பிரான்சின் உலகப்புகழ் பெற்ற ஈபிள் டவரை நபர் ஒருவர் திருடுவது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின்
லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தை சேர்ந்த ஸாச் கிங் என்ற 26 வயது மிக்க நபர்
பலவிதமான மாயாஜாலங்களை புரிந்து வீடியோவை வெளியிட்டு வருகிறார்.
இவர் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான பிரான்சின் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை திருடுவது போன்ற வீடியோ வெளியிட்டுள்ளார்.
7 விநாடிகளை கொண்ட இந்த வீடியோவை கண்டு பலர் ஆச்சிரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் இவர் செய்வது கண்கட்டு வித்தைகள் என்றாலும், இவற்றை கண்டு ரசிக்கவே ஆயிரக்கணக்கானோர் இணையதளத்தில் திரண்டுள்ளனர்.
சாத்தியமற்ற விடயங்களையும் இயல்பாக மாற்றுவதே தனிச்சிறப்பாய் கொண்ட இவரது வீடியோக்கள் பல்லாயிரகணக்கானோரால் பார்வையிடப்பட்டுள்ளது.
மனிதர்கள் வாழவும் மற்றும் பூமியின் இயற்கையான செயற்கைகோளில் பணியாற்ற முடியும் என்பதை புரிந்து கொள்ள, 2015-ம் ஆண்டில், சந்திரனில் டர்னிப் மற்றும் துளசி போன்ற தாவரங்கள் மற்றும் காய்கறிகளை வளர்க்க நாசா திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க விண்வெளி நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிலவின் மேற்பரப்பில், ஒரு கமர்ஷியல் லூனார் லேண்டர் போர்டில் தாவரங்களை அனுப்பி வளர்க்க உள்ளோம் என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த முயற்சியை லூனார் பயிர் வளர்ச்சி வசிப்பிட அணி மூலம் இயக்கப்படுகிறது.
அவர்கள், காலநிலை கடுமையான சக்திகளுக்கெதிராக தாவரங்களை பாதுகாக்க கன்டெய்னர்களை வடிவமைத்து அதனை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். சந்திரனில் ஐந்து முதல் பத்து நாட்களுக்குட்பட்ட காலப்பகுதியில் தாவரங்கள் முளைப்பதற்காக ஒரு மிக எளிய அடைக்கப்பட்ட வளர்ச்சி அறை உருவாக்க நாசா திட்டமிட்டுள்ளது.
இந்த கன்டெய்னர் டர்னிப், துளசி மற்றும் அரபிடோப்சிஸ் வளர முயற்சிக்கும் என்றும் நாசா கூறியுள்ளது. அதாவது கன்டெய்னர்களில் இந்த தாவரங்களின் விதைகள் வைக்கப்பட்டு சந்திரனை அடைந்ததும், சிறிய அளவு நீர் அந்த விதைகளுக்கு அளிக்கப்படும், அந்த கன்டெய்னர்களில் இருக்கும் காற்று, விதைகள் 5 முதல் 10 நாட்கள் வளர போதுமானதாக இருக்குமாம்.
மேலும் தாவரங்கள் பற்றிய தகவல்களை கேமராக்கள், சென்சார்கள், மற்றும் மின்னணுவியல் ஆகியவை வழங்கும். சந்திரனில் விதைகளின் வளர்ச்சி எவ்வாறு உள்ளது என்பது குறிப்பிட்ட இடைவெளியில் புகைப்படம் எடுத்து, அதன் மூலம் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப் பட்டுள்ளது.
லண்டன் ஹீத்ரூ விமானநிலையத்திற்கு மேற்கே பெர்க்ஷைர் பகுதிக்கு அண்மிய பகுதியில் 34 ஆயிரம் அடி உயரத்தில் ஏ-320 ஏர்பஸ் பயணிகள் விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது.
அப்போது விமானத்தின் மேலே இடது புறமாக சில அடி தூரங்களில் ரக்பி பந்து வடிவில் ஒரு பறக்கும் தட்டு கடந்த சென்றுள்ளது. பின்னர் அது மின்னல் வேகத்தில் பைலட்டை நோக்கியும் வந்து சென்றுள்ளது.
