இதுகுறித்து ஆப்கன் உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் சையது சித்திக் கூறுகையில், Ôதலிபான் தீவிரவாதிகளின் உயர் மட்ட தளபதியாக விளங்கும் ஒருவர் தனது 10 வயது தங்கையை மனித வெடிகுண்டாக மாற்றி அனுப்பி யுள்ளார். அந்த சிறுமிக்கு பட்டனை எப்படி இயக்குவது என்பது கூட தெரியவில்லை. பெரும் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பாக பாதுகாப்பு படையினர் அந்த சிறுமியை மீட்டு உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்Õ என்றார்.சிறுமி சோப்ஸ்மாய் டிவிக்கு அளித்த பேட்டியில், தலிபான் தீவிரவாதியான தனது அண்ணன் தான் தன்னை அனுப்பி வைத்ததாக உறுதிப்படுத்தினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு அதிபர் மாளிகையில் நடைபெற்ற விழா ஒன்றில் இது போல் தலிபான்களால் தற்கொலை படைக்கு பயன்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட ஏராளமான சிறுவர், சிறுமிகளை அதிபர் ஹமீத் கர்சாய் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.