மீனா தெலுங்கில் ‘வாசவி வைபவம்’ என்ற படத்தில் அம்மன் வேடத்தில் நடித்தார். இப்படம் ஆந்திராவில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இதை தமிழில் ‘ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி’ என்ற பெயரில் டப்பிங் செய்து இம்மாதம் வெளியிடுகின்றனர்.
கயிலாயத்தில் சித்ரகண்டன் எனும் அரக்கன் வைசிய பெண்ணை முறை தவறி அடைய முயற்சிக்கிறான். அப்பெண் தன்னை காத்துகொள்ள பார்வதி தேவியிடம் தஞ்சம் அடைகிறாள். பார்வதிதேவி வைசிய பெண் வேடத்தில் இருக்க அரக்கன் தொட வருகிறான். உடனே பார்வதிதேவி ஆக்ரோஷமாகி மானிட பிறவியாய் பிறப்பாய் என அவனுக்கு சாபமிட்டு பூலோகம் அனுப்புகிறார்.
வைசிய பெண்ணும் பூலோகத்தில் அரசன் மகளாய் பிறக்கிறாள். பூலோகத்திலும் அவனை பின் தொடர்கிறான். இதனால் அவள் தீக்குளித்து பார்வதியின் சக்தியாக கலந்து ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி ஆவதே கதை.
சுமன், பிரியாஹாசன், சுகாசினி, கவிதா, ஸ்ரீதர், சாய்கிரண் போன்றோரும் நடித்துள்ளனர். விஜய் என்டர்டெயின்மென்ட் சார்பில் துரை தயாரித்துள்ளார். அர்ஜுன் இசையமைத்துள்ளார். பாடல், வசனத்தை ராஜேஷ் மலர்வண்ணன் எழுதியுள்ளார். உதயபாஸ்கர் இயக்கியுள்ளார்.