உடனே இது குறித்து லண்டன் விமானக்கட்டுப்பாட்டு அறைக்கு, விமானி தகவல் தெரிவித்தார். இதையடுத்து பரபரப்படைந்த லண்டன் விமான நிர்வாகம் அதுகுறித்து ஆராய்ந்து வருகிறது.
எனினும் எந்த நவீன கண்காணிப்பு ரேடார் கருவிகளிலும் அந்த மர்ம பொருள் பற்றிய பதிவு தெரியவில்லை என்றும் டெலிகிராப் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.
தனக்குத்தானே தீமூட்டி 5 நிமிடங்களையும் 41 செக்கன்களையும் வெற்றிகரமாக நபர் ஒருவர் நிறைவுசெய்துள்ளார். இது கின்னஸ் உலக சாதனையாக கணிப்பிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜோர்ஜ் குலொனி என்ற 33 வயதுடைய நபரே இத்தகைய துனீகரமான சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
மனதில் அச்சத்தை ஏற்படுத்தும் இச்சாதனையானது அவுஸ்திரேலியாவின் ஆல்ஸ்பார்க் நகரில் புரியப்பட்டுள்ளது.
இவ்வாறான தீமூட்டல் சாதனையை புரிந்து ஏற்கனவே நிலைநாட்டப்பட்டிருந்த சாதனையை இவர் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ‘The Monuments Men’ என்ற திரைப்படத்தில் விசேட ஆடையணிந்து இத்தகைய தீமூட்டல் காட்சிகளில் இவர் ஏலவே நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நபரொருவர் அந்நாட்டிலுள்ள உலகப் புகழ்பெற்ற அல்ப்ஸ் மலைத்தொடரில் 1,200 அடி உயரத்தில் கம்பியில் நடந்து சாகஸம் செய்துள்ளார்.
முன்னாள் பொறியியலாளரான ஜுலியன் மில்லட் என்பவரே இந்த பதைபதைக்கும் சாகஸத்தை நிகழ்த்தியுள்ளார். இவர் அல்ப்ஸ் மலைத்தொடரின் மொன்ட் பிளாங் மலைக்குக் குறுக்காக 196 அடி தூரத்தை கேபிள் கார்களுக்கிடையில் 2 அங்குல கம்யிபில் நடந்துள்ளார்.
லெஸ் ஆர்க்ஸ், பெய்ஸெய்-வல்லன்ரை மற்றும் லா பிளக்னி ஆகிய பகுதிகளை வனொய்ஸ் எக்ஸ்பிரஸ் கேபிள் கார் மூலம் பரடிஸ்கி எனுமிடமாக ஒன்றிணைத்து 10 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டே இந்த சாகஸத்தை ஜுலியன் மேற்கொண்டுள்ளார். இதில் அவரது நண்பர் மெலட் என்பவரும் இணைந்துகொண்டுள்ளார்.
இவர்கள் இருவரும் இணைந்து உலகம் முழுவதும் அந்தரத்தில் மேற்கொண்ட சாகஸங்கள் தொடர்பில் ஐ பிலீவ் ஐ கேன் ப்ளை எனும் ஆவணப்படமொன்றினையும் தயாரித்துள்ளனராம்.
பின்கால்கள் கால்கள் இரண்டுடன் பிறந்த ஆடு ஒன்று மனிதர்களைப் போல நடக்கக் கற்றுக்கொண்டுள்ளது.
சீனாவின் ஷொஉகொஉ நகரின் லுயிஷெங் எனும் கிராமத்திலுள்ள இந்த கடந்த ஓகஸ்ட் மாதம் பிறந்துள்ளது.
பிறப்பிலேயே முன்னிரு கால்களும் இழந்த இந்த ஆடு தானாக இரட்டைக் கால்களுடன் மனிதர்களைப் போல நடக்க ஆரம்பித்துள்ளது.
