All Stories

Text Widget

Ads300x250

Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

சூப்பர்ஸ்டார் ரஜினியின் கலக்கலான கோச்சடையான் டிரைலர்.....




Posted at 5:21 PM |  by Anonymous

இன்று நிமிர்ந்தது நிமிர்ந்து நில்: எமோசனலான ஜெயம் ரவி

மார்ச் 7 ஆம் தேதி வெளியிட இருந்த நிமிர்ந்து நில் திரைப்படம் திடீர் என தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
ஜெயம்ரவி, அமலாபால், மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்திருந்த இப்படம் கடன் சிக்கலினால் ரிலீஸ் செய்யவேண்டிய தேதியில் ஸ்டாப் செய்யப்பட்டிருந்தது.
ஆரம்பக்காலத்திலிருந்தே நிதி சிக்கலினால் தவித்து வந்த படம் கடைசியாக மார்ச் 7 ஆம் தேதி உறுதிசெய்யப்பட்டிருந்தது.
பின் இப்படத்தின் தயாரிப்பாளர் கே.எஸ் சீனிவாசன் இதற்கு முன் எடுத்த படங்களில் 4 கோடிக்கும் மேல் கடன் வைத்திருந்ததால் சம்பந்தபட்டவர்கள் கடனை அடைத்துவிட்டு நிமிர்ந்து நில் படத்தை ரிலீஸ் செய்ய கூறியிருந்தார்கள்.
இரண்டு நாட்களுக்கு பிறகு இன்று மாலை பல பிரச்சனைகளை தாண்டி இப்படம் வெளியிடுவதாக இப்படத்தின் கதாநாயகன் ஜெயம் ரவி யிடம் இருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் ஜெயம் ரவி குறிப்பிட்டிருந்தது இப்படம் திடீர் நிறுத்தத்திற்கு நான் மட்டும் இல்லாமல் என் படக்குழுவினர்களும் பெரும் மன அழுத்ததிற்கு உள்ளாகி இருந்ததாகவும், தற்போது நிமிர்ந்து நில் படம் ரிலீஸ் செய்து விட்டதாகவும் இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.
இது மட்டுமல்லாமல் ரசிகர்களிடமும் தனது வருத்தத்தையும், நன்றியையும் நேரடியாக காணொளி மூலம் கூறியுள்ளார்
பல சிக்கலை கடந்து ரிலீஸ் செய்துள்ள இப்படம் எப்படி இருக்கும் என்ற பேரார்வம் எல்லோர் மனதிலும் தோன்றியுள்ளது. 
நிமிர்ந்து நிற்குமா?

Posted at 6:19 PM |  by Anonymous

மார்ச் 21ல் வெளியாகும் அஜித் படம்!

அஜித்தின் வீரம் திரைப்படம் தெலுங்கில் ‘வீரு டொக்கடே’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.
‘வீரம்’ ரிலீசான அதே நாளிலேயே தெலுங்கிலும் இப்படம் ரிலீசாகவிருந்தது.
ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இப்போது வருகிற 21ம் திகதி படம் ரிலீசாவதாக அறிவித்திருக்கிறார்கள்.
‘சிறுத்தை’ சிவா இயக்கியுள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடித்திருக்க, தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருக்கிறார்.
அஜித் நடிக்கும் படங்களுக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் இருப்பதாலும், அஜித்துடன் தெலுங்கு ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான தமன்னா, சிறுத்தை சிவா, தேவி ஸ்ரீபிரசாத் ஆகியோர் கூட்டணி அமைத்திருப்பதாலும் இப்படத்திற்கு அங்கு நல்ல வரவேற்பை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்தின் வீரம் திரைப்படம் தெலுங்கில் ‘வீரு டொக்கடே’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.
‘வீரம்’ ரிலீசான அதே நாளிலேயே தெலுங்கிலும் இப்படம் ரிலீசாகவிருந்தது.
ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இப்போது வருகிற 21ம் திகதி படம் ரிலீசாவதாக அறிவித்திருக்கிறார்கள்.
‘சிறுத்தை’ சிவா இயக்கியுள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடித்திருக்க, தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருக்கிறார்.
அஜித் நடிக்கும் படங்களுக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் இருப்பதாலும், அஜித்துடன் தெலுங்கு ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான தமன்னா, சிறுத்தை சிவா, தேவி ஸ்ரீபிரசாத் ஆகியோர் கூட்டணி அமைத்திருப்பதாலும் இப்படத்திற்கு அங்கு நல்ல வரவேற்பை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- See more at: http://www.cineulagam.com/tamil/newsta/all/20140308101994/#sthash.DLQJ8sM7.dpuf

Posted at 6:16 PM |  by Anonymous

ஒரு சதியை கடந்த விஜய்யின் ஜில்லாவுக்கு அடுத்த ஆப்பு நீதிமன்றத்தில் தாக்கல்!

தலைவா படத்  தயாரிப்பாளரிடம் இருந்து ஜில்லாவுக்கு விடுதலை பெற்ற விஜய்க்கு ஆடுத்த ஆப்பு வைக்கப்பட்டுள்ளது. விஜய் நடித்துள்ள ‘ஜில்லா’ படத்துக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கு சிட்டி சிவில் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. சென்னையை அடுத்துள்ள சேலையூரை சேர்ந்தவர் ஆர்.மகேந்திரன். இவர், சென்னை 16–வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
      vijay-jilla
சவுமிதா ஸ்ரீ ஆர்ட்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகை ஸ்ரேயா ஆகியோர் தெலுங்கில் நடித்த ‘பகீரதா‘ என்ற படத்தை தமிழில் ‘ஜில்லா’ என்ற பெயரில் மொழியாக்கம் செய்தேன். இந்த ‘ஜில்லா’ என்ற படத்தின் தலைப்பை தென்னிந்திய திரைப்படம் மற்றும் டி.வி. தொடர் தயாரிப்பாளர் கில்டில் 2008–ம் ஆண்டு பதிவு செய்தேன்.
இந்த தமிழாக்கம் செய்யப்பட்ட ஜில்லா படத்தை திரையரங்குகளில் வெளியிட தணிக்கை சான்றிதழை 28–5–2008 அன்று பெற்றுள்ளேன். இதன்பின்னர் இந்த படத்தை வெளியிட தகுந்த நேரத்தை பார்த்து காத்திருந்தேன்.இந்த நிலையில், நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜில்லா’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட படம் வருகிற 10–ந்தேதி வெளியாகப் போவதாக பத்திரிகையில் விளம்பரம் வெளியாகியுள்ளது. எனவே விஜய் நடித்துள்ள ஜில்லா என்ற பெயரில் படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும்.
இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோர்ட்டு உத்தரவின்படி, எதிர்மனுதாரரான ஜில்லா படத்தின் தயாரிப்பாளர் சூப்பர் குட்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் உள்ளிட்ட பலருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Posted at 8:53 AM |  by Unknown

