்தளத்தினை ஆரம்பித்து இல்லாத பொல்லாத பொய் புழுகு மூட்டைகளை அவ்வப்போது அவிழ்த்துவிடுகிறது இந்த இணையத்தளம். இதற்கு இவர்கள் நேற்று பிரசுரித்திருந்த ” பிள்ளையானின் காம லீலைகள்” என்ற செய்தி ஒன்றே போதுமானது.












பிள்ளையான் அரங்கேற்றிய காம லீலைகளும் விளக்கு பிடித்த “லங்கா ஶ்ரீ” யும்..!!

இதனை ஏன் செய்கிறீர்கள்..? எதற்காக ஒரு பொய்யான செய்தியை மக்கள் மத்தியில் பரப்புகிறீர்கள் என கேட்டும் குறித்த செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என தெரிந்து கொண்டும் நாம் நேற்றைய தினமே குறித்த தளத்தில் பிரசுரிக்கப்பட்ட பொய்யான செய்திக்கு எதிராக நாம் செய்தி பிரசுரித்திருந்தோம்… இதனை அறிந்து கொண்ட அந்த தில்லாலங்கடி இணையத்தளம் தான் பிரசுரித்து செய்தி பொய் என்பதை உணர்ந்து கொண்ட தன்மானத்தை இழக்கவிரும்பாது துள்ளிக்குதித்து மீண்டும் ஒரு மாபெரும் நாடகத்தினை அரங்கேற்றியுள்ளது.

இவர்கள் இணையத்தளம் பார்க்கும் அனைவரும் தம்மை போல “அடி முட்டாள்கள்” என பகல் கனவு காண்கிறார்கள். முதலில் முதலமைச்சர் பிள்ளையான் என செய்தி பிரசுரித்திருந்தமைக்கு இவர்கள் சொல்லும் நொண்டி சாக்கு என்ன தெரியுமா?? “முன்னால் முதல்வரா இன்னால் முதல்வரா என்பது எல்லாம் இன்று சிக்கலல்ல … என்பதுதான்.. அட கோமாளிகளே… அப்படியாயின் நீங்கள் இலங்கை அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க என்று செய்தி பிரசுரிப்பீர்களா…? “ஆடத்தெரியாதவன் மேடை கோணல் என்றானாம்” என்பது போல தாம் விட்ட தவறை ஏற்றுக்கொள்ளாது தட்டிக்கேட்பவர்களையும் முட்டாள் ஆக்க முனைகிறார்கள் இந்த பீத்தல் ஊடகம் நடாத்துபவர்கள்.
குறித்த புகைப்படங்கள் ஆபாச இணையத்தளத்தில் இருந்துதான் எடுக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொண்ட அவர்கள் நாம் ஆபாசதளங்களை நோட்டமிடுவதாக கூறுகிறார்கள். அப்படியாயின் ஆபாசத்தளத்தில் இருந்த அந்த புகைப்படத்தை நீங்கள் கண்ணை மூடிக்கொண்டா எடுத்தீர்கள்….. 

மேலும் இவர்கள் விடும் சுத்துமாத்து மிக முக்கியமானது. குறித்த புகைப்படம் சிங்கள பெண் ஒருவரால் முகப்புத்தகத்தில் பதிவேற்றப்பட்டதாம்.. அப்படியாயின் அந்த சிங்கள பெண் மீது இவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கையா…? நாமே தமிழீழத்தின் தேசிய இணையம் என்றும், சிங்களவர்களை பேரினவாதிகள் என்றும் தமிழர்களின் எதிரிகள் என்று சொல்லும் நீங்கள் எப்படி ஒரு சிங்கள பெண் வெறுமனே ஆதாரம் இல்லாமல் முகப்புத்தகத்தில் வெளியிட்ட புகைப்படத்தை ஒரு செய்தியாக பிரசுரிப்பீர்கள்…????????


