All Stories

Text Widget

Ads300x250

Showing posts with label வினோதம். Show all posts
Showing posts with label வினோதம். Show all posts

சூப்பர்ஸ்டார் ரஜினியின் கலக்கலான கோச்சடையான் டிரைலர்.....




Posted at 5:21 PM |  by Anonymous

பெண்ணின் முத்தத்திற்கு இம்புட்டு போட்டியா?.....




Posted at 3:36 PM |  by Anonymous

மகள் செய்த கலாட்டா

தவறு செய்த தன் மகளை தானே சிறையில் அடைத்தார் இங்கிலாந்து நாட்டின் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்.
ஒரு சமயம்
அவரது மகள் குடித்துவிட்டு லண்டன் நகரின் முக்கிய வீதி ஒன்றில் கலாட்டா செய்து கொண்டிருந்தாள்.
இவளை வேடிக்கை பார்க்க ஒரு கூட்டமே கூடிவிட்டது, இதனால் போக்குவரத்தில் பெரும் இடையூறு ஏற்பட்டது.
போக்குவரத்து பொலிசார் வந்து விசாரித்த போது, அவள் பிரதமரின் மகள் என்பது தெரியவந்தது.
இதனால் நடவடிக்கை எடுப்பதற்கு பயந்து, பிரதமரிடமே விடயத்தை சொல்லிவிட வேண்டுமென முடிவு செய்தனர்.
தயங்கி தயங்கி ஒரு வழியாக பிரதமரிடம் சொல்லி விட்டனர்.
உடனே கோபம் கொண்ட வின்ஸ்டன், டியர் ஆபிசர்..பிரெஞ்சு வீதியும், பிரிட்டிஷ் நீதியும் நேரானவை என்பதை உலகமே அறியும்.
இந்த உண்மைக்கு களங்கம் ஏற்படுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
உடனே அவளை கைது செய்து சிறையில் அடையுங்கள். அத்துடன் இந்த செய்தியை அனைத்து பத்திரிக்கைகளிலும் வெளிவரச் செய்யுங்கள் என்று தெரிவித்தாராம்.

Posted at 6:09 PM |  by Anonymous

தொலைபேசி பிறந்த கதை

இன்றைய காலகட்டத்தில் தொலைபேசி இல்லாத நாட்களை நினைத்துக்கூட பார்க்க முடியாது….
ஒவ்வொருவரின் கைகளையும் அலங்கரித்துக் கொண்டிருக்கிறது, இந்த உன்னத சாதனத்தை உருவாக்கியவர் தான் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்…
கடந்த 1847ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் திகதி ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் என்னும் இடத்தில் பிறந்தார்.
சிறுவயதில் இருந்தே கல்வியில் ஆர்வம் காட்டி வந்தவர், படிப்பை



