All Stories

Text Widget

Ads300x250

Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

Sony Xperia M2 ஸ்மார்ட் கைப்பேசியின் விலை வெளியீடு

Sony நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுகமாகவுள்ள Xperia M2 ஸ்மார்ட் கைப்பேசியின் வெளியிடப்பட்டுள்ளது.
முதன் முதலில் நெதர்லாந்தில் அறிமுகம் செய்யப்படவுள்ள இக்கைப்பேசியின் விலையை நெதர்லாந்தே தீர்மாத்துள்ளதுடன் இதன் விலையானது 289 யூரோக்களாக காணப்படுகின்றது.
இக்கைப்பேசியானது 4.8 அங்குல அளவு, 540 x 960 Pixcel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 1.2GHz வேகத்தில் செயலாற்றவல்ல Quad-Core Snapdragon 400 Processor, 1GB RAM, சேமிப்பு நினைவகமாக 8GB கொள்ளளவு ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.
கூகுளின் Android 4.3 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாக் கொண்டு செயற்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இக்கைப்பேசியில் 8 மெகாபிக்சல்களைக் கொண்ட கமெரா, 2,300 mAh மின்கலம் ஆகியனவும் இணைக்கப்பட்டுள்ளது.

Posted at 1:21 PM |  by Anonymous

Outlook பயனர்களுக்கான Skype அறிமுகம் (வீடியோ இணைப்பு

மைக்ரோசொப் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான Outlook இனைப் பயன்படுத்துபவர்களுக்கான புதிய Skype இடைமுகம் உலகளாவிய ரீதியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Outlook கணக்கினை வைத்திருப்பவர்கள் தமது கணக்கினைப் பயன்படுத்தியவாறே நண்பர்கள், உறவினர்களுடன் Skype மூலமாக பேச முடியும்.

உயர் தர (HD) வீடியோ அழைப்பினை ஏற்படுத்தக்கூடிய வசதியினைக் கொண்டுள்ள இப்புதிய Skype சேவையினை பெறுவதற்கு பிரத்தியேக கணக்கு எதுவும் தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.



Posted at 1:20 PM |  by Anonymous

மலேசியாவில் குறைந்த விலையில் Nokia X ஸ்மார்ட் கைப்பேசிகள்

கடந்த மாதம் இடம்பெற்ற மொபைல் வேர்ள்ட் காங்கிரஸ் நிகழ்வில் நோக்கியா நிறுவனம் தனது புத்தம் புதிய கைப்பேசியான Nokia X இனை அறிமுகம் செய்திருந்தது.
இந்நிலையில் தற்போது மலேசியாவில் இக்கைப்பேசி விற்பனைக்கு வரவுள்ளது.
120 டொலர்கள் பெறுமதியில் கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கும் இக்கைப்பேசியில் 4 அங்குல அளவு, 480 x 800 Pixel Resolution உடைய தொடுதிரை காணப்படுவதுடன் 1GHz வேகத்தில் செயற்படக்கூடிய Snapdragon Processor, பிரதான நினைவகமாக 512MB RAM மற்றும் சேமிப்பு நினைவகமாக 4GB என்பனவும் காணப்படுகின்றன.
மேலும் 3 மெகாபிக்சல்களை உடைய கமெரா, 1500 mAh மின்கலம் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Posted at 1:18 PM |  by Anonymous

இரு இயங்குதளங்களைக் கொண்ட கைப்பேசி உற்பத்தியில் நோக்கியா

உலகத் தரம் வாய்ந்த கைப்பேசிகளை உற்பத்தி செய்து அறிமுகம் செய்யும் நிறுவனமான நோக்கியா தற்போது இரண்டு இயங்குதளங்களைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் களமிறங்கியுள்ளது.
இப்புதிய கைப்பேசி Android மற்றும் Windows Phone இயங்குதளங்களைக் கொண்டதாக வெளிவரவிருப்பதுடன் பயனர்கள் தாம் விரும்பிய இயங்குதளத்தில் கைப்பேசியினை இயக்க முடியும்.
இதேவேளை Karbonn நிறுவனமும் Android மற்றும் Windows இயங்குதளங்களைக் கொண்ட கைப்பேசி உற்பத்தி தொடர்பான மைக்ரோசொப்ட் நிறுவனத்துடன் ஏற்கனவே ஒப்பந்தம் ஒன்றினை செய்துள்ளதுடன் அதன் கைப்பேசி இன்னும் 6 மாதங்களில் வெளியிடப்படலாம் என
எதிர்பார்க்கப்படுகின்றது.

