All Stories

Text Widget

Ads300x250

Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

இங்கிலாந்தில் தமிழரின் கடையில் திருட வந்த முகமூடி திருடர்களுக்கு தர்ம அடி (வீடியோ இணைப்பு)

இங்கிலாந்தில் ரொக்கர் சாலையில் அமையப் பெற்றுள்ள தமிழர் ஒருவரின் கடையினுள் முகமூடி அணிந்த திருடர்கள் நுழைந்து, பணம் கேட்டு அச்சுறுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் கடந்த ஞாயிறு இரவு 8.15 மணியளவில் இடம்பெற்றது.
திருடர்கள் அவரை தொடர்ச்சியாக அச்சுறுத்தி அவருடைய பணப்பெட்டியினை திறந்து அதனுள் உள்ள பணத்தை தங்களின் பையினுள் இடுமாறு அச்சுறுத்தியுள்ளனர்.
அச்சமயம் சுதாரித்துக்கொண்ட கடை உரிமையாளரான ராசரத்தினம்
ராகுலன், அவர்களை நில துடைப்பான் பிடியினால் தாக்கியுள்ளார்.
இச்சம்பவம் சிசிடிவி கமெராவில் கருவியில் பதிவாகியுள்ளது. இக்காட்சிகளின் அடிப்படையிலேயே ஞாயிறு இரவு கடையினுள் உட்புகுந்த திருடர்களை அடையாளங்காணும் செயற்பாடுகள் நடைபெறுகின்றது.
ராசரத்தினம் ராகுலனின் கடை திறக்கப்பட்ட கடந்த மூன்று ஆண்டுகளில் இது இரண்டாவது திருட்டுச்சம்பவமாகும்.

Posted at 8:26 AM |  by Anonymous

விமானத்தை கண்டுபிடிக்க சூனியக்காரரின் உதவியை நாடியது மலேசியா

மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க சூனியக்காரரின் உதவியை நாடியுள்ளது மலேசியா.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் சென்ற விமானம் கடந்த 7ம் திகதி நள்ளிரவு காணாமல் போனது.
இதுவரையில் எவ்வித தடயங்களும் கிடைக்கப்பெறவில்லை, 239 பேர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.
இந்நிலையில் மலேசியா, விமானத்தை கண்டுபிடிக்க பிரபல சூனியக்காரரான இப்ராஹிம் மத் ஜின் என்பவரின் உதவியை நாடியுள்ளது.
அந்த நபர் விமானம் கிளம்பிய கோலாலம்பூர் விமான நிலையத்தில் பூஜை நடத்தியுள்ளார். அவரை இந்த பூஜையை செய்ய நாட்டின் முக்கிய தலைவர்கள் தான் அழைத்ததாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் ஒரு கையில் மீன் வலையையும், மறுகையில் மூங்கில் பைனாகுலரையும் வைத்து விமானத்தை தேடியுள்ளார்.
விமானம் பற்றி அந்த சூனியக்காரர் கூறுகையில், விமானம் தற்போதும் பறந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன், இல்லை என்றால் கடலில் விழுந்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மாயமான மலேசிய விமானம் ரேடார் தொடர்பை இழந்த பின்னும் நான்கு மணி நேரங்கள் தாழ்வானபகுதியில் வானில் பறந்துள்ளது என்று அமெரிக்க விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர் என்று அந்நாட்டு வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை தகவல் தெரிவித்துள்ளது.
மாயமான விமானத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களை கொண்டு இந்த சந்தேகம் எழுந்துள்ளது. விமான கன்ட்ரோல் அறைக்கு தன்னிச்சையாக தகவல்களை அனுப்பும் விமானத்தின் கருவியின் தகவல்களை கொண்டு இந்த சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால் விமானம் கடத்தி மறைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Posted at 8:22 AM |  by Anonymous

