திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டில் ஐந்து மாணவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 12 அதிகாரிகளின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அவர்களை, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறுறே நீதவான் ஏ.எல்.அஸ்ஹர் இன்று வியாழக்கிழமை மீண்டும் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசேட பிரேரணை மூலம் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான் ஏ.எல்.அஸ்ஹர் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.
குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கடந்த 4ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை கடந்த 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
உதவி பொலிஸ் அதிகாரி உட்பட 11 பொலிஸ் விசேட அதிரடிப்படையினருமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்து காத்திருந்த 4 மாணவர்களும் மொறட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்றிருந்த மாணவர் ஒருவருமே 2006 ஆம் ஆண்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.