முடித்துவிட்டு தன் தந்தையோடு காது கேளாதவர்களுக்கு பேசக் கற்றுக் கொடுத்தார்.
அவருடைய 23வது வயதில் காசநோய் ஏற்படவே, பெல்லின் உடல்நிலை கருதி அவரது குடும்பம் 1870ம் ஆண்டுகளில் கனடா நாட்டிற்கு குடிபெயர்ந்தது.
இதற்கு அடுத்த வருடம் பாஸ்டன் பல்கலைகழத்தில் பேராசிரியராக வேலைக்கு சேர்ந்தார்.
அறிவியல் ஆராய்ட்சிகளில் ஆர்வம் கொண்டிருந்த பெல் தனது ஓய்வு நேரங்களில் ஏதாவது சோதனை செய்துகொண்டே இருப்பார்.
காது கேளாதோருக்கும், வாய் பேச முடியாதோருக்கும் நிறைய செய்ய வேண்டும் என்ற அவரது உந்துதல்தான் தொலைபேசி என்ற உன்னத கருவியை கண்டுபிடிக்க அவருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது.
ஒருவர் பேசுவதை மின்சக்தி மூலம் இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்ல முடியுமா என்று ஆராயத் தொடங்கினார்.
தனது உதவியாளர் வாட்சன் என்பவருடன் சேர்ந்து பெல் சோதனைகளில் ஈடுபட்டார்.
பெல் வீட்டின் மேல் அறையிலும் வாட்சன் கீழ் அறையிலும் இருந்து கொண்டு கம்பிவழி ஒருவர் இன்னொருவருடன் பேச முடியுமா என்று பல்வேறு முறைகளில் சோதனைகளை செய்து பார்த்தனர்.
அவர்களது முயற்சிகள் இரவும் பகலும் என்று நாள் கணக்கில் தொடர்ந்தன.
1876ம் ஆண்டு மார்ச் 10ம் திகதி மதியவேளை கீழ் அறையிலிருந்த வாட்சன் காதில் கருவியை வைத்துக்கொண்டு கேட்டுக்கொண்டு இருந்தார்.
திடீரென்று அந்த கருவியிலிருந்து குரல் கேட்கத் தொடங்கியது. பெல்லின் குரல்தான் “திரு.வாட்சன் தயவுசெய்து இங்கு வாருங்கள் நான் உங்களைப் பார்க்க வேண்டும்” வாட்சனால் பெல் பேசியதை தெளிவாகக் கேட்க முடிந்தது.
வியப்பை அடக்க முடியாத வாட்சன் கருவியை கீழே போட்டுவிட்டு ஒரு பள்ளிச் சிறுவனைப்போல் துள்ளிக்குதித்து மேல் மாடிக்கு ஓடி பெல்லிடம் விசயத்தை சொன்னார், பெல்லின் கனவு நனவானது.
பிறகு ஒரு மாத்திற்குள் இரண்டு எளிமையான டெலிபோன்களையும், ஒரு மைக்ரோபோனையும் கண்டுபிடித்தார்.
பின்னர் 1876ம் ஆண்டு பெல் தனது புதிய கண்டுபிடிப்புக்கு உரிமை வாங்க பதிவு அலுவலகத்திற்கு சென்றார்.
அதற்கு சற்று முன்னால் எலிசா கிரே என்பவர் எலக்ட்ரிகல் ஸ்பீச் மெஷின்-க்கு உரிமை வாங்கி சென்றதாக தெரிவித்தனர்.
10 வருடங்கள் கழித்து டெலிபோனை கண்டுபிடித்தது யார் என்று நீதிமன்றத்தில் இருவரும் வழக்கு தொடர்ந்தனர், அந்த வழக்கில் பெல் வெற்றி பெற்று பெரும் செல்வந்தர் ஆனார்.
தொலைபேசி மட்டுமின்றி அரசு நிறுவனத்தின் மூலம் பொட்டோ போன், ஆடியோ மீட்டர், மெட்டல் டிடக்டர், இன்டக்‌ஷன் பேலன்ஸ், வாக்ஸ் ரிகார்டிங் சிலிண்டர், கிராமபோன் போன்ற கருவிகளைக் கண்டுபிடித்தார்.
பெல் விமானம் கண்டு பிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால் அது அவருக்கு வெற்றி தரவில்லை, ஆனால் சில கண்டுபிடிப்புகளைச் செய்தார், விமானத்தின் எய்லிரான் என்ற பகுதியைக் கண்டுபிடித்தவர் பெல் ஆவார்.
பிறகு அவர் தன் வாழ்நாள் முழுவதையும் காது கேளாத குழந்தைகளுக்கு சேவை செய்வதற்கே அர்ப்பணித்தார்.
இவர் கண்டுபிடித்தவைகளில் பதினெட்டு வகை அறிவியல் சாதனங்களை மட்டுமே தனது பெயரில் காப்புரிமை பதிவுகளைச் செய்தார், இதர பன்னிரெண்டு வகைகளை மற்றவர்களின் பெயர்களில் காப்புரிமை பெற்றதாகச் சொல்லப்படுகிறது.
1920ல் தான் பிறந்த எடின்பெர்க் நகருக்கு வந்தபோது அந்த நகரம் பெல்லை கவுரவித்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து 1922 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 2ம் திகதி தனது 75 ஆவது வயதில் பெல் கனடாவில் காலமானார்.
அவர் நிறைவாகத்தான் இறந்திருக்க வேண்டும். ஏனெனில் அவரது கடைசிக் காலத்தில் அவரது கண்டுபிடிப்பான தொலைபேசி உலகம் முழுவதும், பட்டித்தொட்டிகளிலெல்லாம் பயன்படுத்தப்பட்டதை காணும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
ஆனால் தான் கண்டுபிடித்த தொலைபேசியை அவரே வெறுத்ததுதான் ஆச்சரியமான செய்தி. ஆம் பெல்லின் இறுதிக் காலங்களில் கிராமத்து வீட்டில் அவர் சோதனைகளில் ஈடுபட்டபோது தொலைபேசியை தொல்லையாகக் கருதி அதை செயல்படாமல் ஆக்கியதாக ஒரு வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது.
உலகையே சிறு கிராமமாக சுருக்கிய பெருமை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்லையே சாரும் என்று கூறினால் அது மிகையல்ல!...

Posted at 1:16 PM |  by Anonymous

ஆவிகள் உண்டா?

