நாற்பது வருடங்களுக்கு முன்னால் பிராபோர்ன் மைதானத்தில் வீரர்களுக்கு உணவு கம்மியாக வழங்கப்பட்டுக்கொண்டு இருந்தது. பதினைந்து வயது சிறுவன் கபில் ,"எனக்கு கூடுதலாக சாப்பாடு போடுங்கள் ! நான் வேகப்பந்து வீச்சாளன் !" என்ற பொழுது இந்தியாவில் அப்படி யாருமே இல்லையே என்று நகைத்தார்கள் சுற்றி இருந்தவர்கள். அப்பொழுது எதுவும் சொல்லாத கபில் ஒய்வு பெற்ற பொழுது அதிகபட்ச டெஸ்ட் விக்கெட்கள் அவர் வசமே இருந்தன
ஆஸ்திரேலிய அணியுடனான 1978 ஆம் வருடப்போட்டி அது. ஒரு சிக்ஸர் கபில் இருந்த பக்கம் பாய்ந்து வந்தது. நடுவர் பவுண்டரி என்று அறிவித்தார். கபில் அதை சிக்சர் என்று சொல்லி மாற்றினார். இந்திய அணி ஒரு ரன்னில் தோற்றுப்போனது. கிரிக்கெட் என்னவோ ஜெயித்திருந்தது.
இந்தியர்கள் என்றால் சுழல்பந்து வீச்சுக்கு லாயக்கானவர்கள் என்கிற எண்ணமே எல்லா நாட்டவருக்கும் உண்டு. அதுதான் கபிலுக்கு முதல் டெஸ்ட் போட்டி. கபில் பாகிஸ்தானின் சாதிக் முகமதுக்கு பந்து வீசப்போனார். முதல் பந்தே இந்தியர் ஒருவர் அதுவரை வீசிய மிகவேகமான பவுன்சராக எகிறியது. உலகம் நிமிர்ந்து உட்கார்ந்தது அப்பொழுது தான்.
முந்தைய இரண்டு உலகக்கோப்பையை டெஸ்ட் போல ஆடிவிட்டு வந்திருந்தது இந்திய அணி. வெற்றி என்பதை சுவைத்ததே இல்லை என்கிற சூழலில் தான் உலகக்கொப்பைக்குள் நுழைந்தது அணி. கபில் தேவ் கூட்டு முயற்சியை தொடர்ந்து சாதித்தார். இறுதிப்போட்டியில் கம்மியான ஸ்கோர் அடித்ததும் ,"அடித்திருப்பது அருமையான ஸ்கோர். பந்து உங்களைத்தேடி வரக்கூடாது. பந்தை தேடி நீங்கள் போங்கள். கோப்பையோடு டெல்லி போகிறோம் நாம் !" என்று சொல்லி அடித்தார்.
இந்திய அணியினர் ஒரு நாளையும் டெஸ்ட் போல ஆடிக்கொண்டு இருந்த காலம் அது. அணிக்குள் ஒரு வேகத்தை புகுத்தியது கபில் தான் ! உலகக்கோப்பையின் முதல் போட்டியில் உலக சாம்பியன் மேற்கிந்திய தீவுகள் அணியை புரட்டிப்போட்ட அந்த எனர்ஜியை கடைசி வரை அணியை விட்டுப்போகாமல் பார்த்துக்கொண்டார் அவர்.