விஜய்யின் இமேஜுக்காக உருவான கதை ஜில்லா!

விஜய்யின் இமேஜுக்காக உருவான கதை ஜில்லாவிஜய், மோகன்லால் நடித்த ஜில்லா நாளை ரிலீசாகிறது.இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி நிருபர்களிடம் கூறியதாவது:சூப்பர் குட் பிலிம்சின் 25வது ஆண்டில், 85-வது படமாக ஜில்லா உருவாகியுள்ளது. விஜய், மோகன்லால் இருவரும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்ததால், நாங்கள் சொன்னபடி பொங்கலையொட்டி படத்தை வெளியிடுகிறோம். கேரளாவில் படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையைப் பெற்றுள்ள மோகன்லால், நடித்ததற்கு சம்பளம் வாங்கவில்லை.

எங்கள் நிறுவனத்துக்காக, பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜஹான், திருப்பாச்சி படங்களில் நடித்தார் விஜய். அந்த படங்கள் வெள்ளிவிழா கொண்டாடின. அதுபோல் ஜில்லாவும் வெள்ளிவிழா கொண்டாடும். இந்தப் படத்தில் பேமிலி சென்டிமென்ட்டும் அதிரடி ஆக்ஷனும் கலந்திருக்கும். விஜய்க்காக, அவரது இமேஜுக்காக உருவாக்கப்பட்ட கதைதான் இந்தப் படம். அடுத்து ஜீவா நடிக்கும் படத்தை தயாரிக்கிறோம்.

தெலுங்கில் லிங்குசாமி இயக்கத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கும் படத்தையும் தயாரிக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.இயக்குனர் ஆர்.டி.நேசன் கூறும்போது, தனது நண்பர்கள் குழுவுடன் தெனாவட்டாகத் திரியும் இளைஞனை, செல்லமாக ஜில்லா என்று அழைப்பார்கள். அதையே தலைப்பாக்கி விட்டேன். விஜய்க்கும், அவரது வளர்ப்புத் தந்தை மோகன்லாலுக்கும் நடக்கும் போராட்டம்தான் கதை என்றார்.

Posted at 8:47 AM |  by Unknown

சீனாவிற்கு செல்லும் வடிவேலு!

வடிவேலு நடிக்கும் “ஜெகஜால புஜபல தெனாலிராமன்” படத்தின் படபிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
படத்தின் 90 சதவீத படிப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாகவும், மீதியுள்ள 10 சதவீத படம் சீனா மற்றும் ஆந்திராவில் எடுக்கப்படவுள்ளதாகவம் படப்பிடிப்பு குழுவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக இம்மாத இறுதியில் 7 நாள் படிப்பிடிக்கிற்காக  படப்பிடிப்பு குழு செல்ல விருப்பதாகவுகம் கூறப்படுகிறது.
“ஜெகஜால புஜபல தெனாலிராமன்” படம் ஒரு வராலற்று படமாகும். இதற்காக பிரம்மாண்டமான அரங்கு ஏவிஎம் ஸ்டூடியோவில் போடப்பட்டு படபிடிப்பு நடத்தப்படுகிறது.  இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது. கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் நடித்த பட்டா பட்டி படத்தை இயக்கிய யுவராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். “ஜெகஜால புஜபல தெனாலிராமனில்”  வடிவேலு இரட்டை வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Posted at 8:34 AM |  by Unknown

ஜில்லாவில் விஜய் பேசும் பஞ்ச்!!!

விஜய் படங்கள் என்றாலே பஞ்ச் வசனங்களுக்கு குறைவிருக்காது.
சூப்பர் ஸ்டார் ரஜினியை அடுத்து தமிழ் திரையுலகில் அதிக பஞ்ச் வசனங்கள் பேசி நடிப்பவர் விஜய்தான். அவருடைய ரசிகர்களும் இந்தப் பஞ்ச் டயலாக்குகளைப் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். தொடர்ந்து தன்னுடைய படங்களில் பஞ்ச் வசனங்கள் பேசி நடித்து வந்த விஜய் கடந்த சில படங்களில் அதனை தவிர்த்து வந்தார்.
இந்நிலையில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் ஜில்லா படத்தில் விஜய் பேசும் பஞ்ச் வசனம் வெளியாகியுள்ளது. அதில் “ ஒரு வாட்டி எங்கிட்ட வாங்கிட்டான்னா, இங்க இல்ல இந்த ஜில்லாவுலயே இருக்க மாட்டான்” என்ற பஞ்ச் வசனம் இடம்பெறுகிறது. இப்படத்தின் டீசரில் வெளியாகியிருக்கும் இந்தப் பஞ்ச் டயலாக் ஏற்கெனவே ரசிகர்களால் பெரும் வரவேற்புக்கு உள்ளாகியிருக்கிறது.
விஜய், மோகன்லால் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில், நேசன் இயக்கத்தில், சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் ஜில்லா திரைப்படம் வருகிற ஜனவரி 10ம் தேதி வெளியாகிறது.

Posted at 8:29 AM |  by Unknown

இனி ஆர்யாதான் “காதல் இளவரசன்”: கமல் ஹாசன்.