இது குறித்து ஆட்டின் உரிமையாளரான லின் கூறுகையில், 'நான் எனது 60 வயதுகளில் உள்ளேன். ஆனால் எனது வாழ்நாளில் இது போன்றதொரு ஆட்டினைக் கண்டதில்லை. இந்த ஆடு விரைவில் இறந்துவிடும் என நினைத்தேன். எனவே எப்போது இது மரணிக்கும் என்று மட்டுமே பார்த்திருந்தேன்.
எவ்வாறெனினும் பிறந்து ஒரு மாதத்தின் பின்னர் இரட்டைக் கால்களுடன் நடக்க ஆரம்பித்து என்னை ஆச்சரிப்படுத்திவிட்டது இந்த ஆடு.' எனத் தெரிவித்துள்ளார்.
இரட்டைக் கால்களுடன் நடக்க ஆரம்பித்தவுடன் அப்பகுதி முழுவதும் பிரபல்யமாகியுள்ளது இந்த ஆடு. இதனையடுத்து இந்த ஆட்டில் ஆர்வம்கொண்ட 31 வயதான ஷியு வாங் சுமார் 10 ஆயிரம் ரூபாவுக்கு கொள்வனது செய்துள்ளார்.
தனது பல்கலைக்கழக ஆராய்ச்சிக்காக இவ்வாட்டினைப் பயன்படுத்தவுள்ளதாகவும் தனிமையிலுள்ள எனக்கு மனதளவில் இந்த ஆடு உற்சாகமளிப்பதாவும் வாங் தெரிவித்துள்ளார்
ஆஸ்திரேலியாவின் வடக்கு மெல்போர்னில் வாலிபர் ஒருவர் தனது காதலிக்காக வீட்டில் காத்திருந்தார். காதலிக்கு அதிர்ச்சி அளிக்குமாறு செய்ய வாஷிங் மெஷினுக்குள் நிர்வாணமாக ஒளிந்து கொண்டுள்ளார். பின்னர் அவரால் அங்கிருந்து வெளியே வரமுடியவில்லை. பலமாக சிக்கி கொண்டார். இதனை அடுத்து அந்நாட்டு தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து முகம் சுழித்தனர். பின்னர் எண்ணெய் உதவியுடன் வாலிபரை உயிருடன் வெளியே கொண்டு வந்தனர்.
விளையாட்டுக்காக வாஷிங் மெஷினுக்குள் சென்ற வாலிபர் பலமாக சிக்கி தவித்துள்ளார். தீயணைப்பு வீரர்களின் போராட்டத்தினால் 20 நிமிடங்கள் கழித்து மீட்கப்பட்டுள்ளார்.
கொன்னொர் ஜோன்சன் எனும் 6 வயதுச் சுட்டிச் சிறுவன் ஒருவன் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவைக் காப்பாற்ற மேற்கொண்டு வரும் முயற்சி சமீபத்தி ஊடகக் கவனம் பெற்று அனைவரையும் ஈர்த்துள்ளது.
3 வயது முதற்கொண்டே தான் ஒரு விண்வெளி வீரனாக வர வேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்த இச்சிறுவன் அப்படி என்ன பெரிதாக சாதித்து இந்தப் புகழைப் பெற்றுள்ளான் என சிந்திக்கிறீர்களா? மேற்கொண்டு வாசியுங்கள்..
சமீபத்தில் அமெரிக்க காங்கிரஸ் பொருளாதார நெருக்கடியால் நாசா விண்வெளி ஆய்வு நிலையத்தின் சில முக்கிய வருங்காலத் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டங்களை ரத்து செய்தது. இதை எப்படியோ கேள்விப்பட்ட இச்சிறுவன் இது வருங்காலத்தில் தான் ஒரு விஞ்ஞானியாக அல்லது விண்வெளி வீரனாக வரும் கனவையும் பாதிக்கக் கூடியது என்ற கோணத்தில் சிந்தித்ததால் பெற்றோரின் உதவியுடன் இவன் மேற்கொண்ட முயற்சி தான் ஊடகக் கவனம் பெற்றுள்ளது.
