
படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் எப்படியாவது ரஜினி கால்ஷீட் வாங்கிவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார். ஷங்கரின் இந்த படம் முடிந்ததும் மீண்டும் ஷங்கரும் ரஜினியுமே இணையக் கூடிய சூழ்நிலை கசிந்து வருகிறதாம். அதையும் கைப்பற்றும் நோக்கத்தோடு ஷங்கர் கேட்பதையெல்லாம் வாரி வாரி கொடுத்துக் கொண்டிருக்கிறார். (இல்லையென்றால் மட்டும் ஷங்கர் விட்டு விடுவாரா என்ன?)

இந்த நிலையில் படத்தின் ஹீரோ விக்ரமை ஒரு காட்சியில் 'கிங்காங்' ஆக்கிவிட்டாராம் டைரக்டர். சென்னையில் போடப்பட்டிருக்கும் பிரமாண்டமான இன்னொரு செட்டில் இதற்கான காட்சியை எடுத்து முடித்தார்களாம்.
இப்படி விக்ரமை கிங்காங் ஆக்குவதற்கு ஆன மேக்கப் செலவு எவ்வளவு தெரியுமா? எழுபது லட்சம்! படத்தில் ஒரு சில வினாடிகள் மட்டுமே வரப்போகும் இந்த காட்சிக்காக ஏகப்பட்ட துணை செலவுகளையும் வைத்துக் கொண்டிருக்கிறாராம் அவர். ஷங்கர் படம் என்றால் டிஷ்யூ பேப்பர் செலவே லட்சங்களில் அடங்கும். இதெல்லாம் ஜுஜிபி!