80களின் தொடக்கத்திலேயே ‘காதல் இளவசரன்’ என்று அழைக்கப்பட்டவர் கமல் ஹாசன்.
ஒரு குறிப்பிட்ட காலம் வரை காதல் இளவரசனாக வலம் வந்த கமல் பின்னர் உலக நாயகனாகி விட்டார். இப்போதொல்லாம் அவர் காதல் இளவரசன் என அழைக்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக உலக நாயகன் என்றே அழைக்கப்படுகிறார். சொல்லப் போனால் கமல்ஹாசன், காதல் இளவரசன் என்கிற பட்டத்தை போட்டு சில வருடங்களாகி விட்டது.
இந்நிலையில் நீண்ட காலமாக தன்னகத்தே வைத்துக்கொண்டிருந்த ‘காதல் இளவரசன்’ பட்டத்தைத் தூக்கி ஆர்யாவிடம் கொடுத்து விட்டார் கமல் ஹாசன்.
ஆர்யா, நயன் தாரா, ஜெய், நஸ்ரியா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கிய ‘ராஜா ராணி’ 100வது நாள் வெற்றி விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் ஆர்யா, நயன் தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ், அட்லி, ஏ.ஆர்.முருகதாஸ் உள்படம் ‘ராஜா ராணி’ படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். மேலும் விழாவில் கமல்ஹாசன், ஷங்கர், பி.சி.ஸ்ரீராம் ஆகியோர் கலந்துகொண்டு ஆர்யா, நயன்தாராவின் ரொமான்ஸ் பட வெற்றியை வாழ்த்தி பேசினர்.
இந்த வெற்றி விழாவில் பேசிய கமல், “இத்தனை நாட்களாக காதல் இளவரசன் பட்டம் என்னிடமே இருந்து வந்தது. இப்போது அதை ஆர்யாவுக்கு கொடுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. இனிமேல் அவர்தான் காதல் இளவரசன்” என்று மகுடமே சூட்டிவிட்டார். ஆனால் ‘காதல் இளவரசன்’ என்ற பட்டத்துக்கு நூறு சதவீதம் பொருத்தமானவர்தான் ஆர்யா. அதுதான் கமல் சரியான ஆளாக பார்த்து பட்டத்தை சூட்டியிருக்கிறார்.

Posted at 8:28 AM |  by Unknown

அஜித்தின் வீரத்திற்கு வீரியமில்லை!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வீரம் படம் வருகிற 10-ந் திகதி திரைக்கு வருகிறது. இதனால் தமிழகமெங்கிலும் பரபரப்பாக பப்ளிசிட்டியை முடுக்கி விட்டுள்ளனர். மேலும், தமிழில் வெளியாகிற அதே நாளில் வீரு டொக்கடே என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியிட திட்டமிட்டிருந்தனர். 
 


ஆனால், இப்போது தமிழில் ரிலீஸ் செய்து விட்டு இரண்டு வாரங்கள் கழித்து ஆந்திராவில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். என்ன காரணம்? என்று விசாரித்தபோது, ஜனவரி 10-ந் திகதி ஆந்திராவில் சங்கராந்தி என்பதால் அங்குள்ள பிரபல ஹீரோக்களான மகேஷ்பாபு நடித்த 1, ராம்சரண் நடித்த எவடு ஆகிய படங்கள் வெளியாகிறதாம். அதனால் பிரமாண்ட தியேட்டர்கள் அனைத்தையும் அவர்களே கைப்பற்றி விட்டார்களாம். 
 
ஆக, அஜித் படத்துக்கு எதிர்பார்த்த தியேட்டர்கள கிடைக்காததால் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர். மேலும், சிறுத்தை சிவா இயக்கிய சில தெலுங்கு படங்கள் ஹிட்டாகியிருப்பதோடு, தமன்னா வீரம் படத்தில் நாயகியாக நடித்திருப்பதால், தெலுங்கிலும் அஜித்தின் கொடி பறக்க நிறைய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. 
 
அதனால், அங்குள்ள ஹீரோக்களுடன் போட்டிக்கோதாவில் இறங்கினால், கிடைக்கிற வசூலும் இல்லாமல் போய் விடும் என்பதால் புத்திசாலித்தனமாக ரிலீஸ் திகதியை பின்தள்ளி வைத்திருக்கிறார்களாம்.

Posted at 10:19 AM |  by Unknown

இளமை இதோ இதோ பாடலை முந்துமா சிம்புவின் பாடல்?

புத்தாண்டு வந்து விட்டது. என்று சகல கலா வல்லவன் என்ற படத்தில் கமல ஹாசன் நடிக்க எஸ்.பி.பி. இளமை இதோ இதோ… இனிமை இதோ இதோ என்று பாடினாரோ அதுதான் இன்று வரை ஹேப்பி நியூ இயர் பாடலாக இருந்து வருகிறது.
img1131230011_1_1ஆனால் இந்த ஆண்டு மகாபலிபுரம் படத்திற்காக சிம்பு பாடிய புத்தாண்டு பாடல் கமலஹாஸன் பாடலை ஓரம்கட்டிவிடும் என்று கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வினாயக் என்பவது தயாரிப்பில் உருவாகும் மகாபலிபுரம் படத்தை இயக்குபவர் டான் சாண்டி, இவர் பூபதி பாண்டியனின் முன்னாள் உதவியாளர்.
இந்த படத்திற்காக சிம்பு பாடும் பாடல் 2014 முதல் தினமான புத்தாண்டு தினத்தில் வெளியிடப்படவுள்ளது.யுகபாரதி இந்தப் பாடலை எழுதியுள்ளார், முகமூடி, யுத்தம் செய் படத்தின் இசையமைப்பாளர் கே இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

Posted at 5:50 PM |  by Unknown

25 சவரன் தங்க நாணயம் பதிக்கப்பட்ட வெள்ளி கேடயம் : ரவிகுமாருக்கு கமல்ஹாசன் வழங்கினார்.

