
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபைக்கான முதல்வர் வேட்பாளராக ஓய்வு பெற்ற நீதியரசர் சி.வீ.விக்கினேஸ்வரன் ஏகமனதாக அறிவிக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'தமிழ் இனத்தின் நலனை முன்னிலை படுத்தியதன் மூலம் தமிழரசு கட்சியின் பொதுசெயலாளர் மாவை சேனாதிராசா தமிழர் ஐக்கிய வரலாற்றில் அரிய இடத்தை பெற்றுகொண்டுவிட்டார். அண்ணன் மாவை என்ற அடைமொழிக்கு மெய்யான அர்த்தத்தை ஏற்படுத்தி தந்துவிட்டேன்' என்பது எதிர்கால முதல்வருக்கு மாவை சேனாதிராசா தந்துள்ள செய்தியாகும்.
வடக்கு மாகாண சபையில் தமிழர் பெரும்பான்மை ஆட்சி ஏற்பட போகும் சாத்தியம் வட மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு மாத்திரம் உரித்தான விடயமல்ல.
நாடு முழுக்க மேற்கிலும் மலையகத்திலும் கிழக்கிலும் வாழும் ஒட்டுமொத்த தமிழ் இனத்துக்கும் நட்சத்திர நம்பிக்கையை தரும் எதிர்பார்ப்பாகும் என்பதை நமது எதிர்கால முதல்வர் புரிந்துகொண்டிருப்பார் என நாம் நம்புகின்றோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கில் பெறப்போகும் வெற்றி மிகப்பெரும் பாரிய அதிரடி வெற்றியாக இருக்க வேண்டும்.
அந்த வெற்றிக்கான பிரசார நடவடிக்கைகளில் கூட்டமைப்பு அழைப்பு விடுக்குமானால் நமது கட்சி ஜனநாயக மக்கள் முன்னணி கலந்துகொள்ளுவதற்கான சாத்தியம் இருக்கின்றது' என்றும் அவர் தெரிவித்தார்.