சம்சுங் நிறுவனமானது தனது புதிய வடிவமைப்பில் உருவான Samsung Galaxy Tab 3
எனும் டேப்லட்களை அடுத்த மாதமளவில் அறிமுகம் செய்யவிருக்கின்றது.
7,
8, 10.1 அங்குல அளவு தொடுதிரைகளைக் கொண்ட 3 பதிப்புக்களாக வரவுள்ளதுடன் 7
அங்குல அளவுடைய டேப்லட் ஆனது கூகுளின் Android 4.1 Jelly Bean
இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதுடன், 1.2 GHz
வேகத்தில் செயலாற்றவல்ல Dual-Core Processor, பிரதான நினைவகமாக 1GB RAM
போன்றவற்றினையும் உள்ளடக்கியுள்ளன.
இவை தவிர 3 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா, 1.3 மெகாபிக்சல்கள் உடைய
துணைக் கமெரா ஆகியவற்றினையும் கொண்டுள்ளன. இதன் சேமிப்பு நினைவகமாக 16GB
தரப்பட்டுள்ளது.
10.1 அங்குல அளவுடைய திரையைக் கொண்ட டேப்லட் ஆனது Android 4.2 Jelly
Bean இயங்குதளத்தினையும் 1.6 GHz வேகத்தில் செயலாற்றும் Processor இனையும்
கொண்டுள்ளதுடன் சேமிப்பு நினைவகமாக 32GB தரப்பட்டுள்ளது.
8 அங்குல அளவுடைய டேப்லட் ஆனது 1.5 GHz வேகத்தில் செயலாற்றும் Processor
இனையும் பிரதான நினைவகமாக 1.5 GB RAM இனையும் கொண்டுள்ளதுடன் சேமிப்பு
நினைவகமாக 12GB அல்லது 32GB காணப்படுகின்றது.