புரிந்துணர்வு ஒப்பந்தம் முறிவுக்குப்பின்னரான காலப்பகுதியில் நடைபெற்ற
இறப்புகள், இழப்புகள் தொடர்பில், இன்றுவரை சரியான புள்ளிவிவர அறிக்கைகள்
இடப்படவில்லை என வட மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர்
வைத்தியகலாநிதி சி. சிவமோகன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர்
போட்டியில் விருந்தினராக பங்கேற்று உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
தமிழர் தாயக பிரதேசங்களான வடக்கு கிழக்கு பிரதேசங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னரான காலப்பகுதியில் 9 இலட்சம் சிறுவர்கள் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததாக சர்வதேச தொண்டு நிறுவனமான யுனிசெப், தனது சுயாதீன புள்ளி விவர தகவல் சேகரிப்பில் அறிக்கையிட்டுள்ளது.
போரினால் ஏற்பட்ட உணவு தட்டுப்பாடு, போசாக்கின்மை, சுகாதார சீர்கேடுகள், நேரடி காயங்கள், கண்ணி வெடிப்புகள் போன்ற பாதிப்புகளினால், வன்னி பிராந்தியம் மற்றும் யாழ்ப்பாணத்தில் இறப்பு பிறப்பு வீதம் (ஐகெயவெ ஆழசவயடவைல சுயவந) ஆயிரம் பிறப்புகளுக்கு இறப்பு வீதம் 41 ஆகவும், சமநேரத்தில் இலங்கை முழுவதும் 23 ஆகவும், தென் இலங்கையில் 14 ஆகவும் பதிவாகியிருந்தன.
இந்த பதிவுகளிலிருந்து, சிங்கள ஆட்சியாளர்களால் எமது நிலத்தின் மீது, தமிழ் இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட போர் மற்றும் வன்முறைகளினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர்கள் என்ற உண்மை புலனாவதோடு, இந்த போரால் தமிழர் தாயக பிரதேசங்களே மோசமாக சிதைக்கப்பட்டன என்பதும் தெளிவாகிறது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் முறிவுக்குப்பின்னரான காலப்பகுதியில் நடைபெற்ற இறப்புகள், இழப்புகள் தொடர்பில், இன்றுவரை சரியான புள்ளிவிவர அறிக்கைகள் இடப்படவில்லை. இன்னோரன்ன பல விடயங்களில் பலரும் தமக்கு சாதகமாக, தமது தேவைக்கேற்ப எழுந்தாமானமாக புள்ளி விவரங்களை காட்டுகின்றனர். பயன்படுத்துகின்றனர். தொலைத்தொடர்பு, அத்தியாவசிய கல்வி, சத்துணவு, போக்குவரத்து, சுகாதார வசதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை போர் மோசமாக சீர்குலைத்திருந்ததால்; இறப்பு வீதங்களின் தாக்கங்கள், அவர்கள் சொல்வதை காட்டிலும் அதிகமாக இருக்கும் என்பதே உண்மை நிலையாகும் என தெரிவித்தார்.