மந்திரம், தாயத்து என்று பேசுபவர்களைப் பற்றிக் கேட்டிருப்போம், ஆவிகளுடன் உரையாடுபவர்கள் சிலரையும் அறிந்திருப்போம். காத்து, கறுப்பு அடித்துவிட்டால் என்ன செய்வது என்று அட்வைஸ் செய்வதற்கு ஊருக்குள் ஒரு கமிட்டியும் போட்டிருப்போம். ஆனால் ஆவிகளை நீங்கள் பார்த்ததுண்டா? நீங்கள் செய்யும் பூஜைகள் பயத்திலா அல்லது உண்மையில் அவற்றை கண்டதாலா? இங்கே ஆவிகளைப் பற்றி சத்குரு பேசுகிறார்... மர்ம முடிச்சு அவிழ்கிறது!

FILE

எல்லோருக்கும் அமானுஷ்யமான தொடர்புகள் வைத்திருக்க ஆசை. கல்லூரி விடுதிகளில் ஆவியுடன் பேச முற்படும் முயற்சி அதிகமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். இளைஞர்களுக்கு இது சுவாரஸ்யமான பொழுதுபோக்கு போலிருக்கிறது.

ஆவிகளைச் சந்திக்க வேண்டும் என்று எனக்குச் சிறு வயதில் தோன்றிய ஆசை, கேளிக்கைக்காகத் தோன்றிய ஆசை அல்ல. மரணத்துக்குப் பின் என்ன என்பதை அறிந்து கொள்ள என்னுள் எழுந்த விழைவே அது. சுடுகாடுகளோடு அந்தத் தேடுதல் முடிந்துவிடவில்லை.

அமானுஷ்யமான நிகழ்வுகள் எங்கே நடப்பதாகக் கேள்விப்பட்டாலும், அங்கே தவறாமல் போய்விடுவேன். ஆவிகளின் நடமாட்டம் இருக்கிறது என்று சொல்லப்படும் கட்டடத்தில் நள்ளிரவுகளைக் கழிக்க நான் தயங்கியதில்லை. தன் ரத்தத்தை அருந்தக் கொடுத்து, ஆவிகளை வரவழைப்பதாகச் சொன்ன ஒருவருடன் பல அமாவாசை இரவுகளில் காத்திருந்து ஏமாந்திருக்கிறேன். அவருடைய ரத்தம் வீணாகியிருக்கிறதே தவிர, எந்த ஆவியும் வந்ததில்லை.

எனக்குத் தெரிந்த இளைஞனின் தந்தை, மனிதர்களைப் பீடித்த ஆவிகளைப் பிடித்து பாட்டில்களில் அடைத்துவிடுவார் என்று சொல்லக் கேட்டு, அவர் பின்னால் சிறிது நாட்கள் அலைந்தேன்.

ஒருமுறை அவருடைய தொழில் முறையை நேரில் காண வாய்ப்புக் கொடுத்தார். ஆவித் தொந்தரவு இருப்பதாகச் சொல்லப்பட்ட வீட்டில், தரையில் அரிசியால் பெரிது பெரிதாகக் கோலமிட்டார். அதன் ஐந்து முனைகளில் முட்டைகளை வைத்தார். ஏதேதோ மந்திரங்கள் சொல்லி, இரு கைகளையும் தட்டினார். பட்பட்டென்று ஐந்து முட்டைகளும் ஒரு சேர உடைந்தன. உடனே, விரல்களால் ஏதோ செய்து, அவர் கொண்டு வந்த பாட்டிலை பரபரப்பாக அழுத்தி மூடினார். அதற்குள் ஆவி சிறைப்பட்டுவிட்டதாகச் சொன்னார்.

அந்த வீட்டார் மகிழ்ந்து, அவருக்கு சகல மரியாதைகள் செய்து, அமர்க்களமான விருந்தும் கொடுத்தனர். ஆவியைப் பிடித்து அடைத்த அந்த பாட்டிலைத் திருடி வரக்கூட முயன்றேன். முடியவில்லை.

அன்றிரவு எனக்குத் தூக்கம் பறிபோயிற்று. அவரால் சிறைப்படுத்த முடிந்த ஆவியை ஏன் என்னால் பார்க்கக்கூட முடியவில்லை?

மறுநாள் கொய்யா மரத்தடிக்குச் சென்றேன். ஒரு கொய்யாவை உற்றுப் பார்த்து கைகளைத் தட்டினேன். என்ன ஆச்சர்யம்! அந்தக் கொய்யா அறுத்து விழுந்தது. அட, இவ்வளவு எளிதா? இனி கல்லடித்துப் பழங்களைப் பறிக்க வேண்டியதில்லையா? என் நண்பர்களைக் கூட்டி வந்து அவர்கள் கண்ணெதிரில் சில கொய்யாக்களைக் கைதட்டியே விழ வைத்தேன். ஆனால், என்னுள் ஏதோ ஒன்று அந்தச் செயலைத் தவிர்க்கச் சொல்லி வற்புறுத்தியது. அதன் பிறகு, அந்த வேலையில் ஈடுபடவில்லை.

