
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிஷெல், பாரடே மேகசின் என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அப்போது, உங்கள் வாழ்நாளில் அமெரிக்காவின் பெண் ஜனாதிபதியை பார்க்க வாய்ப்புள்ளதா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு மிஷெல், அமெரிக்கா பெண் ஜனாதிபதியை ஏற்பதற்கு தயாராக உள்ளது, ஆனால் அந்த பதவிக்கு யார் தகுதியானர்கள் என்பது தான் கேள்வி என்று பதிலளித்துள்ளார்.
உடனே நிருபர்கள் ஜனாதிபதி பதவிக்கு நீங்கள் போட்டியிடுவீர்களா? என்று கேட்டதற்கு, அது போன்ற எண்ணம் இல்லை என தெரிவித்து விட்டார்.
அமெரிக்காவில் வருகிற 2016ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவார் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது.
இதை நினைவில் வைத்தே மிஷெல் ஒபாமா இவ்வாறு தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.