சென்னை,ஜன.07 (டி.என்.எஸ்) இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரின் 25வது சினிமா ஆண்டை கொண்டாடும் வகையில், ராஜ் தொலைக்காட்சி சார்பாக நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், 25 சரவரன் தங்க நாணயம் பதிக்கப்பட்ட வெள்ளி கேடயத்தை, இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாருக்கு, ராஜ் டிவியின் சார்பில் கமல்ஹாசன் வழங்கினார்.

சேரண் பாண்டியன், நாட்டாமை, முத்து, படையப்பா, தசாவதாரம், தெனாலி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய கே.எஸ்.ரவிகுமார் தமிழ்த் திரையுலகில் நுழைந்து 25 வருடங்கள் ஆகின்றன. சினிமாவில் வெள்ளி விழா கொண்டாடும் ரவிகுமாருக்கு பத்மஸ்ரீ கமல்ஹாசன் தலைமையில் மாபெரும் பாராட்டு விழாவினை ராஜ் டிவி நிறுவனம் சமீபத்தில், சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்தியது.
 25 சவரன் தங்க நாணயம் பதிக்கப்பட்ட வெள்ளி கேடயம் : ரவிகுமாருக்கு கமல்ஹாசன் வழங்கினார்
10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், நடிகர்கள் சரத்குமார், அர்ஜூன், விஜயகுமார், பாண்டியராஜன், எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த், கஞ்சா கருப்பு, ரமேஷ் கண்ணா, மனோபாலா, சித்ரா லட்சுமணன், மதன் பாப், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், சிம்ரன், அம்பிகா, ரேகா, தேவயாணி, சங்கீதா, குட்டி பத்மினி, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் வி.சேகர், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கே.ஆர், செயலாளர் டி.சிவா, தென்னிந்தியத் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் ஆனந்த சுரேஷ், பொருளாளர் கே.எஸ்.சீனிவாசன், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.செளத்ரி, கே.முரளி, பிரமிட் நடராஜன், எச்.முரளி, கே.எஸ்.சிவராமன், பி.எல்.தேனப்பன், இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், பி.வாசு, சேரன், ஆர்.சுந்தர்ராஜன், ரவி மரியா, ஈ.ராம்தாஸ், எழில், சந்தான பாரதி, சி.ரங்கநாதன், இசையமைப்பாளர்கள் தேவா, சபேஷ் முரளி, ஸ்ரீகாந்த் தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.

விழாவில் நடிகைகள் சமீரா ரெட்டி, லஷ்மிராய், நீது சந்திரா, ரம்யா நம்பீசன், இனியா, மணிஷா, சுஜா, பூர்ணா, சந்தியா, சஞ்சிதா படுகோனே, நடிகர் மகேந்திரன் ஆகியோரின் நடன் நிகழ்ச்சிகளும், பேராசிரியர் ஞானசம்பந்தம் தலைமையிலான பட்டி மன்றமும் நடைபெற்றது.

ரவிகுமாரின் வெள்ளி விழா ஆண்டையொட்டி 25 சவரன் தங்க நாணயங்கள் பதிக்கப்பட்ட வெள்ளிக் கேடயம் ஒன்றை, ராஜ் டிவி சார்பில், நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய நடிகர் கமல்ஹாசன், கே.எஸ்.ரவிகுமாருக்கு வழங்கினார். மேலும், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு ராஜ் டிவி சார்பில், ரூ.10 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது. இதனை, ராஜ் டிவி உரிமையாளர்கள் எம்.ராஜேந்த்ரிஅன், எம்.ராஜரத்தினம், எம்.ரவீந்திரன், எம்.ரகுநாதன் ஆகியோர் இணைந்து வழங்க, இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வகணி ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியின் போது, ரவிகுமாரின் மனைவி மற்றும் அவருடைய மகள்கள், அவரைப் பற்றிய சுவையான கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.

கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவியாளராகப் பணியாற்றி, தற்போது இயக்குநர்களாக உள்ளவர்களும், அவரிடம் தற்போது உதவி இயக்குநர்களாக பணியாற்றுபவர்களும், இயக்குநர் சேரன் தலைமையில் அவருக்கு ஆளுயர மாலை அணிவித்து மேடையில் அவர் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநரும், நடிகருமான சித்ரா லட்சுமணன் வரவேற்புரை நிகழ்த்த, ராஜ் டிவி நிர்வாக இயக்குநர் எம்.ராஜேந்திரன் நன்றி கூறினார்.

இந்த நிகழ்ச்சி விரைவில் ராஜ் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. (டி.என்.எஸ்)

Posted at 5:00 PM |  by Unknown

வயிற்றுவலி – மருத்துவமனையில் ஸ்ருதிஹாசன்!

திடீர் வயிற்றுவலி காரணமாக நடிகை ஸ்ருதிஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஸ்ருதி தெலுங்கு, ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் அவர் நடித்த ஏவடு படம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. ரேஸ் குர்ரம் படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்து வருகிறார். சுரேந்தர் ரெட்டி படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டார் ஸ்ருதி. உடனே அவரை ஹைதராபாத் ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஸ்ருதிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

Posted at 1:53 PM |  by Unknown

ஆபரேஷனை மீண்டும் தள்ளிப்போட்ட அஜீத்.

கால் எலும்பில் ஏற்பட்ட காயத்துக்கான ஆபரேஷனை மீண்டும் தள்ளிப்போட்டார் அஜீத். விஷ்ணுவர்தன் இயக்கிய ஆரம்பம் பட ஷூட்டிங்
துபாயில் நடந்தபோது கார் சேஸிங் காட்சியில் நடித்தார் அஜீத். வேகமாக ஓடும் காரின் முன்பக்கத்தில் நின்றபடி அவர் மோதும் சண்டை காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அவரது கால் வழுக்கி முன்பக்க சக்கரத்தில் சிக்கியது. இதில் கால் எலும்பில் காயம் ஏற்பட்டது. டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது எலும்பில் காயம் ஏற்பட்டிருந்தது தெரிந்தது. அதற்கு ஆபரேஷன் செய்யவும் ஆலோசனை கூறினர். ஆனால் படத்தை முடித்துவிட்டு ஆபரேஷன் செய்வதாக கூறினார் அஜீத்.

