யாழ். மாநகர சபையின் ஆட்சி காலம் மேலும் ஒரு வருடாகாலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு அறிவித்துள்ளதாக யாழ். மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகர சபையில் தனது அலுவலகத்தில் இன்று காலை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே யாழ் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா இதனை தெரிவித்தார்.
மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் 10ஆம் பிரிவின் 2ஆம் உப பிரிவின் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரின் அதிகாரத்தின் கீழ் இந்த கால நீடிப்புச் செய்யப்பட்டுள்ளது எனவும் இதனை உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தமக்கு தெரிவித்துள்ளதாகவும் இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் கடந்த யூலை 29ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகர சபை உறுப்பினர்களின் பதவி காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையிலேயே எதிர்வரும் 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை ஒரு வருடாகாலத்திற்கு ஆட்சி காலம் நீடிக்கப்பட்டுள்ளது.