Posted at 1:17 PM |  by Anonymous

தொலைபேசி பிறந்த கதை

இன்றைய காலகட்டத்தில் தொலைபேசி இல்லாத நாட்களை நினைத்துக்கூட பார்க்க முடியாது….
ஒவ்வொருவரின் கைகளையும் அலங்கரித்துக் கொண்டிருக்கிறது, இந்த உன்னத சாதனத்தை உருவாக்கியவர் தான் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்…
கடந்த 1847ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் திகதி ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் என்னும் இடத்தில் பிறந்தார்.
சிறுவயதில் இருந்தே கல்வியில் ஆர்வம் காட்டி வந்தவர், படிப்பை



முடித்துவிட்டு தன் தந்தையோடு காது கேளாதவர்களுக்கு பேசக் கற்றுக் கொடுத்தார்.
அவருடைய 23வது வயதில் காசநோய் ஏற்படவே, பெல்லின் உடல்நிலை கருதி அவரது குடும்பம் 1870ம் ஆண்டுகளில் கனடா நாட்டிற்கு குடிபெயர்ந்தது.
இதற்கு அடுத்த வருடம் பாஸ்டன் பல்கலைகழத்தில் பேராசிரியராக வேலைக்கு சேர்ந்தார்.
அறிவியல் ஆராய்ட்சிகளில் ஆர்வம் கொண்டிருந்த பெல் தனது ஓய்வு நேரங்களில் ஏதாவது சோதனை செய்துகொண்டே இருப்பார்.
காது கேளாதோருக்கும், வாய் பேச முடியாதோருக்கும் நிறைய செய்ய வேண்டும் என்ற அவரது உந்துதல்தான் தொலைபேசி என்ற உன்னத கருவியை கண்டுபிடிக்க அவருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது.
ஒருவர் பேசுவதை மின்சக்தி மூலம் இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்ல முடியுமா என்று ஆராயத் தொடங்கினார்.
தனது உதவியாளர் வாட்சன் என்பவருடன் சேர்ந்து பெல் சோதனைகளில் ஈடுபட்டார்.
பெல் வீட்டின் மேல் அறையிலும் வாட்சன் கீழ் அறையிலும் இருந்து கொண்டு கம்பிவழி ஒருவர் இன்னொருவருடன் பேச முடியுமா என்று பல்வேறு முறைகளில் சோதனைகளை செய்து பார்த்தனர்.
அவர்களது முயற்சிகள் இரவும் பகலும் என்று நாள் கணக்கில் தொடர்ந்தன.
1876ம் ஆண்டு மார்ச் 10ம் திகதி மதியவேளை கீழ் அறையிலிருந்த வாட்சன் காதில் கருவியை வைத்துக்கொண்டு கேட்டுக்கொண்டு இருந்தார்.
திடீரென்று அந்த கருவியிலிருந்து குரல் கேட்கத் தொடங்கியது. பெல்லின் குரல்தான் “திரு.வாட்சன் தயவுசெய்து இங்கு வாருங்கள் நான் உங்களைப் பார்க்க வேண்டும்” வாட்சனால் பெல் பேசியதை தெளிவாகக் கேட்க முடிந்தது.
வியப்பை அடக்க முடியாத வாட்சன் கருவியை கீழே போட்டுவிட்டு ஒரு பள்ளிச் சிறுவனைப்போல் துள்ளிக்குதித்து மேல் மாடிக்கு ஓடி பெல்லிடம் விசயத்தை சொன்னார், பெல்லின் கனவு நனவானது.
பிறகு ஒரு மாத்திற்குள் இரண்டு எளிமையான டெலிபோன்களையும், ஒரு மைக்ரோபோனையும் கண்டுபிடித்தார்.
பின்னர் 1876ம் ஆண்டு பெல் தனது புதிய கண்டுபிடிப்புக்கு உரிமை வாங்க பதிவு அலுவலகத்திற்கு சென்றார்.
அதற்கு சற்று முன்னால் எலிசா கிரே என்பவர் எலக்ட்ரிகல் ஸ்பீச் மெஷின்-க்கு உரிமை வாங்கி சென்றதாக தெரிவித்தனர்.
