மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளராக நியமனம் பெற்று வந்திருக்கும் இலங்கை நிர்வாக சேவையின் சிரேஸ்ர அதிகாரியும் முன்னாள் நாவிதன்வெளி, திருக்கோவில் பிரதேச செயலாளருமான ஆன கோபாலரெட்ணம் அவர்கள் நேற்று (22.01.2014) அன்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பட்டதாரிப் பயிலுனர்களுடனான கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது பட்டதாரிப் பயிலுனர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், இதுவரை எந்தவிதமான திணைக்களம், அமைச்சுக்களின்கீழ் உள்வாங்கப்படாதவர்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன். பட்டதாரிப் பயிலுனர்களின் சம்பள விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.