மாயமான விமானமா? செயற்கைகோள் படங்களை வெளியிட்டது சீனா

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு புறப்பட்ட விமானம், கடந்த 7ம் திகதி நள்ளிரவு மாயமானது.
இதில் பயணம் செய்த 239 நபர்களின் கதி என்ன ஆனது என்றே தெரியவில்லை, மாயமான விமானத்தை கண்டுபிடிக்க மலேசியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 12 நாடுகள் 39 விமானங்கள் மற்றும் 42 கப்பல்களை தேடும் பணியில் ஈடுபடுத்தியுள்ளன.
விமானம் வியட்நாம் வான் பகுதியில் தெற்கு சீன கடலில் விழுந்திருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது.
பின்னர் மலாக்கா கடல் பகுதியில், அந்த விமானம் கடைசியாக பறந்ததாக மலேசிய ராணுவம் தெரிவித்தது.
இதையடுத்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தியும், எதுவும் கண்டறியப்படவில்லை.
இந்நிலையில் வியட்நாமின் தெற்கு முனை மற்றும் மலேசியாவின் கிழக்கு பகுதிக்கு இடையில், கடந்த 9ம் திகதி காலையில் செயற்கைக்கோள் எடுத்த படங்களில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் 3 பொருட்கள் மிதப்பது தெரியவந்துள்ளது.
அது காணாமல் போன விமானத்தின் பாகங்களாக இருக்கும் என கருதப்படுகிறது. ஆயினும் இதுகுறித்து மலேசியா அரசு எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் அளிக்கவில்லை.

Posted at 8:21 AM |  by Anonymous

இருளில் மூழ்கிய வட அவுஸ்திரேலியா

வட அவுஸ்திரேலியாவிலுள்ள துணை மின்நிலையம் ஒன்றின் மின்னிணைப்பில் நேற்று அதிகாலை ஏற்பட்ட கோளாறினால், அந்தப் பகுதியின் பெரிய நகரமான டார்வினையும் அதனைச் சுற்றி 300 கி.மீ தொலைவு வரையிலுள்ள சிறு நகரங்களையும் செயலிழக்க வைத்தது.
இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இருந்த அரசாங்க அலுவலகங்கள் இயங்கவில்லை. பேருந்துப் போக்குவரத்து வலையமைப்பு பாதிக்கப்பட்டதால் பேருந்துகளும் இன்று செயல்படவில்லை. நீதிமன்றங்கள் மற்றும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. போக்குவரத்து சிக்னல்கள் அனைத்தும் இதில் பாதிக்கப்பட்டதால் வாகனங்களில் சென்றவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். சாலை சந்திப்புகளில் காவலர்கள் போக்குவரத்தைக் கண்காணித்தனர்.
நகரின் மருத்துவமனைகளும், விமான நிலையமும் ஜெனரேட்டர் உதவியுடன் இயங்கின. பொதுத் துறை ஊழியர்கள் அனைவரும் அவர்களுடைய அலுவலகம் அறிவிக்கும்படி வீட்டில் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இன்றைய நீட்டிக்கப்பட்ட செயலிழப்பினால் சிரமத்திற்கு உள்ளான பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்ட மின் மற்றும் நீர் வழங்குதுறை சமூகத்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய அதன் அவசர மேலாண்மை நெறிமுறைகளைத் திரட்டியுள்ளதாக குறிப்பிட்டது. 1,30,000 பேர் வசித்துவந்த பகுதியைப் பாதித்த இந்த மின்வெட்டு தெற்கே உள்ள கேத்தரின் நகரம் வரை பாதிப்பை ஏற்படுத்தியது.

கிட்டத்தட்ட 12 மணி நேரம் கழித்து இணைப்புகள் சரி செய்யப்பட்டு மின்சாரம் முறையாக வழங்கப்பட்டதாகத் தெரிவித்த வடக்கு மாகாண அரசு இதுகுறித்து ஒரு விசாரணை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Posted at 8:19 AM |  by Anonymous

