Featured Articles
All Stories

Text Widget

Ads300x250

இங்கிலாந்தில் தமிழரின் கடையில் திருட வந்த முகமூடி திருடர்களுக்கு தர்ம அடி (வீடியோ இணைப்பு)

இங்கிலாந்தில் ரொக்கர் சாலையில் அமையப் பெற்றுள்ள தமிழர் ஒருவரின் கடையினுள் முகமூடி அணிந்த திருடர்கள் நுழைந்து, பணம் கேட்டு அச்சுறுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் கடந்த ஞாயிறு இரவு 8.15 மணியளவில் இடம்பெற்றது.
திருடர்கள் அவரை தொடர்ச்சியாக அச்சுறுத்தி அவருடைய பணப்பெட்டியினை திறந்து அதனுள் உள்ள பணத்தை தங்களின் பையினுள் இடுமாறு அச்சுறுத்தியுள்ளனர்.
அச்சமயம் சுதாரித்துக்கொண்ட கடை உரிமையாளரான ராசரத்தினம்
ராகுலன், அவர்களை நில துடைப்பான் பிடியினால் தாக்கியுள்ளார்.
இச்சம்பவம் சிசிடிவி கமெராவில் கருவியில் பதிவாகியுள்ளது. இக்காட்சிகளின் அடிப்படையிலேயே ஞாயிறு இரவு கடையினுள் உட்புகுந்த திருடர்களை அடையாளங்காணும் செயற்பாடுகள் நடைபெறுகின்றது.
ராசரத்தினம் ராகுலனின் கடை திறக்கப்பட்ட கடந்த மூன்று ஆண்டுகளில் இது இரண்டாவது திருட்டுச்சம்பவமாகும்.

Posted at 8:26 AM |  by Anonymous

விமானத்தை கண்டுபிடிக்க சூனியக்காரரின் உதவியை நாடியது மலேசியா

மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க சூனியக்காரரின் உதவியை நாடியுள்ளது மலேசியா.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் சென்ற விமானம் கடந்த 7ம் திகதி நள்ளிரவு காணாமல் போனது.
இதுவரையில் எவ்வித தடயங்களும் கிடைக்கப்பெறவில்லை, 239 பேர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.
இந்நிலையில் மலேசியா, விமானத்தை கண்டுபிடிக்க பிரபல சூனியக்காரரான இப்ராஹிம் மத் ஜின் என்பவரின் உதவியை நாடியுள்ளது.
அந்த நபர் விமானம் கிளம்பிய கோலாலம்பூர் விமான நிலையத்தில் பூஜை நடத்தியுள்ளார். அவரை இந்த பூஜையை செய்ய நாட்டின் முக்கிய தலைவர்கள் தான் அழைத்ததாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் ஒரு கையில் மீன் வலையையும், மறுகையில் மூங்கில் பைனாகுலரையும் வைத்து விமானத்தை தேடியுள்ளார்.
விமானம் பற்றி அந்த சூனியக்காரர் கூறுகையில், விமானம் தற்போதும் பறந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன், இல்லை என்றால் கடலில் விழுந்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மாயமான மலேசிய விமானம் ரேடார் தொடர்பை இழந்த பின்னும் நான்கு மணி நேரங்கள் தாழ்வானபகுதியில் வானில் பறந்துள்ளது என்று அமெரிக்க விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர் என்று அந்நாட்டு வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை தகவல் தெரிவித்துள்ளது.
மாயமான விமானத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களை கொண்டு இந்த சந்தேகம் எழுந்துள்ளது. விமான கன்ட்ரோல் அறைக்கு தன்னிச்சையாக தகவல்களை அனுப்பும் விமானத்தின் கருவியின் தகவல்களை கொண்டு இந்த சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால் விமானம் கடத்தி மறைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Posted at 8:22 AM |  by Anonymous