இந்நிலையில் வீரம் படத்தின் ஷூட்டிங்கை விரைந்து முடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் ஆபரேஷனை தள்ளிப்போட்டார். அப்படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் ஆபரேஷன் செய்ய எண்ணி இருந்தார். தற்போது மனைவி மகளுடன் அஜீத் ஆஸ்திரேலியா சென்றிருக்கிறார். அங்கிருந்து வந்ததும் சிகிச்சை பெறுவாரா என்றதற்கு அவரது தரப்பில் பதில் அளித்தனர். வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் கவுதம் மேனன் இயக்கும் படத்தில் அஜீத் நடிக்க உள்ளார். அநேகமாக இப்படத்தை முடித்துவிட்டுத்தான் காலில் பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்துகொள்வார் என்று தெரிவித்தனர்.

Posted at 1:22 PM |  by Unknown

பூஜா மறுத்த படம்!

தமிழ்சினிமாவில் லாஜிக் பார்க்கிற நடிகை என்றால் அது பூஜாதான்.எதிலும் ஒரு நேர்மை இருக்க வேண்டும். அது செய்யும் தொழிலில் இன்னும் நிறைய இருக்க வேண்டும் என்கிறார் அவர். நான் கடவுள் படத்திற்கு முன்பு வரை அவர் நிலைமை எப்படியோ? அதற்கப்புறம் அவர் தமிழில் ஒப்புக் கொள்ளும் எந்த படமாக இருந்தாலும், அது நான் கடவுள் படத்தில் நடித்த தனது கேரக்டரை நாசப்படுத்தாத விதத்தில் இருக்க வேண்டும்.
அந்த படத்தில் தனக்கு தரப்பட்ட அளவுக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கிறார் பூஜா. இதற்காகவே பல தமிழ் பட வாய்ப்புகளை அவர் இழந்து கொண்டேயிருக்கிறார். இந்த இழப்பு இன்னும் தொடர்ந்து கொண்டேயிருப்பதுதான் வேடிக்கை.

மீண்டும் பாலாவால் அழைக்கப்படுவோம் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்ததே இல்லை. இருந்தாலும், சென்னை வந்தால் பாலாவுக்கு ஒரு போன். முடிந்தால் நேரில் சந்திப்பது என்று அதையும் தவறாமல் செய்துவிடுகிறார். அண்மையில் ஒரு பெரிய நிறுவனம் இவரை ஒப்பந்தம் செய்ய அழைத்ததாம். படத்தில் பிகினி டிரஸ் போடணும் என்று முதலிலேயே சொல்லிவிட்டுதான் அழைத்தார்கள்.

அதிர்ந்து போன பூஜா என்னை அப்படியொரு கவர்ச்சி பொம்மையாக பார்க்கவே பார்க்காதீர்கள். பாலாவின் நான் கடவுள் நாயகியாக பாருங்கள். இப்படி கேட்கவே தோன்றாது என்று கூற, அடக்கடவுளே என்று தலையில் அடித்துக் கொண்டதாம் நிறுவனம்.இந்தகாலத்தில் இப்படியும் ஒரு நடிகை?

Posted at 1:08 PM |  by Unknown

குறித்த நேரத்தில், குறித்த பட்ஜெட்டுக்குள் வீரம் படப்பிடிப்பு முடிந்தது! - தயாரிப்பாளர்.

சென்னை: அஜீத்தின் பொங்கல் வெளியீடான வீரம் படத்தின் படப்பிடிப்பு முழுமை பெற்றதாக அதன் தயாரிப்பாளர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்ததற்கு அடையாளமாக பூசணிக்காயும் உடைக்கப்பட்டது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர்கள் பாரதி ரெட்டி , வெங்கட்ராம ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை:

குறித்த நேரத்தில், குறித்த பட்ஜெட்டுக்குள் வீரம் படப்பிடிப்பு முடிந்தது!  - தயாரிப்பாளர்

மிகவும் எதிர்பார்க்கப்படும், பொங்கலுக்கு வெளிவர உள்ள வீரம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடிவடைந்தத மகிழ்ச்சியும் , முடிவடைந்ததால் ஒரே குடும்பம் போல் பழகி வந்த அனைவரும் பிரிய நேரிடும் துக்கமும் ஒரு சேர காற்றில் மிதந்தது. குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட பட்ஜெட்டில் படப்பிடிப்பை முடித்த இயக்குனர் சிவாவையும் , அவரது தொழில் நுட்ப கலைஞர்களையும் பாராட்டுகிறோம்.
குறித்த நேரத்தில், குறித்த பட்ஜெட்டுக்குள் வீரம் படப்பிடிப்பு முடிந்தது!  - தயாரிப்பாளர்
அஜீத் அவர்களின் தொழில் பக்தியும், நேர்மையும் அவருடன் பணியாற்றுபவர்களிடம் பரவுவதே இந்த திட்டமிட்ட பயணத்துக்கு காரணம். பொங்கலுக்கு வீரம் நிச்சயம்," என்று கூறியுள்ளனர்.

Posted at 5:08 PM |  by Unknown

ஜனவரி 6: ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம்.