மனைவி, மகள்களுக்காக ஷாப்பிங் செய்த ஒபாமா

அமெரிக்காவில் இந்த ஆண்டு மத்தியில் நடக்க உள்ள பாராளுமன்றத் தேர்தல்களுக்காக நிதி திரட்டும் கூட்டங்களில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ஒபாமா, நியூயார்க் நகருக்கு சென்றார்.
கடுமையான பணி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அங்குள்ள ஒரு கடைக்கு சென்று அவர் தனது மகள்கள் சஷா, மலியா, மனைவி மிச்செல்லிக்கு உடைகளை தேர்வு செய்து வாங்கினார். மகள்களுக்கு மேலாடை வாங்குகிறபோது, ‘வி’ வடிவ கழுத்து அமைப்பு கொண்ட உடை வாங்கினால் அது நழுவும் என கவலைப்பட்டார்.
அதற்காக வழக்கமான வடிவத்திலான கழுத்து அமைப்பு கொண்ட உடைகள் வாங்கினார். இதே போன்று மனைவிக்கு தான் உடைகள் தேர்வு செய்து வாங்குவது கடினம் என்று கூறினார். இருப்பினும் மனைவிக்கு அவர் காலுறைகள் வாங்கினார்.
அவர் மனைவி, மகள்களுக்காக உடைகள் வாங்கியதை பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள், உளவுபடையினர் வேடிக்கைப் பார்த்தனர். அப்போது ஒபாமா, “எனது உடை தேர்வு பெண்களுக்கு பிடிக்கும்” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

Posted at 8:17 AM |  by Anonymous

விமான விபத்து- போலி பாஸ்போர்ட்டில் 4 பேர் பயணம்? திட்டமிட்ட சதிச் செயலா?

மலேசிய விமானம் விபத்திற்குள்ளானதில் பயங்கரவாத அமைப்புகளின் கைவரிசை காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைவர் பீஜிங்கிற்கு சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமாகிவிட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த விமானம் கடலில் விழுந்ததில் பயணம் செய்த 239 பேர் இறந்து விட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இதுகுறித்து மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் நடத்திய விசாரணையில், மாயமான விமானத்தில் பயணம் செய்த 4 பேர், போலி பாஸ்போர்ட்டில் பயணித்துள்ளது தெரியவந்துள்ளது.
இதனால் விமானம் மாயமானதில், பயங்கரவாத அமைப்புக்களின் கைவரிசை இருக்குமோ என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

Posted at 6:06 PM |  by Anonymous

239 பயணிகளுடன் சென்ற விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது

239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்ற விமானம் நடுவழியில் கடலில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி பயணித்த இந்த விமானத்தில் 239 பயணிகள் இருந்ததாக விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விமானத்தை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக மலேசிய விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டு சிறு பிள்ளைகள் அடங்கலாக 227 பயணிகளும் 12 விமான பணியாளர்களும் இந்த விமானத்தில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோலாலம்பூரிலிருந்து புறப்பட்டு இரண்டு மணித்தியாலங்களில் இந்த விமானம் காணாமல் போயுள்ளது.
ஆசியாவில் மிகப்பாரிய விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான மலேசிய விமான சேவை, நாளாந்தம் 37 ஆயிரம் பயணிகள் வரை பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு செல்லும் வழியில் வானில் மாயமான விமானம் கடலில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
பயணிகளை ஏற்றிச்சென்ற போயிங் விமானம் வியட்நாமில் உள்ள தோ சு தீவில் ப விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் 227 பயணிகள் உட்பட 239 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சீனாவிலிருந்து 2 மீட்புக் கப்பல்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன, விமானத்தில் 154 சீனர்கள் உட்பட 13 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பயணித்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் சென்ற விமானம் மாயமாகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை எம்.எச் 370 விமானம் இழந்தது.
மாயமான விமானத்தை தேடும் பணியில் சர்வதேச விமான ஆணையமும் மும்முரமாக ஈடுபட்டது, விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களில் வியட்நாம் வான்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்தது.