மாயமான விமானமா? செயற்கைகோள் படங்களை வெளியிட்டது சீனா

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு புறப்பட்ட விமானம், கடந்த 7ம் திகதி நள்ளிரவு மாயமானது.
இதில் பயணம் செய்த 239 நபர்களின் கதி என்ன ஆனது என்றே தெரியவில்லை, மாயமான விமானத்தை கண்டுபிடிக்க மலேசியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 12 நாடுகள் 39 விமானங்கள் மற்றும் 42 கப்பல்களை தேடும் பணியில் ஈடுபடுத்தியுள்ளன.
விமானம் வியட்நாம் வான் பகுதியில் தெற்கு சீன கடலில் விழுந்திருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது.
பின்னர் மலாக்கா கடல் பகுதியில், அந்த விமானம் கடைசியாக பறந்ததாக மலேசிய ராணுவம் தெரிவித்தது.
இதையடுத்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தியும், எதுவும் கண்டறியப்படவில்லை.
இந்நிலையில் வியட்நாமின் தெற்கு முனை மற்றும் மலேசியாவின் கிழக்கு பகுதிக்கு இடையில், கடந்த 9ம் திகதி காலையில் செயற்கைக்கோள் எடுத்த படங்களில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் 3 பொருட்கள் மிதப்பது தெரியவந்துள்ளது.
அது காணாமல் போன விமானத்தின் பாகங்களாக இருக்கும் என கருதப்படுகிறது. ஆயினும் இதுகுறித்து மலேசியா அரசு எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் அளிக்கவில்லை.

Posted at 8:21 AM |  by Anonymous

இருளில் மூழ்கிய வட அவுஸ்திரேலியா

வட அவுஸ்திரேலியாவிலுள்ள துணை மின்நிலையம் ஒன்றின் மின்னிணைப்பில் நேற்று அதிகாலை ஏற்பட்ட கோளாறினால், அந்தப் பகுதியின் பெரிய நகரமான டார்வினையும் அதனைச் சுற்றி 300 கி.மீ தொலைவு வரையிலுள்ள சிறு நகரங்களையும் செயலிழக்க வைத்தது.
இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இருந்த அரசாங்க அலுவலகங்கள் இயங்கவில்லை. பேருந்துப் போக்குவரத்து வலையமைப்பு பாதிக்கப்பட்டதால் பேருந்துகளும் இன்று செயல்படவில்லை. நீதிமன்றங்கள் மற்றும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. போக்குவரத்து சிக்னல்கள் அனைத்தும் இதில் பாதிக்கப்பட்டதால் வாகனங்களில் சென்றவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். சாலை சந்திப்புகளில் காவலர்கள் போக்குவரத்தைக் கண்காணித்தனர்.
நகரின் மருத்துவமனைகளும், விமான நிலையமும் ஜெனரேட்டர் உதவியுடன் இயங்கின. பொதுத் துறை ஊழியர்கள் அனைவரும் அவர்களுடைய அலுவலகம் அறிவிக்கும்படி வீட்டில் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இன்றைய நீட்டிக்கப்பட்ட செயலிழப்பினால் சிரமத்திற்கு உள்ளான பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்ட மின் மற்றும் நீர் வழங்குதுறை சமூகத்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய அதன் அவசர மேலாண்மை நெறிமுறைகளைத் திரட்டியுள்ளதாக குறிப்பிட்டது. 1,30,000 பேர் வசித்துவந்த பகுதியைப் பாதித்த இந்த மின்வெட்டு தெற்கே உள்ள கேத்தரின் நகரம் வரை பாதிப்பை ஏற்படுத்தியது.

கிட்டத்தட்ட 12 மணி நேரம் கழித்து இணைப்புகள் சரி செய்யப்பட்டு மின்சாரம் முறையாக வழங்கப்பட்டதாகத் தெரிவித்த வடக்கு மாகாண அரசு இதுகுறித்து ஒரு விசாரணை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Posted at 8:19 AM |  by Anonymous