"நாம் எதற்கும் லாயக்கில்லை என்பது எல்லாரின் கணிப்பும் ! நம்மால் முடிந்ததை செய்வோம் ; போராடிவிட்டுப்போவோம் !" என்பதே அவர் தந்த மந்திரம்
உலககோப்பையில் ஜிம்பாப்வே அணியுடன் போட்டி. வென்றால் மட்டுமே அரையிறுதி போகமுடியும் அணி என்கிற சூழல். 17/5 என்று அணி தடுமாறிக்கொண்டு இருந்தது. வந்தார் கபில். அடித்து ஆடினார். 17/5 175 என்கிற அவரின் ஸ்கோர் ஆனது. வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள அந்த ஒரு கோடு உங்கள் மீதான சமரசமில்லா நம்பிக்கை
இங்கிலாந்து அணியுட பாலோ ஆனை தவிர்க்கப்போராடி கொண்டிருந்தது இந்திய அணி. ஆல் அவுட் எப்பொழுது வேண்டுமானாலும் ஆகலாம் என்கிற சூழல். எட்டி ஹெம்மிங்க்ஸ் பந்து வீச வந்தார். சுழன்று அடித்தார் கபில்.
அதிகமில்லை-தொடர்ந்து டெஸ்ட் போட்டியில் நான்கு சிக்ஸர்கள். இந்தியா தப்பித்தது
கிரிக்கெட் உலகின் ராட்சசன் விவியன் ரிச்சர்ட்ஸ் உலகக்கோப்பையை இந்தியாவிடம் இருந்து பறித்துக்கொண்டு போகிற மாதிரி ஆடிக்கொண்டு இருந்தார். மதன் லால் வீசிய பவுன்சரை தூக்கி அடித்தார். அது எங்கோ போய்க்கொண்டு இருந்தது. "கபில் மோசமான பந்தை வீசிவிட்டேன். விட்டுவிடு !" என்று மதன் லால் கத்திக்கொண்டே இருந்தார். கபில் பின்னோக்கி ஓடிக்கொண்டே அந்த பந்தை துரத்தினார். அந்த கேட்ச் இந்திய அணிக்கு கோப்பையை வென்று
தந்தது.
கபிலின் இன்ஸ்விங் யார்க்கர் வெகு பிரபலம். கடைசி வரிசை பேட்ஸ்மன்களை அதைக்கொண்டு காலி செய்தவர் அவர். அவரிடம் இதைப்பற்றி கேட்கப்பட்ட பொழுது "கடவுள் எனக்கு அவுட்ஸ்விங்கர் தந்தார். நான் மிச்சத்தை
வளர்த்துக்கொண்டேன் !". அதே போல பந்துவீச்சாளராக தொடங்கி ஆல் ரவுண்டரானதும் ஆட்டத்தின் மீதான காதலை கூர்தீட்டிக்கொண்டதால் தான்.
Text Widget
Ads300x250
உலக கோப்பையை பெற்று தந்த கபில் தேவ் பிறந்த தினம் இன்று!
Posted by Unknown |  at 11:21 AM
About the Author
Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
-
அரைநிர்வாணமக ஓடும் கார்த்திகா பாரதிராஜாவின் அன்னக்கொடி படத்தில் (வீடியோ)
-
மும்பை சிவப்பு விளக்கு பகுதியிலிருந்து அமெரிக்காவிற்கு பட்டம் படிக்க சென்ற பெண்(வீடியோ இணைப்பு)
-
உலக கோப்பையை பெற்று தந்த கபில் தேவ் பிறந்த தினம் இன்று!
-
பெண்ணின் முத்தத்திற்கு இம்புட்டு போட்டியா?.....
-
தெலுங்கில் நடிகை மீனா நடித்த படம் தமிழில் வருகிறது
-
கவர்ச்சி காட்டுவதில் ஹன்சிகா, அனுஷ்கா இருவருக்குமிடையில் போட்டி
-
நடிகை கனகாவுக்கு கேரள ஆஸ்பத்திரியில் சிகிச்சை: புற்றுநோய் பாதிப்பா?
-
விமானத்தை கண்டுபிடிக்க சூனியக்காரரின் உதவியை நாடியது மலேசியா
-
மாயமான விமானமா? செயற்கைகோள் படங்களை வெளியிட்டது சீனா
-
T20 தரவரிசை: முதலிடத்தில் இலங்கை, இரண்டாமிடத்தில் இந்தியா!
Popular Posts
Blogger template. Proudly Powered by Blogger.