
லீ ஜியான்ஹொங் தலைமையிலான சீன வர்த்தகர்கள் குழுவின் தூதுக்குழுவினருடனான சந்திப்பின் போதே வடக்கு அதிவேக நெடுஞ்சாலையின் பணிகளைத் துரிதப்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த சந்திப்பு அலரிமாளிகையில் நேற்று நடைபெற்றது. இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்த குழுவினருடனான சந்திப்பின் போதே வடக்கில் இடம்பெறுகின்ற அபிவிருத்திப் பணிகளைப்பற்றிக் குறிப்பிட்ட ஜனாதிபதி ராஜபக்ஷ, வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் மக்கள் இலகுவாகவும் துரிதமாகவும் பயணம்செய்வதற்கு அதிவேகப் பாதையின் முக்கியத்துவம ;பற்றி வலியுறுத்தினார்.
கொழும்புத் துறைமுகத்தை விரிவுபடுத்தும் கருத்திட்டத்தின் பங்காளர்களான சீன வர்த்தகர்கள் குழு கொழும்பு துறைமுகத்தின் தெற்கு இறங்குதுறையின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டது.
'இந்த துறைமுகம் தெற்காசிய பிராந்தியத்தில் போட்டிமிகு துறைமுகமாக விளங்குகிறது' எனச் சுட்டிக்காட்டிய. லீ ஜியான்ஹொங் 'இது தெற்காசியாவுக்கு மட்டுமல்ல ஆசிய பிராந்தியத்துக்கே பயன்தரும்' எனத் தெரிவித்தார்;;.
தற்பொழுது சீன வர்த்தக குழு வடக்கு அதிவேகப் பாதை கருத்திட்டத்தின் சாத்தியக்கூற்று ஆய்வுகளை மேற்கொள்கின்ற அதேவேளையில் தொழில்நுட்ப அறிக்கைகளையும் நிதி அறிக்கைகளையும் தயாரிக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது.
ஜியான்ஹொங்கின் கம்பனியும் இலங்கை துறைமுக அதிகாரசபையும் இணைந்து எவ்வளவு சிறப்பாக இத்துறைமுக கருத்திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது என்பது தொடர்பிலும் விபரித்தார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு அதிவேக நெடுஞ்சாலை பணிகளை கூடியளவு விரைவாக நிறைவேற்றும் ஆற்றல் சீன வர்த்தக குழு கம்பனிக்கு உண்டென்பதில் தனக்கு நம்பிக்கை இருக்கின்றது என சனாதிபதி ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
இலங்கைக்கான சீன தூதுவர் வு. ஜியான்ஹாவோ தலைமையிலான சீன வர்த்தகர்கள் குழுவின் உயர்மட்ட உத்தியோகத்தர்கள் பலர் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திரு. கருணாதிலக்க அமுனுகம, துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் திரு.ஆர்.டப்.ஆர். பேமசிறி, இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் கலாநிதி பிரியத் பீ. விக்கிரம ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.