இது பற்றி இச்சிறுவனே இப்படிக் கூறியுள்ளான்.. 'எனது முழுத் திட்டமும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு இது குறித்து புகார் அளிக்கவுள்ளதுடன் எனது வங்கிக் கணக்கில் உள்ள 10.41 டாலர் முழுவதையும் நாசாவுக்காக அர்ப்பணிக்கவுள்ளேன்' இவ்வாறு யோசித்த இச்சிறுவனின் ஆர்வத்தைப் பாராட்டிய பெற்றோர் இந்த முயற்சிக்கும் மேலும் வலுச் சேர்க்கும் வண்ணம் இவ்வாறு அவனுக்கு வழிகாட்டியுள்ளனர். அதாவது அமெரிக்க அரச நிர்வாகம் மையம் கொண்டு இயங்கும் வெள்ளை மாளிகைக்கு தனது வேண்டுகோளை அங்கீகரிக்குமாறு சுமார் 100 000 கையெழுத்துக்களுடன் கூடிய மனுவை (Petition) கையளிப்பது என்று இச்சிறுவனுக்கு அவர்கள் ஆலோசனை அளித்தனர்.
இச்செயற்திட்டத்தை சொந்தமாக முழுமையாக வடிவமைத்த ஜோன்சன் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்து இதுவரை 13 131 கையெழுத்துக்களை இணையத்தளமூடாக சேகரித்துள்ளான். மேலும் தன்னால் ஒரு இலட்சம் கையெழுத்துக்களை டிசம்பர் 29 இற்குள் சேகரித்து அமெரிக்க அரசை இணங்க வைக்க முடியும் என நம்பிக்கையுடன் சொல்கிறான் இச்சிறுவன். சிறு துளி பெரு வெள்ளம் என்ற பழமொழிக்கு முன்னுதாரணமாக செயற்படும் இச்சிறுவனுக்கு உங்களாலும் உதவ முடியுமெனில் பின்வரும் இணையத்தளத்தை அழுத்திப் பாருங்கள்..
காற்றிலே கலந்து காணாமல் போகும் விசித்திரங்களை செய்து நபர் சீன மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். சீனாவின் சாண்டாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் லு போலின். பைன் ஆர்ட்ஸ் முதுகலை முடித்துள்ள இவர் மறைந்து போகும் கலையை கண்டறிந்துள்ளார். உலகத்தின் ஆறு முன்னணி பல்கலைக்கழகங்கள் இவரை தங்களது மேற்பார்வை விரிவுரையாளர் பணிக்கு அமர்த்தியுள்ளன. மக்கள் இவரை செல்லமாக ‘இன்விசிபிள் மேன்’ என்றே அழைக்கிறார்கள். ‘நகரத்துக்குள் மறைந்து போதல்’ என்கிற தலைப்பில் சீனா முழுவதும் சென்று மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் இருக்கும் சுவர், மேஜை, நாற்காலி போல தன்னையும் வரைந்து கொண்டு மறைந்து போய் விடுகிறார். உதாரணத்திற்கு புத்தகக் கடையின் ரேக்கில் இருக்கும் புத்தகங்கள் போலவே உடலில் வரைந்து கொண்டு, பார்ப்பதற்கு புத்தகங்கள் போலவே நின்று கொள்கிறார் இதுபோலவே காய்கறிக்கடை, படிக்கட்டுகள், சுவர்கள் எதுவாக இருந்தாலும் அது மாதிரியே தன் உடையில் வரைந்து காணாமல் போய் விடுகிறார். இந்த மாதிரியான செயல்களை வெவ்வேறு இடங்களில் நடத்தில் மக்களை குஷிப்படுத்து வருகிறார். இதனை மக்களும் ஆச்சரியத்தோடு கண்டு ரசித்து செல்கிறார்கள்.
ஏமனில் தந்தை ஒருவர், தனக்கு வரப்போகும் மருமகனிடம் பேஸ்புக்கில் 10 லட்சம் லைக்சை வரதட்சணையாக கேட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏமனில் உள்ள தாய்ஸ் நகரைச் சேர்ந்தவர் சலீம் ஆயஷ், கவிஞர்.
இவர் தனக்கு வரப்போகும் மருமகனிடம் வித்தியாசமான ஒன்றை வரதட்சணையாக கேட்டுள்ளார்.