Posted at 1:26 PM |  by Anonymous

சர்வதேச மகளிர் தினத்தில் சோக செய்தி! பாலியல் கொடுமை அதிகரிப்பு

உலகில் உள்ள பெண்களில் 10 பேரில் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாக ஐரோப்பிய யூனியன் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி 15 முதல் 74 வயது வரையுள்ள பெண்களிடம் நடத்திய நேரடி ஆய்வு அறிக்கையை ஐரோப்பிய யூனியன் வெளியிட்டுள்ளது.
பதினைந்து வயதிற்கு கீழுள்ள பெண்களில் 20 பேரில் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். இவர்களில் 12 சதவீதத்தினர் மட்டுமே பாதிக்கப்பட்டதை தெரிவித்துள்ளனர்.
உறவினர்களால் 27 சதவீத குழந்தைகள் செக்ஸ் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். முன்னாள் மற்றும் இந்நாள் கணவர்களால் கொலை மிரட்டல், சுதந்திரத்தில் தலையிடுதல் மற்றும் அவமானப்படுத்துதல் போன்ற மன ரீதியாக துன்புறுத்தப்படுவதாக 43 சதவீத பெண்கள் கூறியுள்ளனர்.
ஐரோப்பிய யூனியன் நாடுகளில் மட்டும் 90 லட்சம் பெண்கள் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், இவர்களில் 7 பேரில் ஒருவர் மட்டும் தன் குடும்பத்தாரிடமும், பொலிசிலும் தெரிவித்துள்ளனர்.

Posted at 1:23 PM |  by Anonymous

மனித வெடிகுண்டாக மாறிய 10 வயது சிறுமி அதிரடி மீட்பு!!!

காபூல்:ஆப்கானிஸ்தான் நாட்டில் தனது சொந்த அண்ணனாலேயே மனித வெடிகுண்டாக மாற்றப்பட்டு தற்கொலை படை தாக்குதலுக்கு கொண்டு செல்லப்பட்ட 10 வயது சிறுமியை பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.ஆப்கனில் 10 வயதுக்கும் குறைவான சிறுவர், சிறுமிகளை மனித வெடிகுண்டாக பயன்படுத்தி தலிபான் தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுபோல் 2 தினங்களுக்கு முன்பு எல்லை பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் மனித வெடிகுண்டாக மாறிய சோப்ஸ்மாய் (10) என்ற சிறுமியை பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
     
 
இதுகுறித்து ஆப்கன் உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் சையது சித்திக் கூறுகையில், Ôதலிபான் தீவிரவாதிகளின் உயர் மட்ட தளபதியாக விளங்கும் ஒருவர் தனது 10 வயது தங்கையை மனித வெடிகுண்டாக மாற்றி அனுப்பி யுள்ளார். அந்த சிறுமிக்கு பட்டனை எப்படி இயக்குவது என்பது கூட தெரியவில்லை. பெரும் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பாக பாதுகாப்பு படையினர் அந்த சிறுமியை மீட்டு உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்Õ என்றார்.சிறுமி சோப்ஸ்மாய் டிவிக்கு அளித்த பேட்டியில், தலிபான் தீவிரவாதியான தனது அண்ணன் தான் தன்னை அனுப்பி வைத்ததாக உறுதிப்படுத்தினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு அதிபர் மாளிகையில் நடைபெற்ற விழா ஒன்றில் இது போல் தலிபான்களால் தற்கொலை படைக்கு பயன்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட ஏராளமான சிறுவர், சிறுமிகளை அதிபர் ஹமீத் கர்சாய் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted at 8:42 AM |  by Unknown

நடுரோட்டில் ஒரு பெண்ணை சீண்டினால் என்ன நடக்கும் தெரியுமா?....





Posted at 10:26 AM |  by Unknown

அமெரிக்காவில் உறைபனி மேலும் பல பகுதிகளுக்குப் பரவுகிறது!

அமெரிக்காவின் சில பகுதிகளில் நிலவும் கடுங்குளிர் நாட்டின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை நோக்கிப் பரவிக்கொண்டிருக்கிறது.

நியுயார்க் மற்றும் வாஷிங்டன் நகரங்களும் இந்த ஆர்க்டிக் குளிர் காற்றால் உறைந்துள்ளன. வெப்பநிலை வேகமாகக் குறைந்துவரும் நிலையில், நியுயார்க் மாநில ஆளுநர் அண்ட்ரூ குவொமோ சில பெரிய நெடுஞ்சாலைகள் மூடப்படும் என்றார். கடுமையான வானிலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, ஆயிரக்கணக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. பல லட்சக்கணக்கான மக்கள் வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை, மின்னெசோட்டா மாநிலத்தில் பாபிட் நகரில் மிகக் குளிரான சீதோஷ்ண நிலை நிலவியது (-38 டிகிரி செல்சியஸ்) .
குளிரான காற்று , ஏற்கனவே நிலவும் கடுங்குளிரை மேலும் குளிராக இருப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது.