சில உன்னத அனுபவங்கள் எனக்கு சாத்தியமான பிறகு, ஆவிகள் உண்டா என்ற கேள்விக்குத் தானாகவே விடை கிடைத்தது.

ஆவிகள் பற்றி என்னிடம் கேட்கப்படும் போதெல்லாம், "உங்கள் அனுபவத்தில் இல்லாத ஒன்றைப் பற்றிச் சொல்வதில் அர்த்தமில்லை" என்றே சொல்லி வந்திருக்கிறேன். இப்போதும் என் அனுபவங்களை வைத்து நீங்கள் எந்த முடிவுக்கும் வரத் தேவையில்லை.

தியானலிங்கம் நிர்மாணிக்கப்பட்டபோது மிக சக்தி வாய்ந்த சூழல் அமைந்திருந்தது. அங்கே பல ஆவிகள் தாமாகவே இழுக்கப்பட்டன.

உடலோடு இருக்கையில், உங்கள் விருப்பப்படி நடந்து கொள்ள வாய்ப்புகள் அதிகம். உடலற்ற நிலையில், உள்பதிந்த குணங்களை ஒட்டி, ஆவிகள் பல்வேறு சூழல்களுக்கு இழுக்கப்படுகின்றன.

அப்போது மட்டுமல்ல... சில சந்தர்ப்பங்களில் ஆவிகள் என்னுடன் தொடர்பு வைத்திருக்கின்றன. ஆனால், அது பற்றியெல்லாம் விரிவாகப் பேசினால், அது உங்களுள் பல கற்பனைகளைக் கிளப்பும் என்பதால் தவிர்க்கவே விரும்புகிறேன்.
ஆவிகள் இருப்பது நிஜம். ஆனால், அவை தலைகீழாகத் தொங்கும். இரண்டு கொம்பு முளைத்திருக்கும். உங்கள் ரத்தத்தை உறிஞ்சிக் குடித்துவிடும் என்றெல்லாம் உலவும் கதைகளை நம்பி இருட்டு மூலைகளில் அச்சம் கொள்ளாதீர்கள்.

கடவுளிடம் உங்கள் பிரார்த்தனைகளைக் கொண்டு சேர்ப்பதாகச் சொல்லி சில இடைத்தரகர்கள் பிழைப்பது போல, ஆவிகளுடன் பேசுவதாகச் சொல்லியும் சில இடைத்தரகர்கள் பிழைப்பு நடத்துகின்றனர்.

அப்பாவின் ஆவி வந்தது. பாட்டியின் ஆவி வந்தது என்பதெல்லாம் கற்பனை. மரணத்தில் உடலைத் துறந்த பின், உடல் ரீதியான எல்லா உறவுமுறைகளும் அறுந்துவிடுகின்றன.

நம் பாரம்பரியத்தில் குரு-சிஷ்ய உறவு மிக மேன்மையானது என்று சொன்னதற்குக் காரணம், அந்த உறவு மட்டும்தான் மரணத்தைத் தாண்டியும் தொடரவல்லது.

கடவுளானாலும், ஆவியானாலும், யாரோ சொல்வதற்காக அதை நம்புவது முட்டாள்தனம். அனுபவத்தில் இல்லாத காரணத்தினாலேயே அது கிடையாது என்று மறுப்பதும் முட்டாள்தனம்!

Posted at 7:20 PM |  by Admin

உலக சாதனை படைத்த மின்சார கார் (வீடியோ இணைப்பு)

பிரிட்டனில் மின்சார கார் அதிவேகமாக சென்று உலக சாதனை படைத்துள்ளது.
டிரேசன் ரேசிங் டெக்னாலஜீஸ் நிறுவனம் தயாரித்த லோலா பி1269/இவி என்ற மின்சார காரே இந்த சாதனையை படைத்துள்ளது.
இதுகுறித்து இந்நிறுவனத்தின் தலைவர் லார்டு டிரேசன் கூறுகையில், மின்சார கார் தொழில்நுட்பம் மூலம் உருவாகும் கார்கள், மற்ற கார்களை விட அதிவேகமாக செல்ல முடியும்.
எதிர்காலங்களில் மின்சாரத்தில் இயங்கும் கார்களின் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறும் சூழ்நிலை உருவாகும்.
இதனை உணர்த்தவே அதிவேக காரை தயாரித்ததாக தெரிவித்துள்ளார்.
மின்சார கார் மூலம் அதிகபட்சமாக 281.6 கி.மீ வேகத்தில் சென்றதே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Posted at 2:21 PM |  by Admin