10 வருடங்கள் கழித்து டெலிபோனை கண்டுபிடித்தது யார் என்று நீதிமன்றத்தில் இருவரும் வழக்கு தொடர்ந்தனர், அந்த வழக்கில் பெல் வெற்றி பெற்று பெரும் செல்வந்தர் ஆனார்.
தொலைபேசி மட்டுமின்றி அரசு நிறுவனத்தின் மூலம் பொட்டோ போன், ஆடியோ மீட்டர், மெட்டல் டிடக்டர், இன்டக்‌ஷன் பேலன்ஸ், வாக்ஸ் ரிகார்டிங் சிலிண்டர், கிராமபோன் போன்ற கருவிகளைக் கண்டுபிடித்தார்.
பெல் விமானம் கண்டு பிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால் அது அவருக்கு வெற்றி தரவில்லை, ஆனால் சில கண்டுபிடிப்புகளைச் செய்தார், விமானத்தின் எய்லிரான் என்ற பகுதியைக் கண்டுபிடித்தவர் பெல் ஆவார்.
பிறகு அவர் தன் வாழ்நாள் முழுவதையும் காது கேளாத குழந்தைகளுக்கு சேவை செய்வதற்கே அர்ப்பணித்தார்.
இவர் கண்டுபிடித்தவைகளில் பதினெட்டு வகை அறிவியல் சாதனங்களை மட்டுமே தனது பெயரில் காப்புரிமை பதிவுகளைச் செய்தார், இதர பன்னிரெண்டு வகைகளை மற்றவர்களின் பெயர்களில் காப்புரிமை பெற்றதாகச் சொல்லப்படுகிறது.
1920ல் தான் பிறந்த எடின்பெர்க் நகருக்கு வந்தபோது அந்த நகரம் பெல்லை கவுரவித்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து 1922 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 2ம் திகதி தனது 75 ஆவது வயதில் பெல் கனடாவில் காலமானார்.
அவர் நிறைவாகத்தான் இறந்திருக்க வேண்டும். ஏனெனில் அவரது கடைசிக் காலத்தில் அவரது கண்டுபிடிப்பான தொலைபேசி உலகம் முழுவதும், பட்டித்தொட்டிகளிலெல்லாம் பயன்படுத்தப்பட்டதை காணும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
ஆனால் தான் கண்டுபிடித்த தொலைபேசியை அவரே வெறுத்ததுதான் ஆச்சரியமான செய்தி. ஆம் பெல்லின் இறுதிக் காலங்களில் கிராமத்து வீட்டில் அவர் சோதனைகளில் ஈடுபட்டபோது தொலைபேசியை தொல்லையாகக் கருதி அதை செயல்படாமல் ஆக்கியதாக ஒரு வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது.
உலகையே சிறு கிராமமாக சுருக்கிய பெருமை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்லையே சாரும் என்று கூறினால் அது மிகையல்ல!...

Posted at 1:16 PM |  by Anonymous

இலவசமாக ஒன்லைனில் கோப்பு மாற்றம் செய்தவற்கு

ஒரு வகையான கோப்பினை பிறிதொரு வகையான கோப்பாக மாற்றுவதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.
அவ்வாறே இவ்வசதியை ஒன்லைனில் தரும் சில இணையத்தளங்களும் காணப்படுகின்றன. அவற்றில் சில குறைந்தளவான கோப்பு வகைகளையே மாற்றம் செய்ய முடிவதுடன், பெரும்பாலானவற்றில் பணம் செலுத்தியே இச்சேவையினை பெற்றுக்கொள்ள வேண்டும்.
எனினும் CloudConvert எனும் இணையத்தளமானது இச்சேவையினை முற்றிலும் இலவசமாக வழங்குவதுடன், நூறிற்கு அதிகமாக கோப்பு வகைகளை மாற்றும் வசதியை கொண்டுள்ளது.
அவற்றில் பல்வேறு Audio, Video, Document, Ebook, Archive, Image, Spreadsheet மற்றும் Presentation கோப்புகளும் அடங்கும்.