Posted at 5:34 PM |  by Unknown

காதலிக்கு அதிர்ச்சி அளிக்க நிர்வாணமாக வாஷிங் மெஷினில் ஒளிந்தவர் சிக்கி தவிப்பு!

மெல்போர்ன்,
ஆஸ்திரேலியாவின் வடக்கு மெல்போர்னில் வாலிபர் ஒருவர் தனது காதலிக்காக வீட்டில் காத்திருந்தார். காதலிக்கு அதிர்ச்சி அளிக்குமாறு செய்ய வாஷிங் மெஷினுக்குள் நிர்வாணமாக ஒளிந்து கொண்டுள்ளார். பின்னர் அவரால் அங்கிருந்து வெளியே வரமுடியவில்லை. பலமாக சிக்கி கொண்டார். இதனை அடுத்து அந்நாட்டு தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து முகம் சுழித்தனர். பின்னர் எண்ணெய் உதவியுடன் வாலிபரை உயிருடன் வெளியே கொண்டு வந்தனர்.
விளையாட்டுக்காக வாஷிங் மெஷினுக்குள் சென்ற வாலிபர் பலமாக சிக்கி தவித்துள்ளார். தீயணைப்பு வீரர்களின் போராட்டத்தினால் 20 நிமிடங்கள் கழித்து மீட்கப்பட்டுள்ளார்.

Posted at 5:10 PM |  by Unknown

நாசா விண்வெளி ஆய்வு நிலையத்தைக் காப்பாற்ற முயன்று வரும் 6 வயது சுட்டிப் பையன்

கொன்னொர் ஜோன்சன் எனும் 6 வயதுச் சுட்டிச் சிறுவன் ஒருவன் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவைக் காப்பாற்ற மேற்கொண்டு வரும் முயற்சி சமீபத்தி ஊடகக் கவனம் பெற்று அனைவரையும் ஈர்த்துள்ளது.
3 வயது முதற்கொண்டே தான் ஒரு விண்வெளி வீரனாக வர வேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்த இச்சிறுவன் அப்படி என்ன பெரிதாக சாதித்து இந்தப் புகழைப் பெற்றுள்ளான் என சிந்திக்கிறீர்களா? மேற்கொண்டு வாசியுங்கள்..

சமீபத்தில் அமெரிக்க காங்கிரஸ் பொருளாதார நெருக்கடியால் நாசா விண்வெளி ஆய்வு நிலையத்தின் சில முக்கிய வருங்காலத் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டங்களை ரத்து செய்தது. இதை எப்படியோ கேள்விப்பட்ட இச்சிறுவன் இது வருங்காலத்தில் தான் ஒரு விஞ்ஞானியாக அல்லது விண்வெளி வீரனாக வரும் கனவையும் பாதிக்கக் கூடியது என்ற கோணத்தில் சிந்தித்ததால் பெற்றோரின் உதவியுடன் இவன் மேற்கொண்ட முயற்சி தான் ஊடகக் கவனம் பெற்றுள்ளது.

இது பற்றி இச்சிறுவனே இப்படிக் கூறியுள்ளான்.. 'எனது முழுத் திட்டமும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு இது குறித்து புகார் அளிக்கவுள்ளதுடன் எனது வங்கிக் கணக்கில் உள்ள 10.41 டாலர் முழுவதையும் நாசாவுக்காக அர்ப்பணிக்கவுள்ளேன்' இவ்வாறு யோசித்த இச்சிறுவனின் ஆர்வத்தைப் பாராட்டிய பெற்றோர் இந்த முயற்சிக்கும் மேலும் வலுச் சேர்க்கும் வண்ணம் இவ்வாறு அவனுக்கு வழிகாட்டியுள்ளனர். அதாவது அமெரிக்க அரச நிர்வாகம் மையம் கொண்டு இயங்கும் வெள்ளை மாளிகைக்கு தனது வேண்டுகோளை அங்கீகரிக்குமாறு சுமார் 100 000 கையெழுத்துக்களுடன் கூடிய மனுவை (Petition) கையளிப்பது என்று இச்சிறுவனுக்கு அவர்கள் ஆலோசனை அளித்தனர்.