ஏ.ஆர்.ரஹ்மான், 1966ஜனவரி 6-ல் சென்னையில் பிறந்தார்.இவரின் அப்பா சேகர், பல்வேறு மலையாள, தமிழ்ப் படங்களின் இசைக் குழுவில் பணிபுரிந்து இருக்கிறார். ரொம்பக் குட்டிப் பையனாக இருக்கும்பொழுதே, அப்பாவின் அருகில் உட்கார்ந்து இசைக் கருவிகள் மற்றும் இசை அமைக்கும் விதம் ஆகியவற்றை அறிந்துகொண்டவர் ஏ.ஆர்.ரஹ்மான். அப்போது அவர் பெயர் திலீப் குமார்.
அப்பா தனியாக இசை அமைத்த முதல் மலையாளப் படம் வெளிவந்த நாளிலே, உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். குடும்பத்தைக் காக்க, பள்ளிப் படிப்பை பாதியில் முடித்துக்கொண்டு, முழு நேரம் இசை உலகிற்குள் நுழைந்தார் ரஹ்மான்.
எலெக்ட்ரானிக் பொருட்களின் மீது விருப்பம் அதிகம். கணினி பொறியியல் படிக்க வேண்டும் என்பது இளமைக்கால ஆசை.
பள்ளிக் கல்வி இல்லாமல் போனாலும், தனது இசைப் புலமையால்... லண்டன் இசைக்
கல்லூரியான டிரினிட்டி கல்லூரியின் ஸ்காலர்ஷிப் பெற்றார்.
ஆரம்ப காலங்களில் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று தெரியாத காலங்களில் கார் ஒட்டவும் கற்றுக்கொண்டார். ஒருவேலை இசை கைகொடுக்காவிட்டால் டிரைவர் ஆகிவிடலாம் என்கிற எண்ணம் தான் காரணம்.
"பன்னிரெண்டு வயதில் முதுமையடைந்து விட்டேன் நான் ; இப்பொழுது தான் இளைஞனாகிக் கொண்டிருக்கிறேன் !" என்று பொறுப்புகள் அழுத்திய இளமைக்காலத்தை பற்றி குறிப்பிட்டார்.
ஒரு லட்சம் பேர் கொல்கத்தாவில் இவரின் இசை நிகழ்வை காணக்கூடினார்கள். ரங்கீலா படத்தில் இசையமைத்த பொழுது தமிழர்கள் ஹிந்தியில் கோலோச்ச முடியாது என்பதை உடைத்து இவர் பெயர் வந்தாலே கைதட்டி கூத்தாடுகிற மாயத்தை அங்கே செய்தது அவரின் இசை.
இளம் வயதில் 'சினிமா பாரடைஸோ’ படத்தைப் பார்த்து, அந்தப் படத்தின் இசையைப் போல ஒரே ஒரு படத்திற்காவது இசை அமைக்க வேண்டும் என ஆசைப்பட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.
பி.எம்.டபிள்யு கார்களில் விருப்பம் உண்டு. இசையமைப்பதை தாண்டி வீடியோ கேம்ஸ்களில் ஆர்வம் அதிகம்.
தொலைக்காட்சி விளம்பரப் படங்களுக்கு இசை அமைக்க ஆரம்பித்தார். அப்போதுதான், இயக்குனர்மணிரத்னம் மூலம் 'ரோஜா’ பட வாய்ப்பு வந்தது. அதற்காகக் கிடைத்த சம்பளம் 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே. அந்த பணத்தை சில மணிநேரங்களில் விளம்பரங்களில் ரஹ்மானால் சம்பாதித்திருக்க முடியும் என்றாலும் அற்புதமான வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார்.
சின்ன சின்ன ஆசை பாடலை இசையமைத்து அன்னையிடம் போட்டு காண்பித்தார். அவர் கண்ணீர் விட்டு அழுதார் ,"பிடிக்கலையா அம்மா ?" என்று கேட்டார் ரஹ்மான். பிடிக்கலையா அம்மா ?” என்று ரஹ்மான் அதிர்ந்து கேட்க ,”ரொம்ப நல்லா இருக்கு,என்னமோ பண்ணுது இந்த பாட்டு என்னை எல்லாருக்கும் இது பிடிக்கும் பாரு கண்டிப்பா !”என்று சொன்னார் அவரின் அம்மா
 "காதல் ரோஜாவே பாட்டை அதிகாலை மூன்று மணிக்கு கேட்டுவிட்டு சவுண்ட் இன்ஜினியர் கண்ணீர் விட்டு அழுதது மறக்கவே முடியாத அனுபவம் " என்றும் பதிவு செய்திருக்கிறார்.
ரோஜா’ படத்துக்கு இந்தியாவின் சிறந்த இசை அமைப்பாளர் விருதை மத்திய அரசு வழங்கியது. அமெரிக்காவின் டைம் பத்திரிகை, கடந்த நூற்றாண்டின் உலகின் தலை சிறந்த 10 இசைக் கோர்வைகளில் ஒன்றாக 'ரோஜா’வை அறிவித்தது. 'மெட்ராஸின் மொசார்ட்’ எனவும் பட்டம் சூட்டியது.
'பம்பாய்’ படத்தின் பாடல் கேசட்டுகள், அப்போதே 120 லட்சம் பிரதிகள் விற்றன. படத்தின் தீம் இசை, மூன்று வெவ்வேறு படங்களில் பயன்படுத்தப்பட்டது. இந்தச் சாதனை உலகின் வேறு எந்தப் படத்திற்கும் இல்லை.
1997-ல் இந்தியாவின் விடுதலைப் பொன் விழாவுக்காக உலகப் புகழ் பெற்ற சோனி நிறுவனம், ரஹ்மானை ஒப்பந்தம் செய்தது. அப்படி உருவானதுதான் 'வந்தே மாதரம்’ இசை ஆல்பம்.
ரஹ்மானுக்கு பழையதை மறக்கிற பழக்கம் கிடையாது.எவ்வளவோ முன்னேறினாலும் தான் முதலில் உபயோகித்த கீபோர்டை இன்னமும் வைத்து இருக்கிறார் .இன்னமும் தன் பள்ளிக்கால நண்பர்களை சந்திக்கிற பழக்கம் உண்டு.
இளம் வயதில் வறுமையில் வாடிய நினைவுகளின் அடையாளமாக இன்னமும் தானாக
நகைகளை அணிய மாட்டார்
ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுவதற்கு  முன் எப்படி உணர்கிறீர்கள் என கேட்டபொழுது "எனக்கொரு அன்னை இருக்கின்றாள்" என்றார்.அதாவது நான் இந்த விருதை வென்றாலும் அல்லது வெல்ல முடியாமல் போய் விட்டாலும் என் அன்னையின் அன்பு மாறப்போவது இல்லை .அது போதும் எனக்கு என்றார் ரஹ்மான்
'அடுத்து ஆஸ்கர்தான்’ என 10 வருடங்களுக்கு முன்பே இயக்குனர் சுபாஷ் காய் சொன்னார். பிறகு, உலக அளவில் பம்பாய் ட்ரீம்ஸ் எனும் இசை நிகழ்ச்சி, மைக்கேல் ஜாக்சனோடு இணைந்து, 'மைக்கேல் ஜாக்சன் அண்ட் ஃப்ரெண்ட்ஸ்’, சீன மற்றும் பிரிட்டிஷ் படங்களுக்கு இசை எனப் பல வாய்ப்புகளை வெற்றிகளாக மாற்றினார். அப்படி வந்ததுதான், 'ஸ்லம்டாக் மில்லியனர்’. ஒரே ஒரு மின் அஞ்சலில் ரஹ்மானை புக் செய்தார், இயக்குனர் டோனி பாயல். 'ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்கு ஆஸ்கர்கள் குவிய, 'எல்லாப் புகழும் இறைவனுக்கே’
எனப் பணிவோடு ஆஸ்கர் மேடையில் அன்னைத் தமிழில் பேசினார்.
அமைதி மற்றும் தனிமை விரும்பி. அமைதி ஆழ்மனதின் குரலை இன்னும் தெளிவாக கேட்கவைக்கிறது ; எரிச்சல்படுத்தும் சத்தம் உண்டு செய்யும் பலர் இருக்கும் உலகில் அமைதி தான் ஒரே இன்பம் என்பது ரஹ்மானின் எண்ணம்
'வெறுப்புக்குப் பதிலாக நான் அன்பு வழியைத் தேர்ந்து எடுத்தேன்’ என்பார். எல்லோரையும் அன்பு செய்யுங்கள் எனும் சூஃபி தத்துவத்தில் ஈடுபாடுகொண்டவர். உலக அமைதிக்காக 'வி ஆர் தி வேர்ல்டு’ எனும் இசைப் பாடலை மைக்கேல் ஜாக்சன் இசை அமைக்கச் சொன்னார். அந்தப் பாடலைக் கேட்பதற்குள், அவர் மரணமடைந்தது சோகமான நிகழ்வு.
ரஹ்மான் நன்றாக மிமிக்ரி செய்வார், வைரமுத்து போல மிமிக்ரி செய்வதில் விருப்பம் அதிகம். பெரும்பாலும் இரவு நேரங்களில் இசை அமைப்பார். வீட்டில் பிள்ளைகள் தூங்கும் வரை அவர்களோடு இருந்துவிட்டு, பிறகு இசை அமைக்கப்போகிற ஸ்வீட் அப்பா. குழந்தைகள் மீது பெரிய அன்பு. ஒரு சுவாரசியமான செய்தி. இவருக்கும் மகன் அமீனுக்கும் ஒரே தேதியில்தான்
பிறந்த நாள்.
ரஹ்மான் லதா மங்கேஷ்கரின் பெரிய விசிறி. "லதாஜி என்னுடைய இசையமைப்பில் பாடினால் கேட்டுக்கொண்டே இருப்பேன் அது என்னுடைய இசை என்பதற்காக இல்லை ! அவர் பாடியிருக்கிறார் என்பதால் அதில் மூழ்கிப்போவேன்"  என்று சொன்னார்
இசையை... ஏழை மற்றும் திறமைசாலி மாணவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு, பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக இசைப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். ''இந்தப் பள்ளியில்தான் என் கனவுகள் உள்ளன. இங்கே இருந்து சிறந்த பல இளைஞர்கள் வரவேண்டும் என்பதே என் ஆசை'' என்பார்.
வெற்றியை தலைக்கு போகவிடமாட்டார். கொஞ்சம் புகழுடைய சாதாரண ,மனிதன் நான்
என்பார். ஈகோ என்பதை 'edging god out !' என்று அர்த்தப்படுத்திக்கொள்கிறேன்.வெற்றி மட்டுமே படைப்புத்திறனுக்கு காரணமில்லை. இசையின் ஒருமுகம் மற்றும் அதன் மீதான காதல் தான் என்னை செலுத்துகிறது. இறைவனின் எல்லையற்ற கருணையும் நான் இயங்க முக்கிய காரணம் !" என்பது ரஹ்மானின் வாக்குமூலம்