Posted at 1:12 PM |  by Anonymous

மெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?

நாம் பெரும்பாலும் ஒரு மெயில் Compose செய்யும்போது அதை அனுப்ப To என்ற Field இல் நண்பர்களின் மெயில் ஐ‌டிக்களை கொடுப்போம்.

ஆனால் இது மட்டும் Send செய்ய உள்ள வழி அல்ல, மேலும் இரண்டு வழிகள் உள்ளன. அவைதான் Cc, Bcc.

சரி இவற்றை எப்படி பயன்படுத்துவது??

Cc: Carbon Copy

நாம் எப்போது ஒரு மெயிலை இரு வேறு நபர்களுக்கு ஒரே வேலைக்கு அனுப்ப நினைக்கிறோமோ அப்போது இதனை பயன்படுத்தலாம். To field இல் முதல் நபர் ID யும், Cc யில் மற்றவர்கள் மெயில் ID யும் இதற்கு டைப் செய்ய வேண்டும்.

Cc யில் ஒரு மெயில் ID க்கு மேல் டைப் செய்ய வேண்டி இருந்தால் ஒவ்வொன்றுக்கும் இடையில் கமா(,) போடவும்.

இந்த மெயிலை படிப்பவர் To, Cc என இரு Field லும் உள்ள மெயில் ID க்களை காண இயலும்.

இது எந்த இடத்தில் பயன்படும் என்றால், உங்கள் மேலதிகாரிக்கு ஒரு மெயில் அனுப்ப வேண்டும் அதையே வேறு சிலருக்கும் அனுப்ப வேண்டும் என்றால் To வில் மேலதிகாரி ஐ‌டி, Cc யில் மற்றவர் ஐ‌டி.

இதற்கும் To field க்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

Bcc: Blind Carbon Copy

நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் போது Bcc யில் அனுப்ப வேண்டிய நபர்களின் பெயரை கொடுத்து இருந்தால் யார் படிக்கிறாரோ அவர் ID யும் மட்டுமே தெரியும். அநாவசியமான மற்றவர்கள் ID அவர்களுக்கு தெரியாது.

இது பாதுகாப்பானதும் கூட. இது Newsletter, மற்றும் பலருக்கு அனுப்பும் போது பயன்படும்.

Bcc யில் ஒரு மெயில் ID க்கு மேல் டைப் செய்ய வேண்டி இருந்தால் ஒவ்வொன்றுக்கும் இடையில் கமா(,) போடவும்.

Bcc பயன்படுத்தும் போது To வில் கட்டாயமாக எதுவும் நீங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

Posted at 3:23 PM |  by Admin

அறிமுகமாகி​ன்றது உலகின் மிக மெலிதான ஸ்மார்ட் கைப்பேசி

Huawei நிறுவனமானது கடந்தவாரம் Ascend P6 எனும் உலகின் மிக மெலிதான ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகப்படுத்தியிருந்தது.

இந்நிலையில் தற்போது Umeox X5 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி அறிவிப்பானது அதன் சாதனையை முறியடித்துள்ளது.

5.6mm தடிப்புடைய இக்கைப்பேசியானது 5.3 அங்குல தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் கூகுளின் Android 4.2.2 Jelly Bean இயங்குதளத்தில் செயற்படக் கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது தவிர 8 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கென 3 மெகாபிக்சல்களை உடைய துணைக் கமெரா ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

Posted at 3:21 PM |  by Admin

மிகவும் மெலிதான தோற்றம் கொண்ட டேப்லட்களை அறிமுகப்படுத்துகின்றது சம்சுங்

முதற்தர இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவமான சம்சுங் மிகவும் மெலிதான தோற்றத்தைக் கொண்ட விண்டோஸ் 8 டேப்லட் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.