இச்செயற்திட்டத்தை சொந்தமாக முழுமையாக வடிவமைத்த ஜோன்சன் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்து இதுவரை 13 131 கையெழுத்துக்களை இணையத்தளமூடாக சேகரித்துள்ளான். மேலும் தன்னால் ஒரு இலட்சம் கையெழுத்துக்களை டிசம்பர் 29 இற்குள் சேகரித்து அமெரிக்க அரசை இணங்க வைக்க முடியும் என நம்பிக்கையுடன் சொல்கிறான் இச்சிறுவன். சிறு துளி பெரு வெள்ளம் என்ற பழமொழிக்கு முன்னுதாரணமாக செயற்படும் இச்சிறுவனுக்கு உங்களாலும் உதவ முடியுமெனில் பின்வரும் இணையத்தளத்தை அழுத்திப் பாருங்கள்..

Posted at 2:32 PM |  by Unknown

தூக்கி வீசப்பட்ட பெண்ணின் மேல் ஏறிய கார் பதறவைக்கும் கொடூர விபத்து!!




Posted at 2:01 PM |  by Unknown

அமெரிக்காவும், இங்கிலாந்தும் எப்படி உங்கள் ரகசியங்களை கொள்ளையடிக்கின்றார்கள் தெரியுமா?







Posted at 7:17 PM |  by Unknown

சிரிய நாட்டில் புதிய பிரபாகரன், அதிர்ச்சி ரிப்போர்ட்!

ரியாவை சேர்ந்த 10 வயது சிறுவன் இஸ்ஸா. இவர் இந்நாட்டு தீவிரவாதிகளுக்காக ஆயுதங்கள் உருவாக்கிக் கொடுக்கின்றார்.
இவரால் போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட அலெப்போ நகரத்தில் வாழ்ந்து வருகின்றார்.

This is Issa. He is a 10-year-old Syrian boy.



Issa makes mortars to be used by the Free Syrian Army.


 Issa machines his own mortar shells.

The machining is difficult and dangerous.



Issa, A 10-Year-Old Boy Making Arms For Syrian Rebels 


And the work is dangerous. 

And eats dinner with his family in the dark.

This is Issa’s life.

Issa is just one of many young fighters of the Syrian revolution….

Posted at 10:18 AM |  by Unknown

கேரளாவில் சிலந்தியாக மாறும் அதிசய சிறுமி! (video இணைப்பு)

இந்தியாவில் கேரளா மாநில சிறுமி ஒருத்தி குறித்த அதிசய பதிவு இது.
இவரின் பெயர் ஆன் மேரி. வயது 08.
சிலந்திச் சிறுமியாக சாகசங்கள் புரிகின்றார்.
மிகவும் இலாவகமாக சிலந்தி போல சுவர்களில் ஏறுகின்றார்.




Posted at 5:51 PM |  by Unknown

எகிப்தில் 52 தேவாலயங்கள் தீயிட்டு எரிப்பு: பதற்றம் அதிகரிப்பு

எகிப்தில் பிரசித்த பெற்ற கன்னி மரியாள் தேவாலயம் உட்பட 52 தேவாலயங்களை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் முகாமிட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி முர்சியின் முஸ்லிம் பிரதர்குட் இயக்கத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களை கலைக்க இராணுவம் முற்பட்டது.

அப்போது பாதுகாப்பு படையினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியதில், 638 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதில் பலரின் நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனையடுத்து எகிப்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே அரசப் படைகளுக்கும், முர்சியின் ஆதரவாளர்களுக்கும் இடையே நடைபெறும் உள்நாட்டு போர் கடந்த இரு நாட்களாக மெல்ல மெல்ல மதக்கலவரமாக மாறி வருகிறது.

பிரசித்தி பெற்ற கன்னி மரியாள் தேவாலயம் உள்பட தெற்கு எகிப்தில் உள்ள அசியுட், மினியா போன்ற இடங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை போராட்டக்காரர்கள் தீயிட்டு எரித்துள்ளனர்.

மேலும் தேவாலயங்களை ஒட்டியுள்ள கிறிஸ்தவ நூல்கள் விற்பனை மையங்களும் தீக்கிரையாகியுள்ளன.