“கேட்பவன் கேணயனா இருந்தா எருமைமாடு ஏரோப்பிளேன் ஓட்டுமாம்…”. நல்லாத்தாய்யா ஓட்டுறீங்க ஏறோ ப்ளேன். ஓட்டுங்க ஓட்டுங்க…….ஒரு கட்சி பெயரில் இணையத்தளம்ஆதாரம் இல்லாமல் செய்திஒரு கட்சித்தலைவரின் நற்பெயருக்கு கலங்கம்முன்னால் முதலமைச்சர் மீது வீண் பழி… இப்படி இன்னும் எத்தளை தில்லாலங்கடி திருகு தாளங்களை அரங்கேற்றப்போகிறீர்கள் உங்கள் தளத்தில்…? அட அதுக்குள்ள ஆதாரம் வேற இருக்காமில….அது பிள்ளையான்தான் என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது ..? நீங்கள் ஒரு பொறுப்பு வாய்ந்த ஊடகமாக இருந்தால் அந்த ஆதாரங்களை மக்கள் பார்வைக்கு வெளிவிடுங்கள் பார்க்கலாம்.... உங்களால் முடியாது என்பது எமக்கு மட்டும் அல்ல செய்தி வாசித்து அறிந்து கொண்ட அனைவருக்கும் தெளிவான உண்மை. உங்கள் கண்களை நீங்களே குத்த முற்பாதீர்கள்…. தயவு செய்து பொய்யான செய்திகளை பரப்பி எமது மக்களை இன்னும் இன்னும் பிரிவினவாதத்துக்குள் அழைத்துசெல்லாதீர்கள்.


நீங்கள் குறிப்பிட்ட பிள்ளையான் உண்மையில் தவறு செய்திருப்பாராயின் அதனை தட்டிக்கேட்பவர்கள் முதலில் நாமாகத்தான் இருப்போம். ஒரு ஊடகம் என்ற ரீதியில் எமக்கு யாவரும் சரி சமமே. அதற்காக வெறுமனே ஒரு தனி மனிதனை தாக்குவதும் அதன் மூலம் மக்களிடம் பொய்யான பரப்புரைகளை மேற்கொள்ளுவதும் ஒரு சிறந்த ஊடகத்திற்கு அழகல்ல என்பதே எமது கருத்து. தன்மானத்தை விட்டெறியுங்கள்… தவறை ஏற்றுக்கொள்ளுங்கள்… தமிழ் மானத்தை காப்பாற்றுங்கள்…… 


செய்த தவறை ஏற்றுக்கொண்டு செய்தி பிரசுரிக்கும் வரை நீங்கள் அவதானிக்கப்பட்டுக்கொண்டே இருப்பீர்கள் தோழர்களே………

“நாம் எவருக்கும் சார்பானவர்களும் அல்ல எவருக்கும் எதிரானவர்களும் அல்ல… அநீதி கண்டு உன் மனம் கொதித்தால் நீயும் நானும் நண்பர்களே….

இதுதான் அவர்கள் எங்கிருந்து எடுத்தார்கள் என்பதற்கு ஆதாரம். இது பிள்ளையானா? என்பதனை மக்களே முடிவு செய்யுங்கள். இப்படி பொய்களைக்கூறி வயிறு வளர்பதைவிட மனைவி பிள்ளைகளை கூட்டிக்கொடத்து வயிறு வளர்க்கலாம் JVP NEWS இணையத்தளம்

Posted at 1:36 AM |  by Admin

இலங்கைக்கு பிரித்தானியா ஆயுதங்களை வழங்கியுள்ளது


8 மில்லியன் பவுண் பெறுமதியான ஆயுதங்களை பிரித்தானியா இலங்கைக்கு வழங்கியுள்ளதாக ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ மற்றும் புலனாய்வு கருவிகளுக்காக 49 ஏற்றுமதி அனுமதி பத்திரங்களை வழங்கியுள்ளதாகவும் அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் துர்ப்பிரயோகப்பட்டியலில் உள்ள நாடுகளுக்கு 13.2 பில்லியன் பவுண் பெறுமதியான இராணுவ மற்றும் புலனாய்வு கருவிகளுக்கான 3000 ஏற்றுமதி அனுமதி பத்திரங்களை பிரத்தானியா வழங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் அடக்கு முறைக்கு பயன்படுத்தக்கூடிய அல்லது பிராந்தியத்தில் மற்றும் உள்நாட்டு மோதல்களை தூண்டக்கூடிய பொருட்களுக்கு ஏற்றுமதி அனுமதிப்பத்திரம் வழங்கப்போவதில்லை என கூறியிருந்த பிரித்தானிய அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடு, பல தரப்பினரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது.

இது பிரத்தானிய அரசாங்கத்தின் மனித உரிமை தொடர்பான இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

Posted at 1:44 AM |  by Admin

விக்னேஸ்வரனுக்கு வழி காட்ட வேண்டும்: மனோ


"இலங்கை தீவின் வடக்கிலும்  கிழக்கிலும் தெற்கிலும் கடந்த 65 வருட காலமாக அறவழி போராட்டங்களை முன்னெடுத்த தமிழ் கட்சிகளின் வரலாறும் ஆயுத போராட்டங்களை முன்னெடுத்த விடுதலை இயக்கங்களின் வரலாறும் வட மாகாண முதல்வர் வேட்பாளர் சி.வீ. விக்னேஸ்வரனுக்கு வழி காட்ட வேண்டும்.  இந்த இரண்டு வழித்தடங்களையும் எதிர்கால முதல்வர் சமமாக பாவித்து முன்னெடுக்க வாழ்த்துகின்றேன்' என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண  சபைக்கான முதல்வர் வேட்பாளராக ஓய்வு பெற்ற நீதியரசர் சி.வீ.விக்கினேஸ்வரன் ஏகமனதாக அறிவிக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