Posted at 11:02 AM |  by Unknown

பொங்கலுக்கு ஜில்லா இல்லை!

ஜில்லா திட்டமிட்டபடி பொங்கலுக்கு வந்துவிடுமா? இந்த சந்தேகத்தை ரசிகர்களிடமும்,விநியோகஸ்தர்களிடமும் ஏற்படுத்தியிருக்கிறது அப்படக்குழுவின் மெத்தனம். ஜில்லா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவையே மிக மிக சப்தமின்றி நடத்தி முடித்தார்கள். இதற்கென தனி ஆர்ப்பாட்டம் தேவையில்லைதான். ஆனால் படம் பொங்கலுக்கு வரப்போகிறது என்பதை அறிவிக்கும் நோக்கத்தில் ட்ரெய்லர்களை இந்நேரம் வெளியிட்டிருக்க வேண்டாமா என்பதுதான் ரசிகர்களின் குரலாக இருக்கிறது.
அதுமட்டுமல்ல, ஜில்லாவும் வீரமும் ஒரே நாளில் வரப்போகிற படங்கள் என்பதால் ஒவ்வொரு விஷயத்திற்கும் வீரத்தோடு ஜில்லாவை ஒப்பிட்டுக் கொண்டேயிருக்கிறார்கள் அவர்கள். அப்படி பார்த்தால் வீரம் படத்தின் பாடல்கள் வந்தாச்சு. டீஸர் வந்தாச்சு. சுட சுட ட்ரெய்லரும் வந்தாச்சு. படத்திற்கு டப்பிங் பேசி முடித்துவிட்டு நேற்று குடும்பத்தோடு வெளிநாட்டுக்கும் பறந்துவிட்டார் அஜீத்.

