ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை ஊழியர்கள் 16-01-2014 வியாழக்கிழமை காலை 08.00 மணியளவில் தமது 2006ம் ஆண்டு 06ம் மாத சுற்றறிக்கையை அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய அட்டைகளுடன் மழையினையும் பாராது தமது ஆர்ப்பாட்டத்தினை தொடங்கினர்.இவர்களுடைய கோரிக்கையில் சில தற்காலிக ஊழியரினை நிரந்தரமாக்கல் ,மேலதீக நேரக்கொடுப்பனவுகள் வழங்கள் ,சீருடை கொடுப்பனவை ஒரே தடவை வழங்குதல் ,அபாய கொடுப்பனவை அதிகரித்தல் போன்ற பல கோரிக்கைகளினை முன்வைத்து தமது ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்தனர்.