திடீர் வயிற்றுவலி காரணமாக நடிகை ஸ்ருதிஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஸ்ருதி தெலுங்கு, ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் அவர் நடித்த ஏவடு படம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. ரேஸ் குர்ரம் படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்து வருகிறார். சுரேந்தர் ரெட்டி படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டார் ஸ்ருதி. உடனே அவரை ஹைதராபாத் ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஸ்ருதிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.