ஆனால் விஜய் டப்பிங் முடித்தாரா? படத்தின் முதல் பிரதி தயாராகிவிட்டதா? எப்போது சென்சார் செய்து எப்போது வரிவிலக்கு காட்சிக்கு விண்ணப்பிப்பார்கள்?. பொதுவாக விஜய் மாதிரி ஆளுங்கட்சிக்கு அதிருப்தி லிஸ்டில் இருப்பவர்களின் படங்களை இந்த வரிவிலக்கு குழு பார்ப்பதற்கே பல வாரங்கள் எடுத்துக் கொள்ளும். இதற்கெல்லாம் தயாராக வேண்டும் என்றால் படத்தை ஜனவரி 1 ந் தேதிக்குள் முடித்து முதல் பிரதி எடுத்திருக்க வேண்டும். இது எதுவுமே நடக்கவில்லை ஜில்லாவை பொருத்தவரை. இப்போதுதான் எடிட்டரை மாற்றியிருக்கிறார்கள். அவர் படத்தை முடித்து அதற்கப்புறம் பிற வேலைகள் நடந்து.... ஹ்ம்ம்ம்.... மலைப்பாகதான் இருக்கிறது.

Posted at 10:44 AM |  by Unknown

கிங்காங் மேக்கப்பில் விக்ரம்!

                                                                                                                                                            
சீனாவை கொடைக்கானலுக்கே கொண்டு வந்திருக்கிறார் ஷங்கர்.எல்லாம் 'செட்' செய்யும் மாயம். ஐ படத்தை சுமார் 100 கோடி பட்ஜெட்டில் எடுத்து வருகிறார் ஷங்கர். எந்திரன் படத்திற்கு பிறகு இவர் இயக்குகிற படம் என்பதால் இப்பவே தாறுமாறாக எகிறிக்கிடக்கிறது எதிர்பார்ப்பு.
படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் எப்படியாவது ரஜினி கால்ஷீட் வாங்கிவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார். ஷங்கரின் இந்த படம் முடிந்ததும் மீண்டும் ஷங்கரும் ரஜினியுமே இணையக் கூடிய சூழ்நிலை கசிந்து வருகிறதாம். அதையும் கைப்பற்றும் நோக்கத்தோடு ஷங்கர் கேட்பதையெல்லாம் வாரி வாரி கொடுத்துக் கொண்டிருக்கிறார். (இல்லையென்றால் மட்டும் ஷங்கர் விட்டு விடுவாரா என்ன?)
                            
இந்த நிலையில் படத்தின் ஹீரோ விக்ரமை ஒரு காட்சியில் 'கிங்காங்' ஆக்கிவிட்டாராம் டைரக்டர். சென்னையில் போடப்பட்டிருக்கும் பிரமாண்டமான இன்னொரு செட்டில் இதற்கான காட்சியை எடுத்து முடித்தார்களாம்.
இப்படி விக்ரமை கிங்காங் ஆக்குவதற்கு ஆன மேக்கப் செலவு எவ்வளவு தெரியுமா? எழுபது லட்சம்! படத்தில் ஒரு சில வினாடிகள் மட்டுமே வரப்போகும் இந்த காட்சிக்காக ஏகப்பட்ட துணை செலவுகளையும் வைத்துக் கொண்டிருக்கிறாராம் அவர். ஷங்கர் படம் என்றால் டிஷ்யூ பேப்பர் செலவே லட்சங்களில் அடங்கும். இதெல்லாம் ஜுஜிபி! 

Posted at 10:32 AM |  by Unknown

ஜில்லாவை திருட்டு விசிடி…இல்லை… இல்லை டிவிடியில பாருங்கள் உளறிக்கொட்டிய தயாரிப்பாளர் ஜீவா!

jeevaதன்னுடைய 30வது பிறந்தநாள் விழா மேடையில் உதவிகள் வழங்கிவிட்டு பேசிய ஜீவா, ஜில்லா படத்தை திருட்டு விசிடியில பாருங்க என்றுவிட்டு திடுக்கிட்டவராய் இல்லை இல்லை திருட்டு டிவிடியில பாருங்க என்றார்..மீண்டும் தவறை உணர்ந்தவர் விஜய் அஜீத் படம் பற்றி பேசினாலே இப்படி தடுமாற்றம் வருகின்றது என சமாளித்தவர் அனைவரும் படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் என ஒருவாறு முடித்தார்.  இந்த படத்தை தயாரித்திருப்பது இவரது தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

Posted at 7:10 PM |  by Unknown

தமிழ் புத்தாண்டை குறிவைக்கும் ஐ!

விக்ரம், தமிழ் சினிமாவால் புறக்கணிக்கப்பட்டு பாலா என்ற இயக்குனரால் திரையுலகத்தில் நிலைநிறுத்தப்பட்டவர். 

கதாபாத்திரத்திற்காக தன் உடலை இந்த அளவிற்கு வறுத்தி நடிக்கும் கலைஞர்கள் தற்போதைய திரையுலகில் சொற்பமானவர்களே. அதில் முக்கியமானவர் விக்ரம். 

பல மெகா ஹிட் திரைப்படங்களில் நடித்துவிட்ட விக்ரம் தற்போது அந்நியன் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஷங்கருடன் இணைந்திருக்கிறார். 

பல கட்டங்காளாக, உலகின் பல்வேறு நாடுகளில் படமாக்கப்பட்ட ஐ திரைப்படம் தற்போது கடைசிகட்ட படப்பிடிப்பை நெருங்கி இருக்கிறது. 

சில வாரங்களில் படப்பிரிப்பு முடிந்ததும் வௌியீட்டுக்கான பணிகள் தொடங்கிவிடும் எனவும், தமிழ்ப்புத்தாண்டில் இத்திரைப்படம் வௌியாகிவிடும் எனவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்த, ஐ படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்திருக்கிறது திரையுலகம்.  விக்ரம், ஏமி ஜாக்சன் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 
             

Posted at 7:00 PM |  by Unknown
Copyright © 2013 Batti Tamil. WP Theme-junkie converted by BloggerTheme9
Blogger template. Proudly Powered by Blogger.
back to top