Samsung ATIV Tab 3 என அழைக்கப்படும் இவை 10.1 அங்குல அளவு, 1,366 x 768 Pixel Resolution உடைய திரையினைக் கொண்டுள்ளதுடன் Atom Z2760 Processor, 2GB RAM ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளன.

550 கிராம்கள் எடைகொண்ட இந்த டேப்லட்களில் 64GB சேமிப்பு நினைவகம் தரப்பட்டுள்ளதுடன் micro SD கார்ட்டின் உதவியுடன் மேலும் 32GB வரை அதிகரிக்க முடியும்.

மேலும் இந்த டேப்லட்களில் 10 மணித்தியாலங்கள் வரை தொடர்ச்சியாக மின்னை வழங்கக்கூடிய மின்கலங்கள் காணப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.




Posted at 3:55 PM |  by Admin

பிரத்தியேகமான ஒன்லைன் சேமிப்பு சேவையை அறிமுகப்படுத்தும் சம்சுங்

ஏனைய கணனி மற்றும் கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுக்கு சவாலாக விளங்கிறது சம்சுங்.

இந்நிலையில் தனது சாதனங்களின் மூலம் பயன்படுத்தக்கூடிய கிளவுட் ஸ்டோரேஜ் எனப்படும் ஒன்லைன் சேமிப்பு சேவையை சம்சுங் அறிமுகப்படுத்தியுள்ளது.

Samsung HomeSync Lite எனப்படும் இச்சேவையினை ஐந்து வெவ்வேறு கணக்குகளினூடாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்துக்கூடியதாக இருப்பதுடன் ஒவ்வொரு கணக்கினூடாகவும் அதிகமாக 6 வகையான சாதனைங்களை பயன்படுத்த முடியும்.

இதேவேளை இச்சேவையினை அப்பிள், எல்.ஜி போன்ற நிறுவனங்கள் ஏற்கணவே அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் சம்சுங்கின் புதிய அறிமுகமானது ஏனைய நிறுவனங்களுக்கு சவாலாக விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Posted at 3:53 PM |  by Admin

PDF கோப்புக்களை Word, RTF கோப்புக்களாக மாற்றுவதற்கு

டெக்ஸ்ட், புகைப்படங்களை உள்ளடக்கிய PDF கோப்புக்கள் பொதுவாக பாதுகாப்பு மிகுந்தவையாகவே காணப்படும்.
இதனால் இவற்றில் எந்தவிதமான எடிட்டிங்கினையும் மேற்கொள்ள முடியாது காணப்படுவதுடன், அவற்றிலுள்ள விடயங்களை பிரதி பண்ண முடியாமலும் இருக்கும்.
எனவே இவ்வாறான நோக்கங்களுக்காக குறித்த PDF கோப்புக்களை Word, RTF கோப்புக்களாக மாற்றுவது சிறந்ததாகும்.
இதற்கென PDF Shaper எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது. சிறிய கோப்பு அளவுடைய இந்த மென்பொருளின் மூலம் கடவுச்சொற்கள் கொடுத்து பாதுகாக்கப்பட்ட PDF கோப்புக்களையும் மாற்றியமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted at 8:01 PM |  by Admin

iPhone மற்றும் Android சாதனங்களுக்கான Instagram Video அப்பிளிக்கேஷன்

பல லட்சக்கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ள பிரபலமான புகைப்படங்களை பகிரும் வலைத்தளமான Instagram ஆனது தற்போது மேலும் ஒரு புதிய சேவையை இணைத்துள்ளது.
Instagram Video எனப்படும் இப்புதிய சேவையின் மூலம் புகைப்படங்களை மட்டுமல்லாது வீடியோக்களையும் பகிர்ந்துகொள்ள முடியும்.
இதன் அடிப்படையில் செல்பேசிகளின் மூலம் எடுக்கப்படும் 15 செக்கன்களை வரை நீளமுள்ள வீடியோக்களை பகிரக்கூடியவாறு காணப்படுகின்றது.
மேலும் இச்சேவையை iPhone மற்றும் Android சாதனங்களில் பெறுவதற்காக விசேட அப்பிளிக்கேஷன் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தரவிறக்கச் சுட்டி