நாயாக மாறிய இளைஞர் (video and Photo)

நாய்கள் மீதான அதிக பாசத்தால் பிரேசிலை சேர்ந்த இளைஞர் ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் நாயாகவே மாறியுள்ளார்.
பிரேசிலை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு நாய்கள் என்றால் அதீத பிரியமாம்.
இதனால் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டு நாயாகவே மாறியுள்ளார்.
இறந்த நாய் ஒன்றின் முகத்தை இவருக்கு பொருத்தியுள்ளனர் மருத்துவர்கள்.
அறுவை சிகிச்சை முடிவடைந்துள்ள நிலையில் “நாய் மனிதன்” என்றே அனைவரும் அழைக்கின்றனர்.



Posted at 2:16 PM |  by Admin

சீனாவில் இளம் பெண்ணின் செயற்கை மார்பகம் வெடித்தது

சீனாவில் தொடர்ந்து 4 மணிநேரம் ஐபோனில் கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்த பெண்ணின் செயற்கை மார்பகம் வெடித்தது.
சீனாவின் பெய்ஜிங் நகரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அப்பிள் ஐபோனில் தொடர்ந்து 4 மணிநேரம் கேம்ஸ் விளையாடி கொண்டிருந்தார்.
4 மணிநேரம் கழித்து திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார், இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது செயற்கை மார்பகம் வெடித்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
அவருக்கு பொருத்தப்பட்ட செயற்கை மார்பகங்கள் தரம் குறைவான ஒன்றாக இருந்தாலும், பல மணி நேரம் படுத்துக் கொண்டு விளையாடியதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted at 2:05 PM |  by Admin

60 நாட்கள் தூங்காமல் இருந்த மைக்கேல் ஜாக்சன்

மறைந்த பிரபல பொப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் தொடர்ந்து 60 நாட்கள் தூங்காமல் இருந்தது தெரியவந்துள்ளது.
மைக்கேல் ஜாக்சனின் மரணம் குறித்து ஆராய்ச்சி செய்யும் Harvard Medical School sleep expert, Charles Czeisler என்பவர் தனது அறிக்கையில், மைகேல் ஜாக்சன் தனது இறுதி நாட்களில் மிகுந்த மன அழுத்தம் காரணமாக தொடர்ந்து 60 நாட்கள் தூங்காமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதுவே அவரது மரணத்திற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு தெரிந்து உலகிலேயே ஒரு மனிதன் 60 நாட்கள் தொடர்ச்சியாக தூங்காமல் இருந்தது மைக்கேல் ஜாக்சனாக தான் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக அவருக்கு சிகிச்சை அளித்து வந்த Dr. Murray அறியவில்லை என்றும், இதற்காக எவ்வித சிகிச்சையும் எடுத்துக் கொள்ளவில்லை எனவும் மைக்கேல் ஜாக்சனின் தாயார் தெரிவித்துள்ளார்.

Posted at 7:50 PM |  by Admin

இரு கால்களையும் இழந்த பெண்ணின் சாதனை (வீடியோ இணைப்பு)

இரு கால்களையும் இழந்த பெண் ஒருவர் கடலில் நீந்தி சாதனை படைத்துள்ளார்.
பிரிட்டனை சேர்ந்தவர் சூ ஆஸ்டின், 16 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மர்ம காய்ச்சலால் இவரது இரு கால்களும் செயல் இழந்தன.
ஆனால் நீச்சல் என்றால் ஆஸ்டினுக்கு பிரியம், இதனால் தான் முன் போலவே நீந்த வேண்டும் என ஆசைப்பட்டார்.
இதன் பின் தனக்கு ஏற்றாற் போல், சக்கர நாற்காலியை தானே வடிவமைத்து நீச்சல் பழகினார்.
இதனை தொடர்ந்து கடலில் நீந்தியும் சாதனை படைத்துள்ளார்.
இந்த சக்கர நாற்காலியில் விசேஷ காஸ் நிரப்பிய உருளைகள் பொருத்தப்பட்டு உள்ளன.
மேலும் கால்களின் உதவி இல்லாமல் நீந்துவதற்கு ஏதுவான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நாற்காலியின் மூலம், 360 டிகிரி கோணத்திலும் சுழல முடியும்.
இதனால் தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும், தரையில் இருப்பதை விட தண்ணீரில் இருப்பதையே தான் விரும்புவதாகவும் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.