அதாவது, தனது மகளை திருமணம் செய்ய வேண்டும் என்றால் தனது ஃபேஸ்புக் பக்கத்திற்கு 10 லட்சம் லைக்ஸ் பெற வைக்க வேண்டும் என்பதையே அந்த வரதட்சணையாகும்.
தற்போது சலீம் ஃபேஸ்புக் பக்கத்தை 30 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.
10 லட்சம் லைக்சை பெற இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலுள்ள 200 பெண்களில் ஒருவர் கன்னியாக இருக்கும்போதே கர்ப்பமடைந்துள்ளதாக பிரிட்டன் மருத்துவ பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்து ஆய்வை இளம் பெண்களிடம் நீண்டகாலம் நடத்திய மருத்துவர்கள் குழு இந்த பிரம்மிக்க வைக்கும் நமபமுடியாத தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இதற்காக 15 வயது முதல் 28 வயது வரையிலான 7870 சிறுமி மற்றும் இளம்பெண்களிடம் ரகசிய ஆராய்ச்சிகளை மருத்துவர்கள் மேற்கொண்டனர். இதில் 45 பேர் தாங்கள் எந்த ஆணுடனும் உடலுறவு வைத்துக்கொள்ளாத போதே கர்ப்பமடைந்துள்ளதாக கூறியுள்ளனர். இதற்காக அவர்கள் செயற்கை கருவூட்டல் முறையை எடுத்துக்கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளனர்.
மேலும் சிலர் தவறாக கருவுற்றதையும், கருக்கலைந்து போனதையும் அப்போது அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கன்னியின் கர்ப்பம் குறித்து உலகம் முழுவதும் விவாதங்கள் நடந்து வருகிறது.கன்னிகள் கர்ப்பமடைவது குறித்து ஆதி காலம் தொட்டு கூறப்பட்டாலும், கர்ப்பத்தின் வரலாறு மற்றும் உடலுறவு மூலம் கர்ப்பமடைதல் குறித்து எண்ணற்ற கேள்விகள் எழுந்துள்ளன….!
இந்நிலையில் இந்த கன்னிகள் கர்ப்பம் அடைவதற்கு கண்ணுக்கு தெரியாத சக்திகள் காரணமா…??? இன்றும் நீடிக்கும் பல்லாயிர ஆண்டுகளாக விடை தெரியாத மர்மம்….!
முதலையை வைத்து வித்தை காட்டி வரும் ஒருவர் சில வாரங்களுக்கு முன்பு வித்தை காட்டி கொண்டு இருக்கும் போது முதலையின் வாயினுள் தலையை விட்டு கடியும் வாங்கி இருக்கிறார். இவருக்கு இது எப்படி நேர்ந்தது என கேட்டபோது அவர்,தனது வியர்வை துளி முதலையின் தாடையில் விழுந்திருக்கலாம் எனகூறியதோடு,இனிமுதலையின் வாயினுள் தலையைவிடுவதில்லை எனவும் கூறியிருக்கிறார்.
அமெரிக்காவில் உள்ள இந்திய மருத்துவ வரலாற்று அருங்காட்சியக்ததில் இருந்து 60க்கும் மேற்பட்ட மூளைகளை திருடி,அதனை ஈ பே மூலமாக விற்றவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த ஓராண்டுகளாக, அருங்காட்சியகத்துக்குள் அத்துமீறி நுழைந்து மூளை திசுக்களை திருடியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவனிடம் மூளைகளை வாங்கியவர், அதில் அருங்காட்சியக முத்திரை இருப்பதை பார்த்து புகார் கொடுத்ததன் பேரில் அவன் பொறி வைத்து மடக்கி பிடிக்கப்பட்டான்.
வடகொரியாவில் அதிபர் கிம் ஜாங் யுன்னின் மாமாவான ஜாங் சாங் தேக், ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்ற சதி திட்டம் தீட்டியதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதுவரை அவரை தூக்கிலிட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவே செய்திகள் வந்தன. ஆனால், தற்போது, சீனாவில் வெளியாகியுள்ள தகவலில், ஜாங் சாங் தேக் மற்றும் அவரது 5 உதவியாளர்கள் 120 பசிகொண்ட நாய்களைக் கொண்டு கடித்து குதறவிட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.