Posted at 7:58 PM |  by Admin

Samsung Galaxy Tab 3 டேப்லட் விரைவில் அறிமுகம்

சம்சுங் நிறுவனமானது தனது புதிய வடிவமைப்பில் உருவான Samsung Galaxy Tab 3 எனும் டேப்லட்களை அடுத்த மாதமளவில் அறிமுகம் செய்யவிருக்கின்றது.
7, 8, 10.1 அங்குல அளவு தொடுதிரைகளைக் கொண்ட 3 பதிப்புக்களாக வரவுள்ளதுடன் 7 அங்குல அளவுடைய டேப்லட் ஆனது கூகுளின் Android 4.1 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதுடன், 1.2 GHz வேகத்தில் செயலாற்றவல்ல Dual-Core Processor, பிரதான நினைவகமாக 1GB RAM போன்றவற்றினையும் உள்ளடக்கியுள்ளன.
இவை தவிர 3 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா, 1.3 மெகாபிக்சல்கள் உடைய துணைக் கமெரா ஆகியவற்றினையும் கொண்டுள்ளன. இதன் சேமிப்பு நினைவகமாக 16GB தரப்பட்டுள்ளது.
10.1 அங்குல அளவுடைய திரையைக் கொண்ட டேப்லட் ஆனது Android 4.2 Jelly Bean இயங்குதளத்தினையும் 1.6 GHz வேகத்தில் செயலாற்றும் Processor இனையும் கொண்டுள்ளதுடன் சேமிப்பு நினைவகமாக 32GB தரப்பட்டுள்ளது.
8 அங்குல அளவுடைய டேப்லட் ஆனது 1.5 GHz வேகத்தில் செயலாற்றும் Processor இனையும் பிரதான நினைவகமாக 1.5 GB RAM இனையும் கொண்டுள்ளதுடன் சேமிப்பு நினைவகமாக 12GB அல்லது 32GB காணப்படுகின்றது.

Posted at 7:55 PM |  by Admin

அன்ரோயிட் சாதனங்களுக்கான குரோம் உலாவியின் புதிய பதிப்பு வெளியானது

கூகுள் நிறுவனத்தின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சாதனங்களில் நிறுவிப் பயன்படுத்தப்படும் குரோம் உலாவியின் புதிய பீட்டா பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

28.0.1500.31 எனும் பதிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இப்புதிய உலாவியில் மெருகூட்டப்பட்ட எழுத்துக்கள், புகைப்படங்களை காணும் வசதி, நேரடியான Pop-Up விண்டோ வசதி போன்ற பல புதிய அம்சங்கள் உட்புகுத்தப்பட்டுள்ளன.
இது தவிர முன்னைய பதிப்பிலிருந்து சில மாற்றங்கள் 

மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் விரைவான இணைய உலாவலுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

Posted at 1:59 PM |  by Admin

ஹேம் பிரியர்களுக்கான அதிநவீன அல்ராபுக் கணனிகள் அறிமுகம்

கணனி விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களுக்காக அதிநவீன அல்ராபுக் மடிக்கணனிகளை Razer நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

14 அங்குல அளவு, 1600 x 900 Pixel Resolution உடைய HD திரையினைக் கொண்டுள்ள இக்கணனிகள் நான்காம் தலைமுறைக்குரிய Intel® Core™ Processor, பிரதான நினைவகமாக 8GB RAM ஆகிவற்றினைக் கொண்டுள்ளதுடன் சேமிப்பு நினைவகமாக 128GB கொள்ளளவுடைய SSD சாதனத்தையும் கொண்டுள்ளன.

இச்சேமிப்பு நினைவகமானது 256GB SSD அல்லது 512GB HD கொண்டு பிரதியிடப்படக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது.

