பிரிட்டனில் மின்சார கார் அதிவேகமாக சென்று உலக சாதனை படைத்துள்ளது.
டிரேசன் ரேசிங் டெக்னாலஜீஸ் நிறுவனம் தயாரித்த லோலா பி1269/இவி என்ற மின்சார காரே இந்த சாதனையை படைத்துள்ளது.
இதுகுறித்து இந்நிறுவனத்தின் தலைவர் லார்டு டிரேசன் கூறுகையில், மின்சார
கார் தொழில்நுட்பம் மூலம் உருவாகும் கார்கள், மற்ற கார்களை விட அதிவேகமாக
செல்ல முடியும்.
எதிர்காலங்களில் மின்சாரத்தில் இயங்கும் கார்களின் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறும் சூழ்நிலை உருவாகும்.
இதனை உணர்த்தவே அதிவேக காரை தயாரித்ததாக தெரிவித்துள்ளார்.
மின்சார கார் மூலம் அதிகபட்சமாக 281.6 கி.மீ வேகத்தில் சென்றதே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.