தமிழக மீனவர்களை சிறைபிடிப்பதை இலங்கை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய மந்திரி வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இருநாட்டு மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி, சுமூகமான தீர்வை எட்டி ஒப்பந்தம் செய்வதற்கு இந்தியா மற்றும் தமிழக அரசுக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய–இலங்கை மீனவர்களின் நீண்டகால பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடந்த பேச்சுவார்த்தையின்போது இருநாட்டு மீனவர்களும் எந்தெந்த பகுதிகளில், எந்தெந்த காலங்களில் மீன்பிடி தொழில் செய்வது? என்பது குறித்து இருதரப்பினருக்கிடையே ஒரு சுமூகமான உடன்பாடு எட்டப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு முன்னதாக மீனவர்களையும், படகுகளையும் இலங்கை அரசு விடுவித்தது.
ஆனால் காரைக்கால் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டார்களே தவிர, அவர்களது 8 படகுகளை இலங்கை அரசு இன்னமும் விடுவிக்கவில்லை. இலங்கையில் உள்ள இந்திய தூதரக துணை அதிகாரி குமரனை தொடர்பு கொண்டு பேசி, காரைக்கால் மீனவர்களின் 8 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கை அரசு தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்வதும், படகுகளை சிறைபிடிப்பதும் கண்டனத்திற்குரியதாகும். இது சுமூகமான பேச்சுவார்த்தைக்கு நல்லதல்ல.
எனவே தமிழக மீனவர்களை சிறைபிடிப்பதை இலங்கை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். இருநாட்டு மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி, சுமூகமான தீர்வை எட்டி ஒப்பந்தம் செய்வதற்கு இந்தியா மற்றும் தமிழக அரசுக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்ட போரில், இலங்கை மனித உரிமைகளை மீறி உள்ளதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. மேலும், இதுதொடர்பாக ஐ.நா சபையில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் தொடர்பான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தபோது, அந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.
தற்பொழுது மீண்டும் கொண்டு வரப்பட உள்ள தீர்மானத்திற்கும் இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்று தமிழகத்தில் கோரிக்கை வலுத்து வருகிறது. இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் உரிய முடிவை எடுப்பார் எனவும் நாராயணசாமி மேலும் தெரிவித்துள்ளார்.