Posted at 7:47 PM |  by Admin

வழக்கத்தை விட மிகப்பெரிய நிலா! வானில் இன்று அதிசய நிகழ்வு

பௌர்ணமி தினமான இன்று வழக்கத்தை விட கூடுதலாக மிகப்பெரிய நிலா தோன்றும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பூமியை நிலா நீள்வட்ட கோளத்தில் சுற்றி வருகிறது. அவ்வாறு சுற்றும் போது சில காலங்களில் பூமியில் இருந்து தொலைவிலும், சில காலங்களில் பூமிக்கு அருகிலும் நிலா வந்து செல்லும்.
அருகில் வரும் போது அதனால் பூமியில் ஏற்படும் ஈர்ப்பு விசையின் மாற்றம் காரணமாக கடல், காற்று போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.
இயற்கை சீற்றங்களுக்கும் இந்த ஈர்ப்பு விசையே காரணமாகின்றன. இதனால் பௌர்ணமி காலங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும்.
இந்நிலையில் உலகம் முழுவதும் இன்று இரவு வானில் அதிசயம் நிகழ உள்ளது.
நீள்வட்ட கோளப்பாதையில் சுற்றும் நிலா பூமிக்கு மிக அருகில் வருகிறது. அதாவது 2,21,824 மைல் தொலைவில் நிலா வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் வழக்கத்தை விட நிலா சற்று பெரிய அளவில் தெரியும். அது வழக்கமான அளவை விட 30 சதவிகிதம் கூடுதலாக தெரியும் என்று வானியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
மேலும் ஓராண்டுக்கு ஒரு முறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்வாறு தோன்றும் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பூமியின் ஒரு சில பகுதிகளில் இந்த மிகப் பெரிய நிலா காலை 7 மணிக்கே தெரிந்ததையும் நிபுணர்கள் பதிவு செய்துள்ளனர்.

Posted at 7:32 PM |  by Admin

காது ரேகைகளை வைத்து குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் புதிய முறை: அசத்திய பிரான்ஸ் பொலிஸ்

பொதுவாக கைரேகைகளை வைத்து கொள்ளையர்களை, பொலிசார் கண்டுபிடித்து வருகின்ற நிலை மாறி தற்போது காது ரேகைகள் மூலமும் குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியும் என்று பிரான்சில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் லியான் நகரில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தன. ஆனால், அதில் ஈடுபடுபவர்கள் யார் என்று துப்பு துலக்க முடியாமல் பொலிசார் தவித்தனர்.

இந்நிலையில், கொள்ளை நடந்த ஒரு வீட்டின் கதவில் காது ரேகை பதிந்து இருந்தது. அதை பிரிண்ட் எடுத்து பார்த்தபோது இதே ரேகை கொள்ளை நடந்த பல வீடுகளில் பதிந்து இருந்தது தெரிய வந்தது.

அதன் மூலம் ஜார்ஜியாவை சேர்ந்த 26 வயது வாலிபரை பொலிசார் கையும் களவுமாக பிடித்தனர். விசாரணை நடத்திய போது அவன் 80 கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதே பாணியில் ஜார்ஜியாவை சேர்ந்த 4 பேரை லியான் பொலிசார் கைது செய்துள்ளனர். இவர்கள் 75 கொள்ளைகளில் சம்பந்தப்பட்டவர்கள்.

இதே பாணியில் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளிலும் கொள்ளை வழக்குகளில் துப்பு துலக்கப்படுகிறது.

Posted at 5:47 PM |  by Admin

பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற ஓரினச்சேர்க்கையாளின் திருமணம்

பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்தை அங்கீகரிப்பதற்கான சட்டம் கடந்த 18ம் திகதி நிறைவேறியதையடுத்து முதல் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான விருந்தினர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வின்செண்ட் ஆடினும், புரூனோ பாய்லீயு ஆகிய இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

பின்னர் அந்த ஜோடி, தங்கள் திருமணத்திற்கு வந்திருந்தோர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்தை வரவேற்று ஒரு புறம் கொண்டாட்டமும், மற்றொரு புறம் எதிர்ப்பு போராட்டமும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Posted at 2:08 PM |  by Admin

எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து குதித்து சாதனை படைத்த ரஷ்ய வீரர்

உலகின் மிகவும் உயரமாக எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து குதித்து ரஷ்ய வீரர் சாதனை படைத்துள்ளார்.


இந்த சிகரத்தினை அடைந்த எட்மாண்ட் ஹிலாரி, டென்சிங் நார்கே ஆகியோர் முதன்முறையாக கடந்த 1953ம் ஆண்டு மே 29ம் திகதி சாதனைப் படைத்தனர்.

இதன் 60வது தினத்தை கொண்டாடும் வகையில் ரஷ்யாவச் சேர்ந்த வெலேரி ரூசோ(48) என்ற சாகச வீரர், எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து கீழே குதித்து சாதனை படைத்தார்.