மேலும் துல்லியமான கிராபிக்ஸ் வசதியைத் தரக்கூடிய NVIDIA GeForce GTX 765M (2 GB GDDR5) மற்றும் Intel HD4600 போன்றவற்றினைக் கொண்டு இக்கணனி வடிவமைக்கப்பட்டுள்ளது.

தவிர 0.66 அங்குல தடிப்புடைய இக்கணனிகளின் எடையானது 1.876 கிலோ கிராம்களாகக் காணப்படுகின்றது.

Posted at 1:57 PM |  by Admin

Mac கணனிகளுக்கான இலவச அன்டிவைரஸை பெற்றுக்கொள்ள...

அப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான Mac இயங்குதளங்களைக் கொண்ட கணனிகள் தனித்துவம் வாய்ந்தவை.

இதன் காரணமாக அனைத்து விதமான கணனி மென்பொருட்களையும் இதில் நிறுவிப் பயன்படுத்த முடியாது என்பது யாவரும் அறிந்ததே.


இதற்கென கிடைக்கும் மென்பொருட்களில் அனேகமானைவை இலவசமாகக் கிடைப்பதில்லை. இவ்வாறிருக்கையில் ClamXav எனும் அன்டி வைரஸ் புரோகிராம் ஆனது முற்றிலும் இலவசமாகக் கிடைக்கின்றது.


இம்மென்பொருளானது விரைவாகக் செயற்படக்கூடியதாகவும், இலகுவான பயனர் இடைமுகத்தினைக் கொண்டதாகவும் காணப்படுவதுடன் துல்லியமான முறையில் வைரஸ் புரோகிராம்களை கண்டு அவற்றினை நீக்கக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


தரவிறக்கச் சுட்டி

Posted at 6:07 PM |  by Admin

iPod Touch விற்பனையில் சாதனை படைத்தது அப்பிள்

அப்பிள் நிறுவனத்தின அரிய தயாரிப்புக்களுள் ஒன்றான iPod Touch ஆனது 2007ம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

தற்போது 100 மில்லியனிற்கும் மேற்பட்ட iPod Touch சாதனங்களை விற்று புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறிருக்கையில் நேற்றைய தினம் 16GB சேமிப்பு வசதி கொண்ட புதிய iPod Touch சாதனத்தை அப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த வருட இறுதிக்குள் அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக மற்றுமொரு iPod Touch சாதனத்தை வெளியிடத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted at 6:05 PM |  by Admin

Windows 8.1 இயங்குதளம் பற்றிய உத்தியோக பூர்வ அறிவிப்பை வெளியிட்டது மைக்ரோசொப்ட்

கணனி இயங்குதள வடிவமைப்பில் முன்னணி வகிக்கும் நிறுவனமான மைக்ரோசொப்ட், காலத்திற்கு காலம் அதன் புதிய பதிப்புக்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.

இதில் மெட்ரோ இடைமுகம், தொடுகை முறையிலான கணனிச் செயற்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் 8 இயங்குதளம் பலத்த வரவேற்பினைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் Windows Blue எனும் புதிய பதிப்பு தொடர்பாக அண்மையில் அறிவிப்பு ஒன்றினை விடுத்திருந்த போதிலும் தற்போது அதனை Windows 8.1 பதிப்பாக வெளியிடவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான முன்னோட்டம் ஒன்றினை எதிர்வரும் ஜுன் 26ம் திகதி வெளியிடவுள்ளதாகவும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Posted at 5:51 PM |  by Admin

பேஸ்புக்கில் கொமண்ட் சுயமாகவே எழுத புதிய வைரஸ்

சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், தானாகவே லைக் போட்டு, கமெண்ட் எழுதும் வைரஸ் ஒன்றினை, வைரஸ் எதிர்ப்பு புரோகிராம் எழுதும் நிறுவனத்தினர் கண்டறிந்துள்ளனர்.

நல்ல வேளையாக, இது பிரேசில் நாட்டு பேஸ்புக் அக்கவுண்ட்களில் மட்டுமே, தற்போதைக்கு, இயங்குகிறது. மற்ற நாடுகளிலும், குறிப்பாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளிலும் பரவும் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ். இதற்கு ‘Trojan:JS/Febipos’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. குரோம் பிரவுசர் மற்றும் பயர்பாக்ஸ் ஆட் ஆன் புரோகிராம் என்ற போர்வையில் இது கம்ப்யூட்டரின் உள்ளே நுழைகிறது.