இதுவரை 52 தேவாலங்களின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால் எகிப்தில் வாழும் கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் கலவரம் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Posted at 1:03 AM |  by Admin

அகதிகள் படகு மூலம் புகலிட கோரிக்கை: புதிய திட்டம் அறிமுகம்

அவுஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் ரோனி அபொட் புதியதொரு குடிவரவுத் திட்டத்தை அறிவித்துள்ளார்.
தேர்தலுக்கு மூன்று வாரங்கள் எஞ்சியிருக்கும் நிலையில் இன்று அறிவிக்கப்பட்ட குடிவரவுத் திட்டம் பல கடுமையான ஏற்பாடுகளைக் கொண்டதாக அமைந்துள்ளது.

தேர்தலில் தாம் வெற்றி பெறும் பட்சத்தில், ஆட்கடத்தல்காரர்களையும், புகலிடக் கோரிக்கையுடன் படகுமூலம் வருவோரையும் கையாள்வதற்காக இராணுவ கட்டளைத் தளபதியொருவரை நியமிக்கப் போவதாக அபொட் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டம் Operation Sovereign Borders என்ற பெயர் கொண்டு அழைக்கப்படும். இனிமேலும் புகலிடக் கோரிக்கைகளுடன் எவரும் அவுஸ்திரேலியாவிற்குள் வரவிடாமல் தடுப்பது இதன் நோக்கமாகும்.

புகலிடக் கோரிக்கையுடன் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்து, இன்னமும் விசாரிக்கப்படும் வெளிநாட்டவர்களின் வழக்குகளின் தேக்க நிலையை கையாளும் ஏற்பாடு பற்றியும் தமது பேச்சாளருடன் ரோனி அபொட் விபரித்தார்.

இதன் பிரகாரம், அவுஸ்திரேலியாவில் தமது அகதி அந்தஸ்து தீர்மானிக்கப்படும் வரையில் காத்திருக்கும் சுமார் 30,000 பேர் நிரந்தர வதிவிட உரிமைகளைப் பெற மாட்டார்கள். உண்மையான அகதிகளென எவரேனும் தீர்மானிக்கப்படும் பட்சத்தில், அவருக்கு தற்காலிக விசா வழங்கப்படும். அகதி அந்தஸ்து நிராகரிக்கப்படுமானால், அத்தகைய ஒருவர் மேன்முறையீடு செய்யவும் முடியாது.

புகலிடம் என்பது அவுஸ்திரேலியாவில் மிகவும் உணர்வுபூர்வமான விடயமாக நோக்கப்படுகிறது. அது தேர்தல் பிரசாரத்தில் மிகவும் பேசப்படும் விவகாரமாகவும் மாறியிருக்கிறது. தேர்தல் செப்ரெம்பர் 7ஆம் திகதி நடைபெறும்

Posted at 1:01 AM |  by Admin

வருங்காலத்தில் பெண் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியாக வரலாம்: மிஷெல் ஒபாமா பரபரப்பு பேட்டி

வருங்காலத்தில் பெண் ஜனாதிபதியை ஏற்றுக் கொள்ள அமெரிக்கா தயாராக உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிஷெல், பாரடே மேகசின் என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அப்போது, உங்கள் வாழ்நாளில் அமெரிக்காவின் பெண் ஜனாதிபதியை பார்க்க வாய்ப்புள்ளதா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு மிஷெல், அமெரிக்கா பெண் ஜனாதிபதியை ஏற்பதற்கு தயாராக உள்ளது, ஆனால் அந்த பதவிக்கு யார் தகுதியானர்கள் என்பது தான் கேள்வி என்று பதிலளித்துள்ளார்.

உடனே நிருபர்கள் ஜனாதிபதி பதவிக்கு நீங்கள் போட்டியிடுவீர்களா? என்று கேட்டதற்கு, அது போன்ற எண்ணம் இல்லை என தெரிவித்து விட்டார்.

அமெரிக்காவில் வருகிற 2016ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவார் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது.

இதை நினைவில் வைத்தே மிஷெல் ஒபாமா இவ்வாறு தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Posted at 12:59 AM |  by Admin
Copyright © 2013 Batti Tamil. WP Theme-junkie converted by BloggerTheme9
Blogger template. Proudly Powered by Blogger.
back to top