இதற்காக கடந்த 5ம் திகதி தனது குழுவினருடன் சென்றார். 7 ஆயிரத்து 222 மீற்றர் உயரத்தில்(23 ஆயிரம் அடி ) நின்று சக வீரர்கள் வாழ்த்த, கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே குதித்தார்.

இதற்கென பிரத்யோக இறக்கை போன்ற உபகரணங்கள் மூலம் நடுவானில் பறவை போல் பறந்து இறதியில் தகுந்த பாதுகாப்புடன் தரையிறங்கி சாதனை படைத்தார்.

இது குறித்து ரூசோ கூறுகையில், இந்த சாதனைக்காக நான்கு வாரங்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

Posted at 2:04 PM |  by Admin

நடிகை எலிசபெத் டெய்லரின் முதல் திருமண விசேஷ கவுன் ரூ. 40 லட்சத்துக்கு ஏலம்

அழகு பதுமையாக திகழ்ந்த பிரபல ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் 8 முறை திருமணம் செய்துள்ளார்.

இவர் முதன்முதலாக கான்ராடு ஹில்டன் என்பவரை திருமணம் செய்தார். திருமணத்தின் போது எலிசபெத் டெய்லருக்கு விசேஷ கவுன் தயாரித்து வழங்கப்பட்டது.

அந்த கவுன் லண்டனில் உள்ள கிறிஸ்டி மையத்தில் வருகின்ற யூன் மாதம் ஏலம் விடப்படுகிறது. அது ரூ.40 லட்சத்துக்கு ஏலம் போகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதை ஹலன் ரோஸ் என்பவர் வடிவமைத்தார். முதல் திருமணத்தின் போது எலிசபெத் டெய்லருக்கு 18 வயது அப்போது அவர் மெட்ரோ கோல்ட்வின் மேயர் என்பவரின் ஸ்டூடியோவில் காண்டிராக்ட் ஒப்பந்த அடிப்படையில் நடித்து வந்தார்.

எனவே இவருக்கு அந்த கவுனை ஸ்டூடியோ உரிமையாளர் மேயர் பரிசாக அளித்து இருந்தார்.

Posted at 2:44 PM |  by Admin

அவுஸ்திரேலியாவில் பேயைக் கண்டுபிடிக்க முயற்சித்தவருக்கு அதிர்ச்சி அளித்த காதலி!

பேயைக் கண்டறிவதற்காக வீட்டில் மறைத்து வைத்திருந்த கமெராவில் காதலியின் துரோகச் செயல் பதிவாகிய சம்பவமொன்று அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.

நபரொருவர் தனது வீட்டில் பேய் நடமாடுவதாக கருதி ஒரு இரகசியக் கமெராவை வைத்து கண்காணித்து வந்துள்ளார்.

ஆனால் அந்தக் கமெராவில் பேய்கள் எதுவும் பதிவாகவில்லை.மாறாக அவரின் காதலி, அவரது 16 வயது மகனுடன் முத்தமிட்டு கட்டியணைத்துக் கொண்டிருக்கும் காட்சி பதிவாகியுள்ளது.

இதனால் அவர் 11 வருடமாக பழகி வரும் காதலிக்கும், மகனுக்கும் இடையிலான உறவு அம்பலமாகியுள்ளது. இதையடுத்து அவர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, அவருடைய காதலியான டஸ்மானிய நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்.

அந்நாட்டின் சட்டத்தின் பிரகாரம் ஆண், ஒருவர் பெண்ணொருவருடன் உடலுறவு கொள்வதற்கு குறைந்தபட்சம் 17 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். ஆனால் சம்பவத்தின் போது சிறுவனுக்கு வயது 16 என்று நிரூபணமானது.

எனினும் இது தொடர்பில் தான் அறிந்திருக்கவில்லையென அப்பெண் கூறியுள்ளார். விசாரணையின் முடிவில் அப்பெண்ணுக்கு ஒரு வருட கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அவரை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பவும், அங்கிருந்து அவர் பயிற்சி பெற்று வருவதற்காக 6 மாத காலம் சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Posted at 2:44 PM |  by Admin

ரொறொன்ரோவில் குழந்தையை பிரசவித்து குப்பைத்தொட்டியில் வீசிய பெண்

பிறந்த தனது குழந்தையை கொன்ற குற்றத்திற்காக 25 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக ரொறொன்ரோ பொலிசார் கூறியுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை ஒரு தாய் குழந்தையை பிரசவித்ததாகவும் அந்த குழந்தை எங்கே என்ன ஆனது என்பது தெரியாதென வைத்தியசாலை மருத்துவர்கள்  பொலிசாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து கொலை துப்பறியும் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர்.