மனைவி, மகள்களுக்காக ஷாப்பிங் செய்த ஒபாமா

அமெரிக்காவில் இந்த ஆண்டு மத்தியில் நடக்க உள்ள பாராளுமன்றத் தேர்தல்களுக்காக நிதி திரட்டும் கூட்டங்களில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ஒபாமா, நியூயார்க் நகருக்கு சென்றார்.
கடுமையான பணி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அங்குள்ள ஒரு கடைக்கு சென்று அவர் தனது மகள்கள் சஷா, மலியா, மனைவி மிச்செல்லிக்கு உடைகளை தேர்வு செய்து வாங்கினார். மகள்களுக்கு மேலாடை வாங்குகிறபோது, ‘வி’ வடிவ கழுத்து அமைப்பு கொண்ட உடை வாங்கினால் அது நழுவும் என கவலைப்பட்டார்.
அதற்காக வழக்கமான வடிவத்திலான கழுத்து அமைப்பு கொண்ட உடைகள் வாங்கினார். இதே போன்று மனைவிக்கு தான் உடைகள் தேர்வு செய்து வாங்குவது கடினம் என்று கூறினார். இருப்பினும் மனைவிக்கு அவர் காலுறைகள் வாங்கினார்.
அவர் மனைவி, மகள்களுக்காக உடைகள் வாங்கியதை பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள், உளவுபடையினர் வேடிக்கைப் பார்த்தனர். அப்போது ஒபாமா, “எனது உடை தேர்வு பெண்களுக்கு பிடிக்கும்” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

Posted at 8:17 AM |  by Anonymous

சூப்பர்ஸ்டார் ரஜினியின் கலக்கலான கோச்சடையான் டிரைலர்.....




Posted at 5:21 PM |  by Anonymous

பெண்ணின் முத்தத்திற்கு இம்புட்டு போட்டியா?.....




Posted at 3:36 PM |  by Anonymous

இந்த ரஷ்யக்காரங்க கலாட்டாவை அடிச்சிக்க ஆளே இல்லை....




Posted at 3:34 PM |  by Anonymous

வகுப்பறையில் மாணவி மீது காறி துப்பிய ஆசிரியை.... அவமானத்தால் தீக்குளித்த மாணவி!..




Posted at 3:31 PM |  by Anonymous

நடிகர் சசிகுமாரிடம் அடி வாங்கும் டிடி....





Posted at 6:21 PM |  by Anonymous

இன்று நிமிர்ந்தது நிமிர்ந்து நில்: எமோசனலான ஜெயம் ரவி

மார்ச் 7 ஆம் தேதி வெளியிட இருந்த நிமிர்ந்து நில் திரைப்படம் திடீர் என தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
ஜெயம்ரவி, அமலாபால், மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்திருந்த இப்படம் கடன் சிக்கலினால் ரிலீஸ் செய்யவேண்டிய தேதியில் ஸ்டாப் செய்யப்பட்டிருந்தது.
ஆரம்பக்காலத்திலிருந்தே நிதி சிக்கலினால் தவித்து வந்த படம் கடைசியாக மார்ச் 7 ஆம் தேதி உறுதிசெய்யப்பட்டிருந்தது.
பின் இப்படத்தின் தயாரிப்பாளர் கே.எஸ் சீனிவாசன் இதற்கு முன் எடுத்த படங்களில் 4 கோடிக்கும் மேல் கடன் வைத்திருந்ததால் சம்பந்தபட்டவர்கள் கடனை அடைத்துவிட்டு நிமிர்ந்து நில் படத்தை ரிலீஸ் செய்ய கூறியிருந்தார்கள்.
இரண்டு நாட்களுக்கு பிறகு இன்று மாலை பல பிரச்சனைகளை தாண்டி இப்படம் வெளியிடுவதாக இப்படத்தின் கதாநாயகன் ஜெயம் ரவி யிடம் இருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் ஜெயம் ரவி குறிப்பிட்டிருந்தது இப்படம் திடீர் நிறுத்தத்திற்கு நான் மட்டும் இல்லாமல் என் படக்குழுவினர்களும் பெரும் மன அழுத்ததிற்கு உள்ளாகி இருந்ததாகவும், தற்போது நிமிர்ந்து நில் படம் ரிலீஸ் செய்து விட்டதாகவும் இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.
இது மட்டுமல்லாமல் ரசிகர்களிடமும் தனது வருத்தத்தையும், நன்றியையும் நேரடியாக காணொளி மூலம் கூறியுள்ளார்
பல சிக்கலை கடந்து ரிலீஸ் செய்துள்ள இப்படம் எப்படி இருக்கும் என்ற பேரார்வம் எல்லோர் மனதிலும் தோன்றியுள்ளது. 
நிமிர்ந்து நிற்குமா?