 'தமிழ் இனத்தின் நலனை முன்னிலை படுத்தியதன் மூலம் தமிழரசு கட்சியின் பொதுசெயலாளர் மாவை சேனாதிராசா தமிழர் ஐக்கிய வரலாற்றில் அரிய இடத்தை பெற்றுகொண்டுவிட்டார். அண்ணன் மாவை என்ற அடைமொழிக்கு மெய்யான அர்த்தத்தை ஏற்படுத்தி தந்துவிட்டேன்' என்பது எதிர்கால முதல்வருக்கு மாவை சேனாதிராசா தந்துள்ள செய்தியாகும்.

வடக்கு மாகாண சபையில் தமிழர் பெரும்பான்மை ஆட்சி ஏற்பட போகும் சாத்தியம் வட மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு மாத்திரம் உரித்தான விடயமல்ல.

நாடு முழுக்க மேற்கிலும் மலையகத்திலும் கிழக்கிலும் வாழும் ஒட்டுமொத்த தமிழ் இனத்துக்கும் நட்சத்திர நம்பிக்கையை தரும் எதிர்பார்ப்பாகும் என்பதை நமது எதிர்கால முதல்வர் புரிந்துகொண்டிருப்பார் என நாம் நம்புகின்றோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கில் பெறப்போகும் வெற்றி மிகப்பெரும் பாரிய அதிரடி வெற்றியாக இருக்க வேண்டும். 

அந்த வெற்றிக்கான பிரசார நடவடிக்கைகளில் கூட்டமைப்பு அழைப்பு விடுக்குமானால் நமது கட்சி ஜனநாயக மக்கள் முன்னணி கலந்துகொள்ளுவதற்கான சாத்தியம் இருக்கின்றது' என்றும் அவர் தெரிவித்தார்.

Posted at 11:30 PM |  by Admin

'இலங்கையில் 51 வீதமான அரசியல் வாதிகள் ஊழலில் ஈடுபடுகின்றனர்'


உலக சனத்தொகையில் நான்குபேரில் ஒருவர் தங்களுடைய தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காக இலஞ்சம் கொடுப்பதாக டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நெசனல் நிறுவனம் அறிவித்துள்ளது.

அண்மையில் நடத்திய புதிய ஆய்வின் போதே மேற்கண்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகிலுள்ள நாடுகளில் 107 நாடுகளைச்சேர்ந்த ஒரு இலட்சத்து 14 ஆயிரம் பேரிடம் மேற்கொண்ட ஆய்வுகளின் போதே மேற்கண்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் 86 வீதமான அரசியல் வாதிகளும் இலங்கையில் 51 வீதமான அரசியல் வாதிகளும் ஊழலில் ஈடுபடுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

கடந்தவருடம் பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்கியமையும் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் 62 வீதமும், இலங்கையில் 43 வீதமும் இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகளாவிய ரீதியில் இலஞ்ச மற்றும் ஊழல் அதிகரித்துள்ளது என்பது இந்த ஆய்வு சான்று பகருகின்றது என்றும் டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நெசனல் அறிவித்துள்ளது.

Posted at 7:39 AM |  by Admin

நண்பனை படுகொலை செய்து தூக்கிலிட்டவர் தலைமறைவு-

யாழ். இருபாலை பகுதியில் இளைஞர் ஒருவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்.இருபாலை தெற்கு ஆனந்தபுரம் வீதிப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய நாகலிங்கம் சதீஸ் பிரசாத் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த இளைஞன் நண்பர்களுடன் வீட்டில் வந்து உறங்கியதாகவும், நேற்றுக்காலை காலையில் எழுந்து பார்க்கும் போது தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதாக அயலவர்கள் கூறுகின்றனர்.

இந்த இளைஞனுடன் வீட்டில் தங்கிய நண்பர்கள் தலைமறைவாகி உள்ளதாகவும் இவ் இளைஞனின் உடலில் அடிகாயங்கள் காணப்படுவதாகவும் மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Posted at 6:05 PM |  by Admin
Copyright © 2013 Batti Tamil. WP Theme-junkie converted by BloggerTheme9
Blogger template. Proudly Powered by Blogger.
back to top