வெள்ளிக்கிழமை துப்பறிவாளர்களுக்கு கிடைத்த தடயங்களின்படி சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிசார் செய்தி வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபர் தனது கர்ப்பத்தை மறைத்தாகவும் பின்னர் வீட்டில் குழந்தையை O'connor Drive and Bermondsey Road பகுதியில் உடைகள் நன்கொடையாக போடும் பெட்டிக்குள் போட்டதாக கூறப்பட்டுள்ளது.

குழந்தையை பெட்டிக்குள் போட்ட பின்னர் அப்பெண் வயிற்றில் இரத்த தோற்றத்துடன் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவ ஊழியர்கள் நச்சுக்கொடியை கண்டுபிடித்ததாக பொலிசார் கூறியுள்ளனர்.

குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பொலிசாரின் கூற்றுப்படி தெரியவருகின்றது.

மேலும் சந்தேக நபரான அஞ்சலினா ஸ்பனிடிஸ், ரொறொன்ரோ வைத்தியசாலை ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Posted at 2:41 PM |  by Admin

துருக்கில் பொது இடத்தில் முத்தமிட்டு போராட்டம் நடத்திய 20 ஜோடிகள்

துருக்கி தலைநகர் அங்காரா பாதாள ரயிலில் முத்தமிட்டுக்கொண்டு செல்லும் ஜோடிகளின் காட்சிகள் ரகசியக் கமெராக்களில் நிறைய பதிவாகியிருந்தன.

இதனையடுத்து சப்வே நிர்வாகம், கலாச்சார விதிகளை மதித்து நடக்க பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்தது.

இந்நிலையில் 20க்கும் மேற்பட்ட ஜோடிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு பொது இடத்தில் முத்தமிட்டு போராட்டம் நடத்தினர்.

Posted at 7:31 PM |  by Admin

30 ஆயிரம் "பீட்சா" வழங்கி ரியாட்ஸ் நிறுவனம் உலக சாதனை

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ வீரர்கள் முகாமிட்டு தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு பீட்சா 4 பேட் ரியாட்ஸ் என்ற நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக பீட்சா சப்ளை செய்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டில்  கந்தகாரில் முகாமிட்டிருக்கும் அமெரிக்க வீரர்களுக்கு 30 ஆயிரம் பீட்சாக்களை வழங்கி இந்நிறுவனம் சாதனை படைத்துள்ளது. இது ஒரு உலக சாதனையாக கருதப்படுகிறது.

இதற்கிடையே இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 21 ஆயிரம் பீட்சாக்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஏராளமான பீட்சாக்கள் போர் முனையில் இருக்கும் வீரர்களுக்கு ஹெலிகொப்டரில் இருந்து பொட்டலமாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Posted at 7:29 PM |  by Admin

போகும் இடமெல்லாமல் 60 கிலோ எடையுள்ள தன் வீட்டை சுமந்து செல்லும் சீன நபர்

சீனாவைச் சேர்ந்த ஒருவர் தான் வசிக்கும் வீட்டை தோளில் சுமந்து கொண்டு சுமார் 435 கிலோ மீற்றர் தூரம் வரை நடந்துள்ளார்.

குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த லியூ லிங்சாவோ என்னும் இந்நபர் இடத்துக்கிடம் கொண்டு செல்லக்கூடிய வகையில் மூங்கில்கள் மற்றும் பொலிதீனினால் தனது வீட்டை உருவாக்கியுள்ளார்.

60 கிலோ எடையுள்ள இந்த வீட்டை தான் போகுமிடமெல்லாம் சுமந்து செல்கிறார் 38 வயதான லியூ லிங்சாவோ.

இது குறித்து லியூ கூறுகையில், ‘நான் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும், தங்குமிட பிரச்சினை எனக்கில்லை, நான் சுதந்திரமானவனாக உள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வீடு சுமார் ஒரு வருட காலமே பயன்படுத்தக்கூடியது என்றும் மூன்றாவது தடவையாக இத்தகைய வீட்டை உருவாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர் நடந்து செல்லும் போது வீதியோரங்களில் வீசப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் போத்தல்கள் முதலானவற்றை எடுத்து விற்பனை செய்வதன் மூலமும், சூழலை சுத்தப்படுத்துவதன் மூலமும் தனக்கு தேவையான வருமானம் தேடிக்கொள்கிறார்.

Posted at 3:36 PM |  by Admin
Copyright © 2013 Batti Tamil. WP Theme-junkie converted by BloggerTheme9
Blogger template. Proudly Powered by Blogger.
back to top