Posted at 6:19 PM |  by Anonymous

மார்ச் 21ல் வெளியாகும் அஜித் படம்!

அஜித்தின் வீரம் திரைப்படம் தெலுங்கில் ‘வீரு டொக்கடே’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.
‘வீரம்’ ரிலீசான அதே நாளிலேயே தெலுங்கிலும் இப்படம் ரிலீசாகவிருந்தது.
ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இப்போது வருகிற 21ம் திகதி படம் ரிலீசாவதாக அறிவித்திருக்கிறார்கள்.
‘சிறுத்தை’ சிவா இயக்கியுள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடித்திருக்க, தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருக்கிறார்.
அஜித் நடிக்கும் படங்களுக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் இருப்பதாலும், அஜித்துடன் தெலுங்கு ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான தமன்னா, சிறுத்தை சிவா, தேவி ஸ்ரீபிரசாத் ஆகியோர் கூட்டணி அமைத்திருப்பதாலும் இப்படத்திற்கு அங்கு நல்ல வரவேற்பை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்தின் வீரம் திரைப்படம் தெலுங்கில் ‘வீரு டொக்கடே’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.
‘வீரம்’ ரிலீசான அதே நாளிலேயே தெலுங்கிலும் இப்படம் ரிலீசாகவிருந்தது.
ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இப்போது வருகிற 21ம் திகதி படம் ரிலீசாவதாக அறிவித்திருக்கிறார்கள்.
‘சிறுத்தை’ சிவா இயக்கியுள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடித்திருக்க, தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருக்கிறார்.
அஜித் நடிக்கும் படங்களுக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் இருப்பதாலும், அஜித்துடன் தெலுங்கு ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான தமன்னா, சிறுத்தை சிவா, தேவி ஸ்ரீபிரசாத் ஆகியோர் கூட்டணி அமைத்திருப்பதாலும் இப்படத்திற்கு அங்கு நல்ல வரவேற்பை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- See more at: http://www.cineulagam.com/tamil/newsta/all/20140308101994/#sthash.DLQJ8sM7.dpuf

Posted at 6:16 PM |  by Anonymous

எங்கள் அணி கிண்ணத்தை வெல்லாது! கிறிஸ் கெய்ல்

டுவென்டி- 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நட்பு சம்பியனான மேற்கிந்திய தீவுகள் தொடர்ந்தும் வெற்றியை தக்க வைப்பது கடினம் என அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.டுவென்டி-20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 16ம் திகதி முதல் ஏப்ரல் 9ம் திகதி வரை வங்கதேசத்தில் நடக்கவுள்ளது.
கடந்த 2012ல் இலங்கையில் நடந்த தொடரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மேற்கிந்திய தீவுவுகள் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இதன்பின் பங்கேற்ற 10 சர்வதேச டுவென்டி- 20 போட்டிகளில் ஐந்தில் மேற்கிந்திய தீவுகள் அணி தோற்றுள்ளது. இதில், கடந்த ஆண்டு பங்கேற்ற கடைசி 6 போட்டிகளில் ஐந்தில் தோல்வியடைந்தது.
இம்முறை மேற்கிந்திய தீவுகள், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா என வலுவான அணிகள் உள்ள இரண்டாவது பிரிவில் இடம் பெற்றுள்ளது.
இதுகுறித்து மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவிக்கையில்,
வங்கதேசத்தில் நடக்கும் டுவென்டி-20 உலக கிண்ண தொடரில் சாதித்து மீண்டும் கிண்ணத்தை கைப்பற்றினால் நன்றாகத்தான் இருக்கும்.
ஆனால் மற்ற அணி வீரர்களின் திறமையை பார்க்கும் போது கிண்ணத்தை தக்கவைப்பது மிகவும் கடினம் என்றே தெரிகிறது.
முதலில் முதல் சுற்றினை தாண்டுவது தான் முதல் லட்சியமாக இருக்க வேண்டும். இதில் சாதித்து விட்டால் பின் அரையிறுதி அடுத்து இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
அதேநேரம் சமீபத்திய டுவென்டி-20 போட்டிகளில் எங்கள் அணி சரியாக செயல்படவில்லை, பல போட்டிகளில் தோற்றுள்ளோம்.
இங்கிலாந்துக்கு எதிரான டுவென்டி-20 தொடரில் அசத்தி நாங்கள் அபாயகரமான அணி என்ற எண்ணத்தை மீண்டும் ஏற்படுத்த முடியும் என நம்புகிறேன் என கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