இது பாதித்த கம்ப்யூட்டரில், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர், பேஸ்புக்கில் லாக் இன் செய்துள்ளாரா எனக் கவனிக்கிறது. லாக் இன் செய்திடும் பட்சத்தில், தான் அனுப்பப்பட்டுள்ள தளத்திலிருந்து, கம்ப்யூட்டரை செட் அப் செய்திடும் பைல் ஒன்றை இறக்கிக் கொள்கிறது.

இதில் பல கட்டளைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம், மற்றொரு பக்கத்திற்கான லிங்க் அமைத்தல், பதியப்பட்ட கருத்துக்களை ஷேர் செய்தல், நண்பர்கள் பக்கத்தில் கருத்துக்களை எழுதுதல், ஏற்கனவே எழுதப்பட்டுள்ளவற்றிற்கு கமெண்ட் அமைத்தல், நண்பர்களை குழுவில் சேருமாறு அழைப்பு அனுப்புதல் எனப் பல்வேறு செயல்பாடுகளுக்கான கட்டளைகள் இதில் உள்ளன.

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த ட்ரோஜன் வைரஸ், தன்னை அனுப்பியவர்களை அடிக்கடி தொடர்பு கொண்டு, தன்னை அப்டேட் செய்து கொண்டு செயல்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம், இது போன்ற செயல்களுக்குப் பலியான, ஒரு பேஸ்புக் பக்கத்தினைத் தொடர்ந்து தன் கண்காணிப்பில் வைத்து இந்த ஆய்வினை நடத்தி, இதனைக் கண்டறிந்தது.

தற்போதைக்கு இந்த ட்ரோஜன் வைரஸ் பிரச்னை, பிரேசில் நாட்டில் மட்டுமே உள்ளது. பிரேசிலியன் மொழியில் மட்டுமே இது சொற்களை அமைக்கிறது. விரைவில் ஆங்கிலத்திலும் இது செயல்படும் வகையில் மாற்றி அமைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதிலிருந்து தப்பிக்க, தேவையற்ற, நம்பிக்கை கொள்ள முடியாத ஆட் ஆன் புரோகிராம்களை, டவுண்லோட் செய்து அமைக்க வேண்டாம் என மைக்ரோசாப்ட் மற்றும் பிரபல ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.

மேலும், பேஸ்புக் தளத்தினைப் பார்த்துப் பயன்படுத்திய பின்னர், அதிலிருந்து கட்டாயமாக லாக் அவுட் செய்திட வேண்டும் எனவும் மைக்ரோசாப்ட் அறிவுறுத்தியுள்ளது.

Posted at 7:36 PM |  by Admin

PDF கோப்புக்களை HTML கோப்புக்களாக மாற்றுவதற்கு

எழுத்துக்கள் மற்றும் படங்களுக்கான சிறந்த கோப்பு வகையாகக் கருதப்படும் PDF கோப்பில் காணப்படும் உள்ளடக்கங்களை இணையத்தளத்தில் பயன்படுத்தும்பொருட்டு HTML கோப்புக்களாக மற்றுவதற்கு Abex PDF to HTML Converter எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.

இலகுவாகவும், விரைவாகவும் செயற்படக்கூடியதாகக் காணப்படும் இம்மென்பொருளின் உதவியுடன் ஒன்றிற்கு மேற்பட்ட PDF கோப்புக்களை ஒரே தடைவையில் HTML கோப்புக்களாக மாற்றியமைக்க முடியும். 

மேலும் இவ்வாறு மாற்றப்பட்ட HTML கோப்பு ஆனது அனைத்து வகையான இணைய உலாவிகளிலும் செயற்படக்கூடியதாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். 

Posted at 7:33 PM |  by Admin
Copyright © 2013 Batti Tamil. WP Theme-junkie converted by BloggerTheme9
Blogger template. Proudly Powered by Blogger.
back to top