பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நபரொருவர் அந்நாட்டிலுள்ள உலகப் புகழ்பெற்ற அல்ப்ஸ் மலைத்தொடரில் 1,200 அடி உயரத்தில் கம்பியில் நடந்து சாகஸம் செய்துள்ளார்.
முன்னாள் பொறியியலாளரான ஜுலியன் மில்லட் என்பவரே இந்த பதைபதைக்கும் சாகஸத்தை நிகழ்த்தியுள்ளார். இவர் அல்ப்ஸ் மலைத்தொடரின் மொன்ட் பிளாங் மலைக்குக் குறுக்காக 196 அடி தூரத்தை கேபிள் கார்களுக்கிடையில் 2 அங்குல கம்யிபில் நடந்துள்ளார்.
லெஸ் ஆர்க்ஸ், பெய்ஸெய்-வல்லன்ரை மற்றும் லா பிளக்னி ஆகிய பகுதிகளை வனொய்ஸ் எக்ஸ்பிரஸ் கேபிள் கார் மூலம் பரடிஸ்கி எனுமிடமாக ஒன்றிணைத்து 10 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டே இந்த சாகஸத்தை ஜுலியன் மேற்கொண்டுள்ளார். இதில் அவரது நண்பர் மெலட் என்பவரும் இணைந்துகொண்டுள்ளார்.
இவர்கள் இருவரும் இணைந்து உலகம் முழுவதும் அந்தரத்தில் மேற்கொண்ட சாகஸங்கள் தொடர்பில் ஐ பிலீவ் ஐ கேன் ப்ளை எனும் ஆவணப்படமொன்றினையும் தயாரித்துள்ளனராம்.