Posted at 6:13 PM |  by Anonymous

T20 தரவரிசை: முதலிடத்தில் இலங்கை, இரண்டாமிடத்தில் இந்தியா!

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
இதன்படி அணிகள் தர வரிசையில் இலங்கை அணி 129 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் தலா 123 புள்ளிகள் பெற்றாலும், சமீபத்தில் சர்வதேச 20 போட்டியில் விளையாடாத இந்திய அணி விகிதாச்சார புள்ளி அடிப்படையில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.
துடுப்பாட்ட தர வரிசையில் நியூசிலாந்து வீரர் பிரன்டன் மெக்கல்லம் முதலிடத்தில் தொடருகிறார். இந்திய வீரர்கள் விராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ்சிங் ஆகியோர் முறையே நான்காம் முதல் ஆறாம் இடங்களை பிடித்துள்ளனர்.
பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில்நரின் முதலிடத்தில் நீடிக்கிறார்.
சகலதுறை ஆட்டக்காரர் வரிசையில் முகமது ஹபீஸ் (பாகிஸ்தான்) முதலிடத்திலும், ஷேன் வாட்சன் (அவுஸ்திரேலியா) இரண்டாவது இடத்திலும், யுவராஜ்சிங் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

Posted at 6:12 PM |  by Anonymous

மகள் செய்த கலாட்டா

தவறு செய்த தன் மகளை தானே சிறையில் அடைத்தார் இங்கிலாந்து நாட்டின் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்.
ஒரு சமயம்
அவரது மகள் குடித்துவிட்டு லண்டன் நகரின் முக்கிய வீதி ஒன்றில் கலாட்டா செய்து கொண்டிருந்தாள்.
இவளை வேடிக்கை பார்க்க ஒரு கூட்டமே கூடிவிட்டது, இதனால் போக்குவரத்தில் பெரும் இடையூறு ஏற்பட்டது.
போக்குவரத்து பொலிசார் வந்து விசாரித்த போது, அவள் பிரதமரின் மகள் என்பது தெரியவந்தது.
இதனால் நடவடிக்கை எடுப்பதற்கு பயந்து, பிரதமரிடமே விடயத்தை சொல்லிவிட வேண்டுமென முடிவு செய்தனர்.
தயங்கி தயங்கி ஒரு வழியாக பிரதமரிடம் சொல்லி விட்டனர்.
உடனே கோபம் கொண்ட வின்ஸ்டன், டியர் ஆபிசர்..பிரெஞ்சு வீதியும், பிரிட்டிஷ் நீதியும் நேரானவை என்பதை உலகமே அறியும்.
இந்த உண்மைக்கு களங்கம் ஏற்படுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
உடனே அவளை கைது செய்து சிறையில் அடையுங்கள். அத்துடன் இந்த செய்தியை அனைத்து பத்திரிக்கைகளிலும் வெளிவரச் செய்யுங்கள் என்று தெரிவித்தாராம்.

Posted at 6:09 PM |  by Anonymous
Copyright © 2013 Batti Tamil. WP Theme-junkie converted by BloggerTheme9
Blogger template. Proudly Powered by Blogger.
back to top