ஜெயம்ரவி,
அமலாபால், மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்திருந்த
இப்படம் கடன் சிக்கலினால் ரிலீஸ் செய்யவேண்டிய தேதியில் ஸ்டாப்
செய்யப்பட்டிருந்தது.
ஆரம்பக்காலத்திலிருந்தே நிதி சிக்கலினால் தவித்து வந்த படம் கடைசியாக மார்ச் 7 ஆம் தேதி உறுதிசெய்யப்பட்டிருந்தது.
பின்
இப்படத்தின் தயாரிப்பாளர் கே.எஸ் சீனிவாசன் இதற்கு முன் எடுத்த படங்களில் 4
கோடிக்கும் மேல் கடன் வைத்திருந்ததால் சம்பந்தபட்டவர்கள் கடனை
அடைத்துவிட்டு நிமிர்ந்து நில் படத்தை ரிலீஸ் செய்ய கூறியிருந்தார்கள்.
இரண்டு
நாட்களுக்கு பிறகு இன்று மாலை பல பிரச்சனைகளை தாண்டி இப்படம் வெளியிடுவதாக
இப்படத்தின் கதாநாயகன் ஜெயம் ரவி யிடம் இருந்து அறிக்கை ஒன்று
வெளியிடப்பட்டுள்ளது.
அதில் ஜெயம் ரவி குறிப்பிட்டிருந்தது
இப்படம் திடீர் நிறுத்தத்திற்கு நான் மட்டும் இல்லாமல் என்
படக்குழுவினர்களும் பெரும் மன அழுத்ததிற்கு உள்ளாகி இருந்ததாகவும், தற்போது
நிமிர்ந்து நில் படம் ரிலீஸ் செய்து விட்டதாகவும் இதற்கு உறுதுணையாக
இருந்த அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.
இது மட்டுமல்லாமல் ரசிகர்களிடமும் தனது வருத்தத்தையும், நன்றியையும் நேரடியாக காணொளி மூலம் கூறியுள்ளார்
பல சிக்கலை கடந்து ரிலீஸ் செய்துள்ள இப்படம் எப்படி இருக்கும் என்ற பேரார்வம் எல்லோர் மனதிலும் தோன்றியுள்ளது.
நிமிர்ந்து நிற்குமா?