
சீனாவின் பெய்ஜிங் நகரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அப்பிள் ஐபோனில் தொடர்ந்து 4 மணிநேரம் கேம்ஸ் விளையாடி கொண்டிருந்தார்.
4 மணிநேரம் கழித்து திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார், இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது செயற்கை மார்பகம் வெடித்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
அவருக்கு பொருத்தப்பட்ட செயற்கை மார்பகங்கள் தரம் குறைவான ஒன்றாக
இருந்தாலும், பல மணி நேரம் படுத்துக் கொண்டு விளையாடியதே இதற்கு காரணம் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.